இடுகைகள்

விண்டோஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இலவச விண்டோஸ் மென்பொருட்கள்!

படம்
  இலவச மென்பொருள்  வினேரோ ட்வீக்கர் (winaero tweaker 1.4) இந்த மென்பொருள் விண்டோசிற்கானது. அதில் நிறுவி பயன்படுத்தும்போது பல்வேறு புதிய பயன்பாடுகளை செயல்படுத்த முடியும். உதாரணமாக தேவையில்லாத கோப்புகளை அழிப்பதோடு, பென் ட்ரைவ்களுக்கு கூட தனி ரீசைக்கிள் பின்னை உருவாக்கிக்கொள்ளலாம். இதனால் அந்த கோப்புகளை அழியாமல் காக்கலாம்.  வின்ஜெட் யூஐ 1.1 (WingetUI 1.1) விண்டோஸ் 10,11 இல் பயன்படுத்தும் புரோகிராம். ஏட் ஆர் ரிமூவ் புரோகிராம் இருக்குமல்லவா? அதேதான். புரோகிராம்களை சேர்த்து நீக்கலாம்.  நிறைய புரோகிராம்களை அப்டேட் செய்வது எளிது. இதில் உள்ள டிஸ்கவர் டேபை அழுத்தினால்,  பிரபலமான மென்பொருட்களை எளிதாக அடையாளம் காணலாம்.  ஃபாஸ்ட்ஸ்டோன் போட்டோ ரீசைசர் 4.4 (Faststone photo resizer) மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அப்டேட் ஆகியுள்ளது. இதில் கூகுளின் வெப்பி முறையிலிருந்து ஹெச்இஐசி முறைக்கு எளிதாக மாற்றலாம். இப்படி மாறிய படங்களை ஆப்பிள் கணினிகளில் பயன்படுத்தலாம். கோப்புகளை தேர்வு செய்து அவற்றை ஒரே கிளிக்கில் வேறு கோப்பு முறைக்கு மாற்றலாம்.  இந்த மென்பொருளும் விண்டோசிற்கானது தான்.  Computeractive

இலவச மென்பொருட்கள் - டெய்ல்ஸ் 5.0, எரேசர் ப்ரீ, க்யூ டையர்

படம்
  இலவச மென்பொருட்கள் பிரைவசி எரேசர் ப்ரீ 5.23 சி கிளீனர் பயன்டுத்தியிருப்பீர்கள். வேலைகள் எல்லாம் அதேபோலத்தான். வித்தியாசம் எளிமையான அதன் செயல்பாடுதான். கணினியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை அழிக்கிறது. ஹார்ட் டிஸ்கை தூய்மையாக வைக்கிறது. குக்கீகளை கூட எதை அழிக்கலாம் விட்டுவிடலாம் என்ற ஆப்சன்கள் இருக்கிறது. கூடுதலாக புரோகிராம் அன்இன்ஸ்டாலரும் உள்ளது. வேகமாக புரோகிராம்களை அன்இன்ஸ்டால் செய்கிறது. மற்றது பர்ஸ் கனமாக இருந்தால் காசு கொடுத்து மென்பொருள் வாங்கினால் கூடுதல் விஷயங்களைச் செய்யலாம்.   விண்டோஸ் 7, 8.1, 10, 11 வர்ஷன்களில் பயன்படுத்தலாம்.  க்யூ டையர் 10.73 ஃபைல் எக்ஸ்ப்ளோரர் பணிதான். முதலில் இயக்கியவுடன் இடியாப்பத்திற்குள் இட்லி, பொங்கல் இருப்பது போல தோன்றும். விரைவில் அந்த மயக்கம் களைந்து கணியம் சீனிவாசன் போல நுட்ப வல்லுவத்துவத்தை பெற முடியும். கொஞ்சம் நிதானம் தேவை. மற்றபடி பயன்படுத்தி புரிந்துவிட்டால் இந்த மென்பொருள் உங்களை வெகுவாக ஈர்க்கும்.  விண்டோசில் மட்டும் பயன்படுத்தும் மென்பொருள்தான் இதுவும்.  டெய்ல்ஸ் 5.0 எட்டு ஜி.பி இருக்கும் யூஎஸ்பியை அமேசானில் ஆர்டர் செய்து வாங்கினால் தான

மென்பொருள்களை விற்பனை செய்வதற்கான சந்தையை உருவாக்கிய முன்னோடி! - பில்கேட்ஸ் - சாப்ட்வேர் சுல்தான்

