புத்தக விமர்சனம்!-தொகுப்பு கா.சி.வின்சென்ட்
அறிவியல் நூல்கள்!
RIPPLES IN SPACETIME
Einstein, Gravitational Waves,
and the Future of Astronomy
by Govert Schilling
340pp Belknap/Harvard Univ.
21 ஆம் நூற்றாண்டு
இயற்பியலின் வரலாறு இது. 2013 ஆம் ஆண்டு ஹிக்ஸ் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டதை
விட 2015 இல் ஈர்ப்புவிசை பற்றி கண்டறியப்பட்டது சுவாரசிய செய்தியாக
மாறியது. ஐன்ஸ்டீன் கணிப்பாக சொன்ன ஈர்ப்புவிசை பற்றிய ஆராய்ச்சி
இன்றுவரை ஆதாரம் தேடி தொடர்கிறது. புவிஈர்ப்பு விசை குறித்து
பல்வேறு டெலஸ்கோப் கண்டுபிடித்த தகவல்களை ஷில்லிங் சுவாரசியமாக சொல்லிச்செல்வது ரசனை.
பெருவெடிப்பு, ஐன்ஸ்டீன் தியரி என பல விஷயங்களையும்
இதனூடே விவரிப்பது அறிவியல் தேடல் உள்ளவர்களை ஈர்க்கும். அறிவியல்
விரும்பிகளுக்கான ஸ்பெஷல் நூல் இது.
ZAPPED
From Infrared to
X-rays, the Curious History of Invisible Light
by Bob Berman
Page count: 272pp
Publisher: Little,
Brown
நம்மைச்சுற்றிய
கதிர்வீச்சு பற்றி அறிவீர்களா? செல்போன் டவர், மைக்ரோவேவ்
ஓவன், சிடிஸ்கேன் ஆகியவை அனைத்தும் நாமறியாமல் கதிர்வீச்சை வெளிப்படுத்துபவைதான்.
இவை எக்ஸ்ட்ரீமாக உடலுக்குள் நுழைந்தால் நேராக சொர்க்கம்தான்.
அறவே இல்லையா, வாழ்வது சிரமம். எக்ஸ் கதிர்கள், புறஊதா கதிர்கள் உள்ளிட்டவற்றின் கண்டுபிடிப்பு
எப்படி உலகை மாற்றியது என்பதை ஜாலி தகவல்களோடு விவரிப்பது புதுசு. உலகை புதிய கோணத்தில் பார்க்க உதவும் நூல் இது.
நூல்வெளி!
How Language Began:
The Story of Humanity's Greatest Invention
Daniel Everett
PP 352, Rs.1,856
Profile Books Limited
உலகில் மொழி தோன்றியது
எப்போது என்ற கேள்விக்கு பதில் சொல்லும் நூல் இது. மொழியியல், உயிரியல் என பல்வேறு துறைகளிலிருந்து ஆதாரங்களை நேர்த்தியாக நமக்கு காட்டும்
ஆசிரியரின் பணி வியப்பு. முன்னோர்களின் கடல்வாணிப படகுகள் உள்ளிட்டவை
பிரமிப்பூட்டுகின்றன. பல்வேறு நிகழ்வுகளினூடே உபகதைகளையும் ஏராளம்
நெய்து நூலை சலிப்பின்றி வாசிக்கும்படி உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர்.
Improbable Destinies:
Fate, Chance, and the Future of Evolution
Jonathan B. Losos
PP384 Rs. 1,795
Penguin Publishing
Group
பரிணாம வளர்ச்சி
பற்றிய தெளிவான உண்மைகளை விரிவாக சொல்லும் நூல் இது.
பூமியின் தீராத
மர்மங்களை ஆராய்ச்சி செய்துவரும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களிடம் வாசகர்களை அழைத்து சென்று
நரி, எலி, பல்லி என பன்மை உயிரிகளின் பரிணாம வளர்ச்சியை துல்லியமாக
விளக்குகிறார் ஜொனாதன். நம்மையும் நம்மைச் சூழ்ந்துள்ள உயிரிகளையும்
புரிந்துகொள்ள உதவும் நூல் இது.
DNA
The Story of the
Genetic Revolution
by James D. Watson
with Andrew Berry & Kevin Davies
512pp Rs. 1,406
Publisher: Knopf
கடந்த பத்தாண்டுகளில்
மரபணுரீதியாக என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன எனும் வரலாற்றை விவரிக்கும் நூல் இது.
நோபல் பரிசு வென்ற
ஜேம்ஸ் டி வாட்ஸன் டிஎன்ஏ வடிவமைப்பின் மர்மங்களை ஆதாரப்பூர்வ விளக்கங்களின் மூலம்
விவரிக்கிறார்.
