கிரியேட்டிவிட்டியை அடையாளம் காண்பது எப்படி? - சில அறிவுறுத்தல்கள்....
புதுமைத்திறன் உலகம் கிரியேட்டிவிட்டியை உருவாக்கிட பிறருக்கு தெரியாத கலை வடிவம் ஏதும் கிடையாது என எழுத்தாளர் ரிக் ரூபின் கூறுகிறார். இவர் இதுபற்றி, தி கிரியேட்டிவ் ஆக்ட் – எ வே ஆஃப் பீயிங் என்ற நூலை எழுதியிருக்கிறார்.’’ நீங்கள் கிரியேட்டிவிட்டியை நாடகம் போல எடுத்துக்கொண்டு முன்னேறி செல்லுங்கள். நிஜ உலகைப் போலவே அனைத்து விஷயங்களையும் உருவாக்குங்கள். அது சிறியதாக அல்லது வினோதமாக கூட இருக்கலாம். புதிய பரிசோதனை முயற்சிகளை செய்து பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் உருவாக்கியதை காட்ட நினைத்தால் உலகில் அதை வெளியிடலாம்.’’ என்பது இவரது கருத்து. தனி பார்வை ‘’உங்களுக்கென தனி பார்வையை உருவாக்கிக்கொள்ளுங்கள்’’ என ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸ் கூறுகிறார். இவர் 50 திரைப்படங்களைப் பார்த்து அதன் வழியாக தனக்கான கிரியேட்டிவிட்டி பாதையை உருவாக்கிக்கொண்டார். தன்னை வழிநடத்திய திரைப்படங்களாக எ பியூட்டிஃபுல் மைண்ட் தொடங்கி 1917 என்ற திரைப்படங்கள் வரை குறிப்பிடுகிறார்.’’யாரையும் நகல் செய்யாதீர்கள்’’ என்றும் குறிப்பிட மறக்கவில்லை. ஆற்றலின் பிரதிபலிப்பு ‘’நான் திரைப்படங்களுக்கான நடிகர்களை அடைய