சைனீஸ் ரெஸ்டாரெண்ட் சிண்ட்ரோம் - மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு
நமக்கு ஐந்து உணர்வுநிலைகள் மட்டுமே உள்ளன?
அதைவிட அதிகமாக இருக்கலாம். பறவைகளால் பூமியின் மின்காந்த அலைகளை உணர முடியும். கடலில் உள்ள சுறாக்கள், தம் இரை உமிழும் மின் புலங்களை எளிதாக அறிந்துவிடுகின்றன. வௌவால் திசையறிய மீயொலிகளைப் பயன்படுத்துகின்றன. சில உயிரினங்களால் அக ஊதாக்கதிர்கள், புற ஊதாக்கதிர்களை எளிதாக அறிய முடிகிறது.
நாயைப் பொறுத்தவரை வாசனையை முகர்வதுதான் அதன் வாழ்க்கையே.அதில் தடுமாறும்போது அதனால் எதையும் கண்டறிய முடியாது.
மனிதர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஐந்து உணர்வு நிலைகளுக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஒரு இடத்திற்கு சென்றால், அந்த இடத்தைப் பற்றிய அறிவை ஐம்புலன்களும் நமக்கு அளிக்கின்றன. இந்த தகவல்களை ஒருங்கிணைத்து குறிப்பிட்ட முறையில் விஷயத்தைப் புரிந்துகொள்ளலாம். தடுப்பூசி போடு்ம்போது ஏற்படும் வலிக்கும், மிளகாயை சாப்பிட்ட பிறகு ஏற்படும் வலி உணர்வுக்கும் வேறுபாடு உண்டு.
சைனீஸ் ரெஸ்டாரெண்ட் சிண்ட்ரோம் என்றால் என்ன?
சீன உணவுகளை குறிப்பாக மோனோ சோடியம் குளுட்டமேட் என்ற வேதிப்பொருள் கலக்கப்பட்ட உணவுகளை கொலைப்பசியில் உள்ளே தள்ளும் ஆட்களுக்கு வரும் நோய் இது. இதன் விளைவாக தலைவலி, நெஞ்சுவலி, அதிகம் வியர்ப்பது ஆகிய அறிகுறிகள் ஏற்படும். பிளாசிபோ என்ற மாத்திரைக்கு எதிர்ப்பதமாக உள்ள நோசிபோ போல எம்எஸ்ஜி உணவுகள் செயல்பட்டு உடலைப் பாதிக்கிறது என்கிறார்கள் உணவு வல்லுநர்கள்.
தக்காளி, ஈஸ்ட் பொருட்கள் ஆகியவற்றில் குளுட்டமேட் இயற்கையாகவே உள்ளது. நமது உடலிலும் இந்த வேதிப்பொருள் இயற்கையாகவே உருவாகிறது. ஆனால், இதை சுவையை அதிகப்படுத்த அளவுக்கு மீறி பயன்படுத்தும்போது பிரச்னை உருவாகிறது. எம்எஸ்ஜி சேர்த்த உணவுகளை ஒருவர் சாப்பிடும்போது,பசி அதிகரிக்கும். உணவுப்பொருளின் ருசி கூடுதலாகும். குறிப்பாக குப்பை உணவுகளுக்கு குளுட்டமேட்டை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த சுவையை உமாமி என குறிப்பிடுகிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக