நூல் விமர்சனம் -சிவந்தமண்(கே.என்.சிவராமன்)
சிவந்தமண்
கே.என்.சிவராமன்
சூரியன் பதிப்பகம்
விலை ரூ.400
மக்கள் புரட்சி என்பதற்கு இந்தியாவில் 1857 சிப்பாய் கலகம் அடையாளம் காட்டுவது இந்திய வழக்கம். ஆனால் உண்மையான மக்கள் புரட்சியின் வெற்றி என்பதற்கு இன்றும் ரஷ்யாவையும் முதல் அதிபரான லெனினையும் அடையாளம் காட்ட முடியும். காம்ரேட் சிவராமன் மக்கள் புரட்சி எப்படி ஏற்பட்டது, அதற்கான காரணங்கள்,லெனின் வாழ்க்கை, சீனாவில் மக்கள் புரட்சி, மாவோவின் வாழ்க்கை ஆகியவற்றோடு கம்யூனிச கொள்கைகளையும் விளக்கமாக எழுதியுள்ள நூல் சிவந்தமண்.
ஏறத்தாழ 670 பக்கங்களில் ரஷ்யா,சீனா என மிகப்பெரும் தேசங்களான இருநாடுகளிலும் மக்கள் புரட்சி எப்படி ஏற்பட்டது, அதற்கான பின்புல காரணங்கள் ஆகியவற்றை துல்லியமாக விளக்கி வெற்றி்க்கொடி நாட்டியிருக்கிறார் ஆசிரியர். வெறும் உணர்ச்சிகரமான வாழ்க்கை என்பதோடு இடதுசாரிகளின் தத்துவங்களையும் பெட்டிச்செய்தியாகவே வாசகர்களுக்கு தந்திருப்பது ஆசிரியரின் தளராத தன்னம்பிக்கைக்கு சான்று.
இந்த தொடர் தினகரன் வசந்தம் இதழில் ஞாயிறுதோறும் தொடராக வந்தது என்பதை பலராலும் நம்பவே முடியாது. அந்தரங்கம்,நடிகைகளின் கிசுகிசு என்ற போட்டி பத்திரிகைகளின் இடத்தின் இடதுசாரி தத்துவத்தை விளக்கும் தொடரை எழுதுவது என்பது அசாதாரணம்தான்.
இந்தியாவில் பிஜேபி தொடர்ந்து பிரிவினை, அந்தரங்க தாக்குதல்,பசுக்களுக்கு பாதுகாப்பு என மக்களை சுரண்டி வரும் நிலையில் கம்ப்யூனிஸ்ட்டுகளின் வரலாற்றை வெகுஜன பத்திரிகையில் எழுதி அதனை நூலாக்கி வெளியிடுவது பெரும் சவால். அசாத்திய துணிச்சல் தேவை. ஆசிரியர் கே.என்.சிவராமன் அதனை திறம்பட சமாளித்து இந்தியாவை பொதுவுடைமை தத்துவத்தால் உழுவோம் நிச்சயமாக என நம்பிக்கை அளிப்பதற்காக அவரை சிறப்பாக பாராட்டலாம்; தவறில்லை.
-கோமாளிமேடை டீம்