பாப்கார்ன் பிட்ஸ்! -விக்டர் காமெஸி




பிட்ஸ் எக்ஸ்பிரஸ்!


ரொம்ப யோசிப்பவர்களுக்கு பெரிய மூளை இருக்கவேண்டுமா? நீரில் ராஜாங்கம் நடத்தும் முதலைகளின் மூளை எடை 8.4 கி.கி. இதனோடு ஒப்பிட்டால் மனிதர்களுடைய மூளை எடை சராசரியாக 1.3 கி.கி.

ஜெல்லி மீன்களின் உடலில் இதயம், எலும்புகளை தேடினாலும் கிடைக்காது. 95% நீரினால் ஆனது இம்மீன்.

சுறாக்கள் வாரத்திற்கு ஒரு பல்லை இழக்கிறது ஏன் தெரியுமா? பல்லை இறுக்கமாக பிடிக்க அவற்றுக்கு ஈறுகள் கிடையாது. விழுந்தாலும் நோ பிராப்ளம், அடுத்தநாளே பல் முளைக்கத்தொடங்கிவிடும்.

விண்வெளிக்கு பறவைகளை கொண்டுசெல்லும் சிம்பிள் சூப்பர் பிளானை நாசா முயற்சித்து தோற்றுப்போனது. என்னாச்சு? பறவைகள் உணவை விழுங்க பூமியில் ஈர்ப்புவிசை இருக்கும். விண்வெளியில் என்ன செய்வது?

நரி தன் சகோதரர்களான நாய், ஓநாய்கள் போல ஏராளமான உறுப்பினர்களை கொண்டதல்லமுடிந்தவரை தனியாகவே வாழ விரும்பும் பிரைவசி விலங்கு நரி.  


 பிட்ஸ் பேங்க்!

ப்ளூ மற்றும் பிற லைட் நிற கண்களைக் கொண்டவர்கள் மதுவுக்கு அடிமையாக சான்ஸ் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

துருவக்கரடிகளின் தோலின் நிறம் தெரியுமா? உடனே கைதூக்கி வெள்ளை என்ற பதில் சொல்லக்கூடாது. அதன் தோலின் நிறம் கருப்பு.

ஜெஸிகா(Merchant of Venice 1596), ஒலிவியா(Twelfth Night' 1602),மிராண்டா(The Tempest' 1611) ஆகிய பெயர்களை உருவாக்கியவர் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர்.

உங்கள் வீட்டில் பழக்கப்பட்ட வாசனை தவிர்த்து புதிய வாசனை வந்தால் மூளை உஷார் அலர்ட் கொடுத்து உடலை தயார் செய்வதற்கு Olfactory adaptation என்று பெயர்.

ஐரோப்பிய சூப்பர் மார்க்கெட்டுகளில் அதிகம் திருடப்படும் பொருள் சீஸ்.  
one;mso-layout-grid-align:none;text-autospace:none'>நரி தன் சகோதரர்களான நாய், ஓநாய்கள் போல ஏராளமான உறுப்பினர்களை கொண்டதல்லமுடிந்தவரை தனியாகவே வாழ விரும்பும் பிரைவசி விலங்கு நரி.  

 2

இன்று எலக்ட்ரானிக் உலகை ஆளும் தென்கொரியாவின் சாம்சங், 1938 ஆம் ஆண்டு  அதன் நிறுவனர் Lee Byung-chull மூலம் தொடங்கப்பட்டபோது, உலர்ந்த மீன்கள், காய்கறிகள், நூடுல்ஸை விற்றது.

ஃபெருசியோ லம்போர்க்கினி சிறிய காரேஜை விரிவாக்கி டிராக்டர் நிறுவனத்தை முதலில் தொடங்கினார். பின்னர் ஏர்கண்டிஷனர்களை தயாரித்தவர், ஃபெராரி நிறுவனருடன் ஏற்பட்ட சண்டையால் லம்போர்க்கினி சொகுசு கார்களை தயாரித்து ஜெயித்தார்.

தீக்குச்சிகளை முதன்முதலில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளரான ஜான் வாக்கர், மக்கள் பயன்பெறுவதற்காக அதன் காப்புரிமைக்கு விண்ணப்பிக்க மறுத்துவிட்டார்.

ஸ்மைலிகளை உருவாக்கிய கண்டுபிடிப்பாளர் ஹார்வி பால், அதற்காக பெற்ற தொகை ரூ.2,626 


நாய், ஓநாய்கள் போல ஏராளமான உறுப்பினர்களை கொண்டதல்லமுடிந்தவரை தனியாகவே வாழ விரும்பும் பிரைவசி விலங்கு நரி.  

3

கோடைக்காலத்தில் ஈபிள் டவரின் உயரம் 15செ.மீ அதிகரிக்கிறது.

பொட்டாசியம், சோடியம், சீசியம், ரப்டியம்,லித்தியம் ஆகிய உலோகங்கள் நீருடன் சேரும்போது எலக்ட்ரான்  பரிமாற்றத்தால் கடுமையான வெடிபொருளாகின்றன.

மனிதர்களின் வயிற்றில் உருவாகும் ஹைட்ரோகுளோரிக் அமிலம், பிளேடுகளை அரித்து கரைக்கும் தன்மை கொண்டவை. pH அளவு 2-3.

1971 ஆம் ஆண்டு ரோமானிய மருத்துவரான Corneliu Giurgea என்பவரால் nootropics எனும் மூளையின் திறனை மேம்படுத்தும் மருந்துகள் உலகிற்கு அறிமுகமாயின. இன்று இதன் மார்க்கெட் மதிப்பு 2 பில்லியன் டாலர்கள்.

உலகில் சராசரியாக பிறக்கும் இரண்டாயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தை அரிதாக வாயில் பற்களுடன் பிறக்கிறது.

நன்றி:முத்தாரம்

பிரபலமான இடுகைகள்