படம்
        பில்கேட்ஸ் சாப்ட்வேர் சுல்தான் என் சொக்கன் பில்கேட்ஸ் கிராப் இன்றுவரை உயரத்தில்தான் இருக்கிறது . இந்த நூலில் அவர் எப்படி உழைத்து ்வளர்ந்தார் , சாப்ட்வேர் துறையில் என்ன செய்தார் , அதற்கு என்ன வழிமுறைகளை கடைபிடித்தார் , அவர் மீதான புகார்கள் , ஒப்பந்தங்கள் , நட்பு , விண்டோஸின் வெற்றி , சர்ச்சைகள் , மென்பொருட்கள் விற்பனை , புகார்கள் , அதற்கான எதிர்வினைகள் , சந்தையில் அவர் ஏற்படுத்திய விளைவுகள் என பல்வேறு விஷயங்களையும் பாரபட்சமின்றி பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் . அனைவருக்கும் தனி கம்ப்யூட்டர் என்ற லட்சியத்தை முன்வைத்து பில்கேட்ஸ் விண்டோஸ் நிறுவனத்தை வளர்த்தெடுத்தார் . அந்த வழியில் அவர் சந்தித்த சவால்கள்ளளை தாண்டி வர தெளிவான வணிகத்திட்டம் அவருக்கு உதவியது . ஆரம்பத்தில் அவர் மென்பொருட்களை எழுதினாலும் பின்னாளில் அவர் முழுக்க மார்க்கெட்டிங் செய்து விண்டோஸ் பொருட்கைள விற்பனை செய்பவராகவே இருந்தார் . அவரது இளமைக்காலம் பற்றி படிப்பது சிறப்பாக உள்ளது . இனிமேல் பில்கேட்ஸ் என்று ஒருவர் வரமுடியாது . அவரின் காலம் முடிந்துவிட்டது . கணினி தொழில்நுட்ப உல

இலவச விண்டோஸ் மென்பொருட்கள் உங்களுக்காக....

படம்
இலவச மென்பொருட்கள்! வின்அப்டேட்ஸ் வியூ- winupdatesview விண்டோஸில் கிடைக்கும் அனைத்து அப்டேட்களையும் இந்த மென்பொருள் மூலம் கணினியில் தரவிறக்கிக் கொள்ளலாம். இல்லையெனில் விண்டோசில் அப்டேட்ஸ் மெனுவில் சென்று செட்டிங்குகளை மாற்ற வேண்டும். இந்த மென்பொருள், உங்களுக்கு நிறைய அப்டேட்ஸ்களை வழங்கும். எம்ஐ டெக் இன்போபார் 3 -mitech infobar3 இந்த மென்பொருள் உங்களது கணினியில் சிப், ராம் செயல்பாடு பற்றிய செயல்பாடுகளை தெரிந்துகொள்ளலாம். இதில் கேப்ஸ்லாக், ஸ்கோரல் லாக், நம்ஸ் லாக் பற்றி தகவல்களையும் அறியலாம். கூடுதலாக ராய்டர்ஸ் நிறுவன செய்திகளும் கிடைக்கிறது. பிக்ஸெலிட்டர் Pixelitor 4.2 ஜிம்ப் அளவுக்கு சிறப்பான மென்பொருள் அல்ல. ஆனால் படங்களை ஏராளமான பிரஷ்களை கொண்டு அழகுபடுத்த முடியும். படங்களுக்கு நிறைய எஃபக்டுகளை கொடுத்து அதனை சிறப்பான படமாக மாற்றலாம். நன்றி - கம்யூட்டர்ஆக்டிவ்

சிறந்த இலவச மென்பொருட்கள் 2020

படம்
நார்ட் லாக்கர் - Nordlocker இதில் விபிஎன் வசதியும் உண்டு. எனவே இலவச கணக்கில் 5 ஜிபி வரையில் தகவல்களை, ஆவணங்களாக சேமித்து வைத்துக்கொள்ளமுடியும். சிறப்பாக செயல்படுகிறது. இதன் கோகிரிப்ட் எனும் என்கிரிப்ஷன் வசதி சிறப்பாக உள்ளது. உங்களது தகவல்கள் நெருங்கிய நண்பர்கள் சிறந்து பார்க்கும்படி கூட செட்டிங் அமைத்துக்கொள்ளலாம். பீஃப்டெக்ஸ்  beeftext இமெயிலை கூட வெண்முரசு சைசுக்கு எழுதுபவர்களுக்கு இந்த இலவச மென்பொருள் உதவும். இதில் டைப் செய்பவர்களுக்கு உதவும் நிறைய விஷயங்கள் உள்ளன. அதனை நீங்கள் பயன்படுத்தும்போடு கற்றுக்கொள்வீர்கள். வேவ் எடிட்டர் அடாசிட்டியைப் போன்றதுதான். ஆனால் சிறப்பாக இயங்குகிறது. எம்பி3 பாடல்களுக்கான தொகுப்புகளுக்கு ஏற்றது. டாஸ்க் எக்ஸ்ப்ளோரர் விண்டோஸ் டாஸ்க் மேனேஜரின் பணியைத்தான் செய்கிறது. இதனை டெக் ஆட்கள் சிறப்பாக பயன்படுத்த முடியும். அந்தளவு விரிவான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. பயன்படுத்திப் பாருங்கள். நன்றி - வெப் யூசர் இதழ்