over tourism!?

 

 




 

 

சுற்றுலா வளர்வதை நிறைய நாடுகள் வரவேற்கின்றன. அதற்கென நிதியளித்து அதை ஊக்குவிக்கின்றன. ஆனால், இவ்விவகாரத்தில்  உள்நாட்டு மக்களின் கருத்துகளை அறிவதில்லை. அம்மக்களோ, வெளிநாட்டினரை வரவேற்காமல் இங்கு வராதீர்கள் என கூறி வருகிறார்கள். ஏதென்ஸ், ஸ்பெயின் நாட்டிலுள்ள உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் மீது தண்ணீர் துப்பாக்கி மூலம் தெளித்து இங்கு வராதீர்கள் என்று  சுற்றுலாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தினர். ஜப்பான் அரசு ப்யூஜி மலையைக் காக்க கம்பி வேலை அமைத்துள்ளது. சியோலில் சுற்றுலா தளங்களை பார்க்க குறிப்பிட்ட நேரம் தடை விதிக்கும் ஏற்பாட்டையும் கொரிய அரசு யோசித்து வருகிறது. கொரோனாவுக்குப் பிறகு, சுற்றுலா வணிகம் பழையபடி வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது.

1.5 பில்லியன் மக்கள் சுற்றுலாவுக்கு வந்து சென்றுள்ளதாக யுன் டூரிசம் என்ற அமைப்பு தகவல் கூறியுள்ளது. சுற்றுலாக கூட்டிச்செல்லும் நிறுவனங்களும் பழையபடி விளம்பரங்களை இணையத்தில் செய்யத் தொடங்கியுள்ளன. கிரீஸ், போர்ச்சுக்கலில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தந்து வருகிறார்கள். ஐரோப்பாவில் உள்ள பல்வேறு இடங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. அல்பேனியா, துருக்கி, சௌதி அரேபியா என அனைத்து நாடுகளும் சுற்றுலாவை ஊக்குவிக்க முயன்று வருகின்றன.

உலகளவில் சுற்றுலா, 3 சதவீத உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைக் கொண்டுள்ளது. இதில் கிடைக்கும் வருமானத்தை பெரும்பாலான நாடுகள் விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை. அல்பேனியா, சௌதி அரேபியா போன்ற நாடுகள், சுற்றுலாவில்தான் உயிர் கொண்டிருக்கின்றன. அல்பேனியாவின் இருபது சதவீத பொருளாதாரமே சுற்றுலாவை நம்பியுள்ளது. சுற்றுலாவின் இன்னொரு பக்கம் உள்ளது. அதை டச்சு நோய் என்கிறார்கள். சுற்றுலா வணிகம் அதிகரிக்கும்போது, நாட்டின் மற்றொரு துறை வீழ்ச்சி அடையும். இத்தாலியில் 2010-19 வரையிலான காலத்தில் சுற்றுலா விரிவடைந்தது. அதேகாலகட்டத்தில் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. பட்டப்படிப்பை முடித்தவர்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி இருந்தது. சுற்றுலா வணிகத்தின் வேலைவாய்ப்புக்காக மாணவர்கள் படிப்பை துறந்துவிட்டனர். கல்வி இல்லாத அவர்களால் பின்னாளில் நல்ல வேலைவாய்ப்பை எப்படி தேடிப்பெறமுடியும்? பரிசாரகராக உணவகத்தில் பணிபுரியும் நாற்பது வயதில் படிப்பை பற்றி யோசித்து என்ன செய்ய முடியும்?

அதீத சுற்றுலா பயணிகளால், சுற்றுலா தளம் மாசுபாடு அடைகிறது. உள்ளூர் வணிகர்கள் பொருட்களின் விலையை உயர்த்தி விற்கிறார்கள். இதன் விளைவாக, அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பிட்ட பருவத்தில் ஏற்படும் அதீத மக்கள் நெருக்கடி, மக்களை மனநிலை ரீதியாக பாதிக்கிறது. இதை எதிர்த்து சுற்றுலாவுக்கு எதிரான போராட்டங்களை போராட்டக்காரர்கள் செய்யத் தொடங்கியுள்ளனர். அரசு, வருமானத்தை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அதேசமயம் போராட்டங்கள் நிர்வாகத்திற்கு கெட்டப் பெயர் ஏற்படுவதையும் சீர் செய்ய நினைக்கிறது. எனவே, சில நாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் வரிகளை விதிக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக. மாலத்தீவு. இங்கு சுற்றுலா பயணிகளுக்கு பத்து சதவீத வரி உள்ளது.

தி எகனாமிஸ்ட்   


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்