உங்கள் சிந்தனைப்படி வேலை செய்தால் ஜெயிக்கலாம்! - மிலி சாவேகர், இன்டீரியர்ஸ் பை மிலி

 










மிலி சாவேகர்

கிரியேட்டிவ் ஹெட், இன்டீரியர்ஸ் பை மிலி

2016இல் தான் சொந்த நிறுவனத்தை மிலி தொடங்கினார். அதற்கு முன்னரே மும்பையில் இருந்த ஏராளமான நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். வீடுகள், வில்லா, அலுவலகங்கள் என மிலியின் குழுவினர் அலங்கார வடிவமைப்பை செய்து வருகிறார்கள். அவரிடம் பேசினோம். 

இப்படி ஒரு வடிவமைப்பு நிறுவனம் தொடங்க ஆர்வம் பிறந்தது எப்படி?

வடிவமைப்பு பற்றிய ஆர்வம் சிறுவயது முதலே இருந்தது. நோட்டின் பக்கங்களில் எப்போதும் ஏதாவது டூடுல்களை வரைந்துகொண்டே இருப்பேன். வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது இந்தியாவில் வடிவமைப்பு சார்ந்த பற்றாக்குறை, தேக்கம் இருப்பதை உணர்ந்தேன். எனவே நான் மக்களுக்கு தேவையான அலங்கார தன்மையை உருவாக்கி வழங்க நினைத்தேன். 

என்னுடைய பாணியில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைப்பு பணிகளை ஏற்று செய்யத் தொடங்கினேன். அப்படித்தான் சொந்த நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறேன். 


உங்களுக்கான ரோல் மாடல் யார் என்று சொல்லுவீர்கள். 

ஒருவரை மட்டுமே கூறுவது கடினம். எனக்கு கெல்லி வியர்ஸ்ட்லெர் வடிவமைப்பு மிகவும் பிடிக்கும். பின்ட்ரெஸ்ட் உலகில் அவரது வடிவமைப்புகளை பார்த்தால் அசந்து போய்விடுவீர்கள். பார்த்தால் நிறங்களை வடிவமைப்புகளை அவர் கலந்து உருவாக்குவது ஆச்சரியத்தில் ஆழ்த்தும். கெல்லியின் வடிவமைப்புகளை பார்ப்பது எனக்கு பெரும் உற்சாகம் அளிக்கும் ஒன்று. 

தொழில்துறையில் நீங்கள்  கற்றுக்கொண்ட பாடம் என்ன?

வடிவமைப்பு தாண்டி நான் மக்களை எதிர்கொண்டு அவர்களை சமாளிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன். நான் ஏற்றுச்செய்யும் பணிகள் அனைத்துமே ஒவ்வொரு விஷயத்தை எனக்கு கற்றுக்கொடுக்கின்றன. வடிவமைப்பை சரியான நேர்த்தியுடன் வழங்க எப்போதும் நினைப்பேன். 

பெண் தொழில்முனைவோர்களுக்கு என்ன அறிவுரைகளை வழங்க நினைக்கிறீர்கள்?

உங்களது சிந்தனைப்படி வேலைகளை செய்யுங்கள். பொறுமையுடன் பணியாற்றுவது எப்போதுமே நல்ல விளைவுகளை முடிவை தரும். கிரியேட்டிவிட்டி சார்ந்திருந்தால் உங்களது படைப்பாக ஏதேனும் உருவாக்குங்கள். அன்றைய சந்தையின் டிரெண்டுகளை பின்பற்றாதீர்கள்.  புதுமையான கோணத்தில் பயணத்தில் நெடுங்காலம் கிரியேட்டிவிட்டியுடன் செயல்பட முடியும். 


ஃபெமினா 2021




https://interiorsbymili.com/


https://interiorsbymili.com/about.html

கருத்துகள்