பிட்ஸ் செய்திகள்




இந்தியாவின் சுதேசி ஜிபிஎஸ்!

இந்தியா விரைவில் தனித்துவமான சுதேசி ஜிபிஎஸ் சாட்டிலைட் நாடு பெருமையை நெஞ்சில் தாங்கப்போகிறது. இஸ்‌ரோ IRNSS-1H எனும் புதிய சாட்டிலைட்டை விண்வெளியில் நிலைநிறுத்துவதற்கான கவுண்டிங்கை தொடங்கிவிட்டது.  


ஹரிகோட்டாவிலுள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட உள்ள இந்த செயற்கைக்கோள், முன்னர் ஏவி செயலிழந்த IRNSS-1A எனும் செயற்கைகோளுக்கு மாற்று. இதில் மூன்று துல்லிய அணுக்கடிகாரங்களும் உள்ளன. பிஎஸ்எல்வி-சி39 ராக்கெட் மூலம் 1,425 கி.கி எடையுள்ள செயற்கைக்கோள் செலுத்தப்படவிருக்கிறது.  சரி, எதற்கு இந்த சாட்டிலைட்? ரயில்வே, ஆய்வுப்பணிகளுக்கும், இடம் சார்ந்த பணிகளுக்கும் இவை மிகவும் பயன்படும். அதோடு பேரழிவு மேலாண்மை, வாகனங்களை கண்டறிவது உள்ளிட்ட ராணுவ பணிகளுக்கும் அவசியமான சேட்டிலைட் இது.இந்த சீரிஸில் 2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் அடுத்த சேட்டிலைட் ரிலீஸ்


ஆபீசில் தூங்க உதவும் கேப்சூல்!

ஒரு நிறுவனம் தன் பணியாளர்களுக்கு என்னென்ன வசதிகளை செய்து தரும்? பஸ் வசதி, கேன்ட்டீன், இன்க்ரிமென்ட், போனஸ் ஆகியவை இதில் அடங்கும். ஆனால் இனி சீனாவில் ஆபீசிலேயே தூங்குவதற்கான கேப்ஸ்சூல் வசதியை உருவாக்கியிருக்கிறார்கள்.

சீனாவின் பெய்ஜிங்கில் சீப்ரேட்டில் கிராண்டான வசதிகளோடு சந்தைக்கு வந்துள்ளது தூங்குவதற்கான கேப்ஸ்சூல். வீட்டில் கர்லான் பெட் இருக்கும்போது கேப்ஸ்சூலுக்கு என்ன அவசியம்? ஆபீசில் வரும் அசகாய தூக்கத்தை சமாளிக்கவே இந்த ஐடியா. ஷியாங்சூயி எனும் நிறுவனம் தயாரித்துள்ள கேப்ஸ்சூலில் அரைமணிநேரம் குட்டித்தூக்கத்தை கெட்டியாக போட்டுவிட்டு எனர்ஜி ஊற்றெடுக்க வேலையைப் பார்க்கலாம் என்கிறார்கள் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தினர். அரைமணிநேர க்யூட் தூக்கத்திற்கு கட்டணம் ரூ. 96. மயக்கம் என்ன சீனா? 


பிட்ஸ் எக்ஸ்பிரஸ்!

Pygmy Marmosets எனும் தென் அமெரிக்க குரங்கினம், தன் குட்டிகளுக்கு மொழியை சொல்லித்தருவது நாம் மொழியைக் கற்றுத்தரும் முறையை ஒத்தது.

தென்அமெரிக்காவின் ஆன்டிஸ் மலைத்தொடரை பூர்வீகமாக கொண்ட Chinchilla எனும் விலங்கு, அடர்த்தியான முடியைக்கொண்டுள்ளதால் இதில் ஒட்டுண்ணிகள் எதுவும் வாழ முடியாது. மேலும் அலர்ஜி ஏற்படுத்தாத இம்முடியில் உடைகள் தைக்கப்படுகின்றன.

குட்டி யானைகளுக்கு தும்பிக்கை, வாய், கால்கள் ஒத்திசைவு ஏற்பட ஆகும் காலம்,  9 மாதங்கள்.

முட்டையிட்டு பால் கொடுக்கும் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட Platypus விலங்கு, கால்களில் நச்சுத்தன்மை கொண்டது. இது மனிதர்களை கொல்லாது, ஆனால் கடும் வலி தரும்.

பயத்தில் அலறும் கருங்கரடிக்குட்டிகளின் ஒலியும், குழந்தைகளின் ஒலியும் ஒரே மாதிரி இருப்பதால் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.  

தொகுப்பு: விதேஷ் சக்ரவர்த்தி  

பிரபலமான இடுகைகள்