இடுகைகள்

பருப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரோபோட்டுகள், லென்சின் வடிவம், பேவாட்ச் குறைந்த நேர கொள்கை - மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு

படம்
            அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி ரோபோட்டுகள் என்றால் என்ன? 1920ஆம் ஆண்டு ரோபோட் என்ற சொல்லை காரெல் கெபெக்கின் நாடகம் வழியாக மக்கள் அறிந்துகொண்டனர். நாடகத்தின் பெயர் ஆர் யு ஆர். ரோபோட்டுகள் என்பவை எந்திரக்கருவிகள், குறிப்பிட்ட செயல்களை தொடர்ந்து செய்ய பயன்படுத்தப்படுகின்றன. கார் தொழிற்சாலையில் உள்ள ரோபோ கரம். வீட்டை சுத்தம் செய்யும் ரோபோ வேக்குவம் க்ளீனர்.ஆகியவற்றை உதாரணமாக கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் அதிகம் பயன்படுத்துகிற சொல்லாக மாறியுள்ளது. ஆண்ட்ராய்டின் மூலம் கிரேக்க மொழி. இதற்கு மனிதனைப் போல என்று அர்த்தம். பேவாட்ச் கொள்கை என்றால் என்ன? பேவாட்ச் படத்தில் பிரியங்கா சோப்ரா, இன்னும் வேறு பிகினி அழகன், அழகிகளைப் பார்த்து கட்டழகில் உலகை மறந்திருப்போம். அதில் முக்கியமான காட்சிகளில் ஒன்று, கடல் நீரில் மூழ்கியவர்களை வீரர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது... கடலில் மூழ்கியவர்களை குறைந்த நேரத்தில் ஓடிச்சென்று காப்பாற்ற வேண்டும். லைஃப் கார்டுகள் நேரடியாக நீரில் மூழ்கி செல்வதை விட படகுகள், அதற்கென உள்ள வண்டிகளை பயன்படுத்தி ஆபத்திலுள்ளவர்களை சென்றடைவார்கள். ந...

அசைவ - சைவ இந்தியாவின் சாப்பாட்டுக் கணக்கு!

படம்
                அசைவ - சைவ இந்தியாவின் சாப்பாட்டுக் கணக்கு! உலகில் சைவம், அசைவம் என்பதெல்லாம் வியாபாரத்திற்கு உண்டான சமாச்சாரங்கள். உணவைச் சாப்பிடும் மக்கள் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படுவது கிடையாது. பசிக்கு சாப்பிடும் உணவு கூட இன்று அரசியல்மயமாகி சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்படும் அளவில் உள்ளது. உண்மையில் இந்தியாவில் சைவம் சாப்பிடும் பழக்கம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். இங்கு தீவிர சைவம் என்றால் பருப்பு, காய்கறிகள், பழங்கள் மட்டும்தான் என்பதைக் குறிப்பிட்டுவிடுகிறோம். சிலர் சைவத்தில் பால், முட்டை இன்னும் பல பொருட்களை சேர்த்து அதற்காக விவாதம் செய்யவும் முயல்கிறார்கள். தீவிர சைவத்தில் பாலை சேர்க்க முடியாது. பால், விலங்கிடமிருந்து பெறும் பொருள். எனவே, அதை தீவிர சைவ பழக்கம் கொண்டவர்கள் பயன்படுத்தமுடியாது. ஆனால், அனுபவ அடிப்படையில் ஒருவர் பாலை தனது உணவில் சேர்த்துக்கொள்வது அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். தயிர், வெண்ணெய், நெய் ஆகிய பால் பொருட்களைப் பயன்படுத்தலாம் என்று மகாத்மா காந்தி எழுதியிருக்கிறார். அண்மையில் இந்திய மாநிலங்களில் கிராம...

இந்தியாவின் காய்கறிகள் மற்றும் வாசனைப்பொருட்கள் ஆச்சரியம் தருகின்றன! - அலைன் டுகாசி, சமையல் கலைஞர்

