இடுகைகள்

பசுமை புரட்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1980ஆம் ஆண்டில் முன்மாதிரி மாநிலம்... ஆனால் இப்போது? - பாதாளத்தில் பஞ்சாப்

படம்
  பஞ்சாப் மாநில வரைபடம் பஞ்சாப்பின் பிரச்னைகள் என்ன? பசுமை புரட்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டபோது அதன் பயனை பெருமளவில் பெற்ற மாநிலம், பஞ்சாப். 1960ஆம் ஆண்டு தொடங்கிய வேளாண்புரட்சி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, உணவு தானியங்களின் உற்பத்தியில் உபரி காட்டிய சிறப்பான மாநிலம். வளர்ந்து வந்த விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பேரளவிலான உணவு தானியங்களை உற்பத்தி செய்தது. இதன் மூலம் கிராமம், நகரம் என   இரண்டு பகுதிகளிலும் விவசாயிகளின் வருமானம் உயர்ந்தது. விவசாயம் மட்டுமல்லாது தொழில்துறையிலும் முக்கியமான மாநிலமாக உருமாறியது. வளர்ச்சியான பக்கம் என்றால் அதன் மறுபக்கம் இருளான பக்கம் இருக்கவேண்டுமே? அரிசி, கோதுமையை அதிகம் விளைவித்தவர்கள் நிலத்தடி நீரை அதிகம் செலவழித்தனர். இதன் காரணமாக, நிலத்தடி நீர் அளவு குறைந்துகொண்டே வந்தது. நிலத்திற்கு செலவிடும் உரச்செலவு கூடி விவசாயிகள் பயிர்களை வளர்க்க கடன் பெற தொடங்கினர். அதேசமயம் போதைப்பொருட்கள் விற்பனையும் மாநிலத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளத் தொடங்கினர். அதை ஆட்சியில் இருந்த அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை.