நேர்காணல்:"நில நடுக்கங்களை முன்கூட்டியே தடுக்க முடியும்"



"நில நடுக்கங்களை முன்கூட்டியே தடுக்க முடியும்"
நேர்காணல்: ஜெயன் பெருமாள், நிலநடுக்க ஆய்வாளர்
தமிழில்: .அன்பரசு


ஜெயன் பெருமாள் டேராடூனின் வாடியா புவியியல் ஆய்வை மையத்தில் பணிபுரியும் நிலநடுக்க ஆய்வாளர். இமாலயத்தில் ஏற்படும் புவியியல் மாறுதல்களை செயற்கைக்கோள், ஜிபிஎஸ் மூலம் கண்காணித்து வருகிறார். சென்னை பிரசிடென்சி கல்லூரியில் புவியியல் முதுகலைப்பட்டம் பெற்ற பெருமாள், முனைவர் பட்டம் பெற்றபின் 4 ஆண்டுகள் சுரங்க புவியியலாளராக பணியாற்றியவர், 2002 ஆம் ஆண்டிலிருந்து வாடியா ஆய்வுமையத்தில் பணி. தற்போது அமெரிக்க குழுக்களோடு இணைந்து ஆய்வுப்பணி செய்யும் பெருமாளோடு உரையாடினோம்.

நிலநடுக்க ஆய்வு என்பது எந்தவகையில் முக்கியமானது?

இமாலயத்தின் நிலத்தட்டு இந்தியாவில் மிக வேகமாக மாறும் தட்டுகள் என்பதால் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. மக்களின் அடர்த்தியும், விவசாயமும் இங்கு தொடர்ந்து அதிகரித்து வருவதும், திட்டமிடப்படாத கட்டிட அமைப்பும் நிலநடுக்க அபாயத்தை அதிகரிக்கின்றன. நிலத்தட்டுகளின் மாறுபாட்டை ஜிபிஎஸ் புள்ளிகள் மற்றும் சாட்டிலைட் படங்கள், டோபோகிராபிக் மூலம் கணித்து கண்டறிகிறோம்.

மிகப்பெரிய நிலநடுக்கத்தின் அளவு என்ன?

ரிக்டர் அளவு 8 க்கு மேலாக செல்வது மிகப்பெரிய நிலநடுக்கம் என்று குறிப்பிடுகிறார்கள். 7-7.9 ரிக்டர் அளவு என்பது கடுமையான நிலநடுக்கம் எனலாம்.

இமாலயத்தில் எவ்வளவு தூரத்திலிருந்து நிலநடுக்கம் தோன்றும்?

பொதுவாக 20 கி.மீ ஆழத்திலிருந்து தோன்றும். இமாலயத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பக்கத்தில் முக்கோண வடிவிலான முனைகள் இதனை தூண்டுகின்றன. வில் வடிவில் உள்ள இமாலயத்தின் வடிவத்தில் பிற இடங்கள் தட்டையாக இருக்கும். .கா. ஹேர்பின்

நிலநடுக்கம் நடந்த இடத்திலேயே மீண்டும் எதிர்காலத்தில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புண்டா?

நிச்சயமாக. இந்திய மற்றும் ஐரோப்பிய தட்டுகளின் நகர்வுகள் இதனை தீர்மானிக்கும்.

ஓரிடத்தில் நிலநடுக்கம் ஏற்படும் அதேயளவு ஆற்றல், அதையொட்டிய மற்றொரு பகுதியில் வெளிப்படுவதில்லையே அதற்கு என்ன காரணம்?

பொதுவாக நிலநடுக்கத்தில் பெருமளவு ஆற்றல் உடனே வெளிப்பட்டுவிடாது. அது குறிப்பிட்ட காரணங்களை சார்ந்துள்ளது உண்மை. நகரில் ஏற்படும் நிலநடுக்கம் அதை சார்ந்துள்ள அனைத்து பகுதிகளிலும் உடனே ஏற்படுவதில்லை. இதற்கு காரணம் என்ன என்பது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன

இந்தியாவில் கண்டத்திட்டுகள் நகர்வுகளால் நிலநடுக்கம் நேர்ந்தால் மக்கள் எவ்வளவு பேர் பாதிக்கப்படுவார்கள்?

காஷ்மீரில் 7.6 ரிக்டரில் நிலநடுக்கம் நிகழ்ந்தபோது மக்களின் இறப்பு 1 லட்சத்தை எட்டியது. நேபாளத்தின் கோர்கா பகுதியில் நடந்த 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தில் 9 ஆயிரம் மக்கள் இறந்துபோனார்கள். பிரம்ம புத்திரா கங்கை நீர்த்தடத்தில் நிலநடுக்கம் நிகழும்போது, 2005 இல் காஷ்மீரில் நடந்த நிலநடுக்க உயிரிழப்புகளை விட அதிகமாக இருக்கும்.
நன்றி: www.fountainink.in

தொகுப்பு: ராஜேஷ் பிரபுல்லா, கௌரி விஜய்