ரோபோட்டுகள், லென்சின் வடிவம், பேவாட்ச் குறைந்த நேர கொள்கை - மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு
அறிவியல் பேச்சு
மிஸ்டர் ரோனி
ரோபோட்டுகள் என்றால் என்ன?
1920ஆம் ஆண்டு ரோபோட் என்ற சொல்லை காரெல் கெபெக்கின் நாடகம் வழியாக மக்கள் அறிந்துகொண்டனர். நாடகத்தின் பெயர் ஆர் யு ஆர்.
ரோபோட்டுகள் என்பவை எந்திரக்கருவிகள், குறிப்பிட்ட செயல்களை தொடர்ந்து செய்ய பயன்படுத்தப்படுகின்றன. கார் தொழிற்சாலையில் உள்ள ரோபோ கரம். வீட்டை சுத்தம் செய்யும் ரோபோ வேக்குவம் க்ளீனர்.ஆகியவற்றை உதாரணமாக கொள்ளலாம்.
ஆண்ட்ராய்ட் அதிகம் பயன்படுத்துகிற சொல்லாக மாறியுள்ளது. ஆண்ட்ராய்டின் மூலம் கிரேக்க மொழி. இதற்கு மனிதனைப் போல என்று அர்த்தம்.
பேவாட்ச் கொள்கை என்றால் என்ன?
பேவாட்ச் படத்தில் பிரியங்கா சோப்ரா, இன்னும் வேறு பிகினி அழகன், அழகிகளைப் பார்த்து கட்டழகில் உலகை மறந்திருப்போம். அதில் முக்கியமான காட்சிகளில் ஒன்று, கடல் நீரில் மூழ்கியவர்களை வீரர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது... கடலில் மூழ்கியவர்களை குறைந்த நேரத்தில் ஓடிச்சென்று காப்பாற்ற வேண்டும். லைஃப் கார்டுகள் நேரடியாக நீரில் மூழ்கி செல்வதை விட படகுகள், அதற்கென உள்ள வண்டிகளை பயன்படுத்தி ஆபத்திலுள்ளவர்களை சென்றடைவார்கள். நீர்ப்பரப்பை விட மணல் பரப்பை அதிகம் பயன்படுத்த முயல்வார்கள். நீரில் நீந்துவதை விட மணலில் ஓடுவது எளிது. பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிய உடனே அவர்களை கரைக்கு இழுத்து வருவார்கள். இதைத்தான் பேவாட்ச் கொள்கை என்று கூறுகிறார்கள். குறைந்த நேரம் என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.
அறிவியலில் ஒளி விலகலுக்கு இக்கொள்கை தொடர்புடையது.
லென்ஸ் வரலாறு தெரியுமா?
கி மு 700களில் லென்ஸ்கள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. ரோஜர் பாக்கோன், மூக்கு கண்ணாடியைக் கண்டுபிடித்தார். பதினேழாம் நூற்றாண்டில் தொலைநோக்கி, நுண்ணோக்கி பெருமளவில் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் இதில் எது முதலில் வந்தது என்று தெரியவில்லை.
லென்சின் வடிவம், பருப்பு வகைகளை அடிப்படையாக கொண்டது. 1267ஆம் ஆண்டு, ரோஜர் பேக்கான், ஓபஸ் மாஜூஸ் என்ற தனது நூலில் லென்சின் வடிவத்தை வரையறுத்து கூறியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக