இடுகைகள்

நேர்காணல்- சோமாலியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேர்காணல்: "சிறுவர்கள் மீது அரசு நிகழ்த்துவது உளவியல் அநீதி"

படம்
முத்தாரம் நேர்காணல் " சிறுவர்கள் மீது அரசு நிகழ்த்துவது உளவியல் அநீதி " லெடெடியா பேடர் , ஆராய்ச்சியாளர் . தமிழில் : ச . அன்பரசு சோமாலியாவில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான அல் - ஷபாப் , பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை கட்டாயப்படுத்தி தன் படையில் இணைத்து வருகிறது . தற்போது இரண்டு ஆண்டுகளாக சோமாலியா அரசுப்படை அல் - சபாப் ஆதரவாளர்களையும் வீரர்களையும் கைது செய்து வருகிறது . உண்மையில் அங்கு நடப்பது என்ன ? என உரையாடுகிறார் ஆப்பிரிக்க ஆராய்ச்சியாளரான லெடெடியா பேடர் . அல் - ஷபாப் குழந்தைகளை தன் படையில் சேர்ப்பது பற்றி கூறுங்கள் . அல் - ஷபாப் ஆயுதப்படை குழந்தைகள் பல்வேறு கவர்ச்சி வாக்குறுதிகளை அளித்து அல்லது வற்புறுத்தி தம் அணியில் சேர்த்து வருகின்றனர் . குரானிக் பள்ளிகளிலிருந்து பல்வேறு சிறுவர்களை துப்பாக்கி முனையில் கடத்தி வந்திருப்பது நான் அவர்களிடம் பேசியபோது தெரிய வந்தது . குரான் போட்டியில் வென்ற ஒரு சிறுவன் வேறுபள்ளியில் சேரவிருந்த நிலையில் அல் - ஷபாப் குழு , அவனை பயிற்சி முகாமுக்கு கடத்திவிட்டனர் . பின் பண்ட்லாந்து எனுமிடத்தில் சண்டையிடச்