துப்பு கிடைக்காத மர்மங்கள்!
துப்பு கிடைக்காத
மர்மங்கள்! - விக்டர் காமெஸி
பல்வேறு சம்பவங்களில்
குற்றவாளி பிடிபட்டால் சுபம் போட்டுவிடலாம். சம்பவங்கள் குழம்ப குருமாவாக இருந்தால்,
கேஸ் அப்படியே நீளும். அப்படிப்பட்ட வகையறாக்களில்
சிலவற்றை பார்ப்போம்.
ஆக்டோபஸ் வழக்கு!
ஆகஸ்ட் மாதம் 1991 ஆம்
ஆண்டு வெர்ஜீனியாவைச் சேர்ந்த ப்ரீலான்ஸ் எழுத்தாளரான டேனியல் காஸலாரோ, ஒருவரை சந்திக்கச்செல்வதாக வெளியே சென்றார். அடுத்தநாள்,
அவரது உடல் மார்ட்டின்ஸ்பர்க் நகரின் ஷெரட்டன் விடுதி பாத்டப்பில் கண்டெடுக்கப்பட்டது.
இறந்த டேனியலின் மணிக்கட்டு 12 முறை உடைக்கப்பட்டிருந்தது
மட்டுமே ப்ரூஃப். போலீஸ் இது தற்கொலை என்று சொல்லி அடுத்த டாஸ்குக்கு
கிளம்பிவிட்டது. அதேநேரம் டேனியல் எழுதி வந்த ஆக்டோபஸ் என்ற Inslaw
என்ற மென்பொருள் நிறுவன வழக்கில் தொடர்புடையவர்களைப் பற்றிய கட்டுரையையும்
காணோம். இதில் சில ப்ரோகிராம் கோடிங்குகளை மாற்றி, பலரையும் உளவு பார்க்க அமெரிக்க அரசு முயன்றது என்பது மைக்கேல் ரிகனோசியோடோ
என்பவரின் பரபரப்பு வாக்குமூலம். ரொனால்ட்ரீகன் பதவியேற்ற பின்பே(ஜன.201981) இவரின் ஆதாரங்கள் வெளியாயின. இவர் கொலை விவரங்கள் டைம், ஏபிசிநியூஸ் ஆகிய ஊடகங்களில்
வெளிவந்தும் தற்கொலை என்றே காவல்துறை இவ்வழக்கை கைவிட்டுவிட்டது.
அமேஸிங் பணத்திருட்டு!
லூமிஸ் நிறுவனத்தின்
சாக்ரமென்டோ டிப்போவிலிருந்து சான்பிரான்சிஸ்கோவுக்கு இரு செக்யூரிட்டிகளோடு ட்ரக்
ஒன்று கிளம்பியது.
இரண்டே நிறுத்தங்களைக் கொண்ட பயணம் அது. ட்ரக்
முழுக்க கரன்சிகள் நிறைக்கப்பட்டிருந்தன. என் கடமை எம்ஜிஆராக
வண்டி ஓட்டிய ட்ரைவரும், பாதுகாவலர்களும் சான்ஃபிரான்சிஸ்கோ சென்றபின்,
அலட்சியமாக கதவைத்திறந்தால், ஷாக். ட்ரக் எடையில் 113 கிலோ குறைந்திருந்தது, விளங்கச்சொன்னால், 2.3 மில்லியன் பணத்தை கணோம்.
கிளம்பிய டிப்போவில் கால்குலேஷன் போட்டு காத்திருந்த திருடர்கள்தான்
இதனை செய்திருக்க முடியும் என போலீசார் யூகித்தாலும், எப்படி
என்ற ஆச்சரியம் தீரவில்லை என்பதால் 1999 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த
கேஸூம் முடியவேயில்லை.
மர்ம எழுத்தாளன்
யார்?
அமெரிக்காவின்
ஓஹியோவிலுள்ள சர்கிலேவில்லே நகரத்தில் க்ரைம்கள் தொடங்கியது 1976 ஆம்
ஆண்டிலிருந்துதான். முதல் மிரட்டல் கடிதம், பள்ளி ட்ரைவரான மேரி கில்லெஸ்பிக்கு வந்தது. அவருக்கும்,
பள்ளி சூப்பிரிடெண்டுக்கும் தொடர்பிருப்பதாக கூறிய கடிதங்களில் மூன்றை
ரகசியமாக வைத்தார் மேரி. விஷயம் வெளியே தெரிந்த பின் கணவர் உறவுகளுக்குச்சொல்லி
பதில் கடிதம் எழுதியபின் மிரட்டல் கடிதங்கள் நின்றுபோனது. திடீரென
மேரியின் கணவர் ரோனுக்கு போன் வந்தது. "மர்ம எழுத்தாளரை
சந்திக்கவேண்டுமா?" என்று கேட்டு இடம் சொன்னது மர்மக்குரல்.
ஆனால் போகும்வழியிலேயே மரத்தில் கார் மோதி விபத்தாகி இறந்து கிடந்த ரோனின்
துப்பாக்கியில் ஒரு தோட்டாவைக் காணோம். மேரிக்கு கிடைத்த சிறிய
பிஸ்டலின் மூலம் மர்ம எழுத்தாளர் கணவரின் தம்பி பால் ஃப்ரெஷர் என்பதை போலீஸ் கையெழுத்து
மூலம் கண்டுபிடித்து, 20 ஆண்டுகள் தண்டனை வாங்கிக் கொடுத்தது. ஆனாலும் அதன்பின்னும்
கடிதங்கள் அந்நகர்வாசிகளுக்கு வருவது குறையவேயில்லை. குற்றவாளி
லேபிளில் ஒட்டப்பட்டே சிறை வாசத்தில் ப்ரெஷ்ஷர் இறந்துபோனார்.
தாந்த்ரீக கொலை
வழக்கு!
இங்கிலாந்தின்
வார்விக்ஷையர் பகுதியைச்சேர்ந்த 74 வயது பெருசு சார்லஸ் வால்டன். தாந்த்ரீக ஈடுபாடு அதிகம். 1945 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று
சார்லஸ் கொலை செய்யப்பட்டு விட்டார். கழுத்து அரிவாளால் வெட்டப்பட்டதோடு,
உடலில் பல இடங்களில் ஏகத்துக்கும் காயங்கள் இருந்தன. சார்லஸின் அறையில ்கிடைத்த
Folklore, Old Customs and Superstitions in Shakespeare Land(1929) என்ற புத்தகத்தில் சார்லஸ் வால்டன் என்பவர், 1885 ஆம்
ஆண்டு பேய்களை நேரில் பார்த்து பயந்து இறப்பார். சரியாக
60 ஆண்டு கழித்து மறுபடியும் அதே சம்பவம். இது மாந்த்ரீகர்களின் கைங்கர்யம் முடிவு கட்டிய போலீஸ்,
அதற்குமேல் கேஸில் முனைப்பு காட்டவில்லை.
தொகுப்பு: சக்ரவர்த்தி தினேஷ்