படம்
  அலைன் டுகாசி சமையல் கலைஞர் உலகளவில் மிச்செலின் ஸ்டார் பெறுவது கடினம். அலைன் இந்த வகையில் 17 ஸ்டார்களைப் பெற்றுள்ள சமையல் கலைஞர். தனது தொழில்முறை வாழ்க்கையில் 21 ஸ்டார்களைப் பெற்றுள்ளார். இப்போது சூழல் நிலைத்தன்மை கொண்ட  தாவர உணவுகளை சமைக்கும் செயல்பாடுகளை செய்துவருகிறார். குர்கானில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தில் இகோல் டுகாசி எனும் தனது வளாகத்தை உருவாக்குவதாக கூறியுள்ளார். அவரிடம் பேசினோம்.  இந்தியா சார்ந்து உங்களுக்கு பிடித்த உணவு வகை என்ன? இப்படி கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. பிரெஞ்சு உணவு வகைகளில் பிடித்த உணவு என்றாலும் கூட கூறமுடியாது. பிரெஞ்சு நாட்டில் நான் நீண்டகாலமாக வசித்தாலும இப்படித்தான் இதற்கு பதில் கூற முடியும். இந்தியாவில் எனக்கு பிடித்த விஷயம், மக்கள் பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள். அப்புறமாக பருப்புகள். இவற்றை எப்படி பயன்படுத்துவது சமைப்பது என ஓராண்டாக கற்று வருகிறேன்.  மிச்செலின் ஸ்டார்களைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் போராடி வருகிறீர்களா? எங்களது உணவகம் மூன்று மிச்செலின் ஸ்டார்களைப் பெற்றுள்ளது. நாங்கள் நடத்தும் உணவகம்...

குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜி! - பாதிப்புகளை எப்படி குறைப்பது?

படம்
இன்று குழந்தைகளுக்கு ஆறுமாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்கும் பழக்கம் பின்பற்றப்படுவதில்லை. கிராமம், நகரம் இரண்டிலும் அதிகரித்துள்ள பொருளாதார தேவை, குழந்தை வளர்ப்பையும் பாதித்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஆறுமாதங்களுக்கு உள்ளாக தாய்ப்பால் புகட்டுவதை தவிர்த்து திட  உணவுகளை தரத் தொடங்குகின்றனர். இதனால் குழந்தைகளின் உடல், மன வளர்ச்சியை பாதிக்கும் குறைபாடுகள், நோய்கள் ஏற்படுகின்றன. இதில் முக்கியமானது ஒவ்வாமை. இன்று பல்வேறு உணவுகளில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் காரணமாக ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்னை குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது. எக்சிமா என்பது இதில் முக்கியமான பாதிப்பு. இதனை குணப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த மட்டுமே முடியும். ஆங்கில மருத்துவமுறையில் ஆயின்மென்டுகள் மூலம் தீர்ப்பதாக கூறினாலும், அது இருக்கின்ற இடத்தில் அதனை உள்ளே அழுத்தி மறைப்பதே.. ஒவ்வாமை ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக இருப்பவை பால் பொருட்கள், வேர்க்கடலை, பாதாம் பருப்பு உள்ளிட்டவை. இவற்றை நேரடியாக எடுத்துக்கொண்டாலும் அல்லது உணவின் பகுதிப் பொருட்களாக இருந்தாலும் ஒவ்வாமை பா...

ஆரோக்கியம் பேணுவதற்கான சில டிப்ஸ்கள்!

படம்
முன்னே நீங்கள் பார்த்த, படித்த கட்டுரையின் தொடர்ச்சி இது. வாசியுங்கள். நன்றி. தோல் நோய் பாதிப்புகளை உங்களுக்கு மட்டுமல்ல, ஊருக்கே சொல்வது தோல்தான். குடல் பாதிப்பு முதல் புற்றுநோய் வரையில் தோலில் பாதிப்புகளை எளிதாக பார்க்க முடியும். எனவே வெயில் பாதிப்பைக் குறைக்கும் சன்ஸ்க்ரீன் க்ரீம்களை உடலில் பூசலாம். மிதவெப்பநாடான இந்தியாவில் லேக்டோ கேலமைன் அல்லது வாசலின் போன்ற பெட்ரோலியம் ஜெல்லியை பூசுங்கள். இதெல்லாம் எண்பது, தொண்ணூறு ரூபாய் போட்டு வாங்கும் முன்பு வீடுகளில் பாட்டிகளைப் பாருங்கள். தேங்காய் எண்ணெயை தலைக்குத் தேய்த்துவிட்டு மிஞ்சியதை கைக்கும் கால்களுக்கும் பூசுவார்கள். அந்த பாரம்பரியம்தான் இப்போது இன்டென்சிவ் கேர் வாசலினுக்கு மாறியுள்ளது. க்ரீம்களிலுள்ள வேதிப்பொருட்கள் தோலைப் பாதித்தால் நீங்கள் சாதாரண தேங்காய் எண்ணெய்க்கு மாறுவதே நல்லது. பருப்புகளைத் தின்னுங்கள் கொழுப்பு என்றால் அதைப்பற்றி பெண்களிடம்தானே பேசவேண்டும். அதாவது தோலிலுள்ள கொழுப்பு. பருப்பு வகைகளை எலிபோல கொறித்து தின்பது இருபாலினத்தவருக்குமே நல்லது. இதில் புரதம், விட்டமின்கள் ஆகிய சத்துகள் உண்டு. இப்ப...