சற்றும் பொருட்படுத்த தேவையில்லாத மனிதன் - இநூல் வெளியீடு
வறுமை என்பது நாட்டை எளிதாக பின்தங்கிய நிலைக்கு கொண்டு செல்லக்கூடியது. வறுமையை புனிதமாக கொண்டாடும் அவலத்தில் கூட மனிதர்களை தள்ளுகிறது. வறுமையை ஒழிக்க, வெளிநாட்டினருக்கு தெரியாமல் சேரியில் ஏழைகள் வாழும் பகுதியை மறைத்து துணி கட்டுவது, தடுப்புச் சுவர் எழுப்புவது, மைய நகருக்கு அப்பால் கொண்டுபோய் மறைத்து குடிவைப்பது ஆகியவற்றை வலதுசாரி மதவாத சீரிய சிந்தனையாளர்கள் சிலர் செய்துவருகிறார்கள். இதெல்லாம் ஏழைகளை முற்றாக அழித்து கூடவே வறுமையையும் ஒழித்துவிடலாம் என்று எண்ணுபவர்களின் குரூரக்கனவு. இந்த இடத்தில் சீனா, வேளாண்மையை மட்டும் நம்பியுள்ள மக்களை எப்படி கல்வி அறிவு கொடுத்து, தொழில் பயிற்சிகளை அளித்து உற்பத்தி துறைக்கு நகர்த்தியது என்பதைப் பற்றி இந்த நூல் கூறுகிறது.
இந்தப் பணியில், நாடெங்கும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். அன்றைய கட்சி உறுப்பினரான ஷி, நிங்டே கிராமத்திற்கு சென்று தங்கி வறுமை ஒழிப்பு பணிகளை மேற்கொண்டார். அதில் எதிர்கொண்ட பிரச்னைகள், மக்களின் கருத்துகள், அவர்களின் எதிர்காலம் மீதான ஆசை, வாழ்க்கை நிலை, வருமானம் என அனைத்தையும் தன்னளவில் புரிந்துகொள்ள முயன்றிருக்கிறார். சேகரித்த தகவல்களை கம்யூனிஸ்ட் மாநாட்டில் பேசி, தேவையான திட்டங்களை தீட்ட உதவியிருக்கிறார். வறுமை ஒழிப்பு பணியில் ஷி, தன்னை மட்டுமே முன்னிலை படுத்தவில்லை. ஒட்டுமொத்த பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என நூல் முழுவதும் வலியுறுத்தியவாறே இருக்கிறார். வாசகர்களுக்கு வாசிக்கு்ம்போது ஊக்கம் தரக்கூடிய நூல்.
சற்றும் பொருட்படுத்த தேவையில்லாத மனிதன் (sattrum porutpadutha thevaiyillatha manithan): வறுமை ஒழிப்பு அனுபவங்கள், உரைகள் (Tamil Edition) Kindle Edition
https://www.amazon.com/dp/B0DCJ5M8GG
எந்நாளும் நன்றிக்குரியவர்கள்
கணியம் சீனிவாசன்
பத்திரிகையாளர் கே என் சிவராமன்
கருத்துகள்
கருத்துரையிடுக