மரபணு எடிட்டிங், புற்றுநோய் ஆராய்ச்சி,
விவசாயத்திற்கான வேதிப்பொருட்கள், தன்னியல்பு மரபணுமாற்றம்
ஆகியவற்றை குறித்த பிராக்டிகலான விளக்கங்கள் இந்நூலின் சிறப்பு. மரபணு குறித்து நடைமுறை வழியில் முழுமையாக அறிய சிறந்த வழிகாட்டி இந்நூல்.
An Inconvenient
Sequel: Truth to Power: Your Action Handbook to Learn the Science, Find Your
Voice, and Help Solve the Climate Crisis
Al Gore
320 pages Rs. 1,662
Rodale
முன்னாள் துணை
அதிபரான அல்கோர்,
உலக வெப்பமயமாதலை பற்றி 200க்கும் மேற்பட்ட புகைப்படங்களுடன்,
முன்னணி ஆராய்ச்சியாளர்களின் தகவல்களோடு பதிப்பித்துள்ள முக்கியமான ஆராய்ச்சி
நூல் இது. வெள்ளம், ஜிகா வைரஸ் பிரச்னைகளை
சூழல் பிரச்னைகளோடு லிங்க் செய்வது புதியபாதையை காட்டுகிறது. அடுத்த தலைமுறையிடம் சூழல் குறித்து உரையாடவும் ஊக்கப்படுத்தும் நூலில் சீரியஸ்,
காமெடி இரண்டுமே உண்டு. நாம் செய்யவேண்டிய சூழல்செயல்பாடுகளுக்கு
ஊக்கம் கொடுக்கும், செயல்படத்தூண்டும் பசுமை நூல் இது.
SLOW MEDICINE
The Way to Healing
by Victoria Sweet
304pp,Rs.1,748
Riverhead
பல்வேறு ஆண்டுகளாக
மருத்துவராக பணியாற்றிய விக்டோரியா, உடலில் மாற்றம் விளைவிக்கும் ஸ்லோமெடிசினை
பரிந்துரைக்கிறார். மருந்தை கலைபோல ஒவ்வொருவரின் உடலிலுள்ள நோய்க்கு
ஏற்ப உருவாக்கிய அதனை தன் நோயாளிகளிடம் அறிமுகப்படுத்தி வெற்றிகண்ட வரலாற்றை பேசும்
நூல் இது.
VERAX: THE TRUE
HISTORY OF WHISTLEBLOWERS, DRONE WARFARE, AND MASS SURVEILLANCE
by Pratap Chatterjee,
illustrated by Khalil
Rs.1,116 240pp
Metropolitan/Henry
Holt
அமெரிக்க ராணுவம்
சாதாரண மக்களை தனது ட்ரோன் தாக்குதல்கள் மூலம் எப்படி கொல்கிறது என்பதை கிராபிக் வடிவில்
விளக்கும் நூல் இது.
சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளரான பிரதாப் சட்டர்ஜியின் எழுத்தில் ஓவியர்
காலில் ஓவியத்தில் உலக மக்களை அரச பயங்கரவாதத்திலிருந்து அலர்ட் செய்து காப்பாற்றும்
அசான்ஞ்சே, ஸ்னோடன் ஆகியோர்களைப் பற்றியும் இதில் குறிப்பிட்டுள்ளார்
ஆசிரியர். நவீன தொழில்நுட்பத்தை சாதாரண மக்களுக்கு எதிரான அரசு
எப்படி பயன்படுத்துகிறது என விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது இந்நூல்.
A NEW MAP OF WONDERS
A Journey in Search
of Modern Marvels
by Caspar Henderson
368pp, Rs.1,487
Univ. of Chicago
இங்கிலாந்து எழுத்தாளர்
ஹெண்டர்ஸன் உலகிலேயே மிகவும் சிக்கலான பொருள் மனிதர்களின் மூளை என்று கூறி, நமக்கு
காட்சி வழியாக பொருட்களை உணர்ந்துகொள்வதை அற்புதமாக விளக்கியுள்ளார். இயற்பியல்,உயிரியல், விஞ்ஞான அறிவியல்
என அனைத்தையும் கலந்து எதிர்காலத்தில் மனிதர்கள் எப்படி ஒரு விஷயத்தை பொருளை உள்வாங்குவார்கள்
என்பதை சிறுசிறு பகுதியாக அழகாக எழுதியுள்ளார் ஹெண்டர்ஸன்.
THE ANIMALS AMONG US
How Pets Make Us
Human
by John Bradshaw
384pp, Rs.1,811
Basic
இங்கிலாந்து விலங்கு
வல்லுநர் ஜான் பிராட்ஷா,
நாய், பூனை ஆகியவற்றுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான
தொடர்பைப் பற்றி எழுதியுள்ள நூல் இது. நாய், பூனை மனிதர்களின் உளவியலில் ஏற்படுத்தும் சமநிலை மாற்றத்தை பற்றியும்,
பிற பெட் பிராணிகளை விட நாய்,பூனை எப்படி மனிதர்களுக்கு
நெருக்கமாக மாறின என்பதையும் சுவாரசியமாக விவரித்துள்ளார் ஆசிரியர்.
WHITEWASH
The Story of a Weed Killer, Cancer, and the Corruption of Science
by Carey Gillam
304pp,
Island Press
நமது மண்,காற்று ஏன் உணவுத்தட்டு வரை பரவிவிட்ட நச்சுக்களைப் பற்றி துல்லிய தகவல்களே
வொயிட்வாஷ். பொதுநலனை புறக்கணித்து வணிகத்திற்காக பொய்யான ஆய்வுத்தகவல்களை
வெளியிட்டு மக்களின் ஆரோக்கியத்தை காவு வாங்கும் பன்னாட்டு நிறுவனங்களைப் பற்றிய தகவல்கள்
அதிர்த்தி தருகின்றன. அரசும்,அதிகாரமும்
சேர்ந்து மக்களை எப்படி வணிகத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றன என்பதை ஆதாரப்பூர்வமாக
விளக்கும் நூல் இது.
THE RUNAWAY SPECIES
How Human Creativity
Remakes the World
by Anthony Brandt
& David Eagleman
300pp, Rs. 2,785
Catapult
அணில் தன் மரப்பொந்துக்கு
செல்ல ஏன் ஏணி கட்டவில்லை?
முதலைகள் ஏன் ஸ்பீடான படகுகளை கண்டுபிடிக்கவில்லை? என்பது போன்ற கேள்விகளுக்கு என்பது போன்ற கேள்விகளுக்கு விடைதேடி மனிதர்களின்
வளர்ச்சியை நமக்கு புரியவைக்கும் நூல் இது. கண்டுபிடிப்புகளுக்கான
மனநிலை எப்படி உருவாகிறது, மனிதனின் திறன் என்ன?மாறிவரும் உலகிற்கேற்ப எப்படி மனிதர்கள் மாறுகிறார்கள் என்பதை ஆசிரியர்கள்
அறிவியல் கலந்து விளக்கியுள்ள நூல் இது.
HELLFIRE BOYS
The Birth of the U.S. Chemical Warfare Service and the Race for the
World’s Deadliest Weapons
by Theo Emery
560pp,Rs.973
Little, Brown
1915 ஆம் ஆண்டு ஜெர்மனி முதலாம் உலகப்போரில் நச்சுவாயுத்தாக்குதலை
தொடங்கியது.
அதன்பின்னர் 1917 ஆம் ஆண்டில் அமெரிக்கா வேதிப்பொருட்களுக்கான
பிரிவை உருவாக்கி நச்சுகுண்டுகள்,அதிலிருந்து தப்பிக்க உடைகள்
ஆகியவற்றை தயாரித்தது. நச்சு ஆயுதங்களின் தயாரிப்பு, வளர்ச்சி ஆகியவற்றை பற்றி தியோ எமெரி பல்வேறு தகவல்களை இந்நூலில் விளக்குகிறார்.
THE TELESCOPE IN THE
ICE
Inventing a New
Astronomy at the South Pole
by Mark Bowen
432pp, Rs.1,247
St. Martin's
தென் துருவத்தில்
நியூட்ரினோ தொடர்பான ஆராய்ச்சியில் முனைப்பாக இறங்கியுள்ளவர்களைப் பற்றிய செய்திகளை
விளக்குகிறது இந்நூல்.
தென் துருவத்தில் நியூட்ரினோ குறித்து முதல்முறையாக ஆராய்ச்சி செய்ய
ஐஸ்க்யூப் ஆய்வகம் களமிறங்கியதை விவரிப்பதில் நூல் தொடங்கி, 2010 ஆம் ஆண்டு நியூட்ரினோ முதன்முதலில் கண்டறியப்பட்டு பின் அதனை கண்டறிவதற்கான
டிடெக்டர் உருவாக்குவது வரையில் ஆச்சரிய தகவல்களை எளிமையாக கூறிச்செல்வது இந்நூலின்
பிளஸ் பாய்ன்ட்.
நன்றி:முத்தாரம்