இடுகைகள்

சேட்டன்பகத் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தை கடத்தப்பட அவளை மீட்கப் போராடும் தாயின் கதை! - 400 டேஸ் - சேட்டன் பகத்

படம்
  400 டேஸ்  சேட்டன் பகத் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் சியா அரோரா என்ற பதிமூன்று வயது சிறுமி கடத்தப்படுகிறாள். அவள் காணாமல் போய்விட அவளது குடும்பம் படும் துயரமும் அதை தீர்க்க சியாவின் அம்மா ஆலியா அரோரா எடுக்கும் முயற்சிகளும் தான்  கதை.  பெடோபில்லே என சொல்லுவார்கள். குழந்தைகளை கடத்தி அவர்களை வல்லுறவு செய்யும் மனிதர்கள்... அவர்களைப் பற்றியதுதான் கதை. இதனால் 400 டேஸ் என்ற ஆங்கில நூல் முக்கியத்துவம் பெறுகிறது.  இந்த நாவலிலும் சேட்டன் பகத்தின் யூஷூவலான அத்தனை அம்சங்களும் உண்டு. காதல், மோதல், செக்ஸ், நட்பு, (கணவன், மனைவிக்கு இடையிலான மோதல், குடும்ப பிரச்னை, உணவு ஆகியவை எல்லாம் புதியது).  கதையில் முக்கியப் பாத்திரங்கள் கேஷவ் ராஜ் புரோகித் , சௌரப் மகேஷ்வரி, ஆலியா அரோரா, மணிஷ் அரோரா, புரோகிதர் சாஸ்திரி, இன்ஸ்பெக்டர் சௌதாலா, சப் இன்ஸ்பெக்டர் வீரென், சியா அரோரா, குட்டி பாப்பா சுகானா அரோரா.  கேஷவ் ராஜ்புரோகித்தின் வாழ்க்கையைத் தான் சேட்டன் தொடக்கத்தில் மெதுவாகச் சொல்லுகிறார். குடிமைத்தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கும் வாலிபர். கூடவே வயது 30 என்பதால் கேஷவின் பெற்றோர், அவருக்கு கல்யாணம் பார்த்து வைக்க அலைபாய்

5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இந்தியா எட்டிப்பிடிக்க வழிகள்! - சேட்டன் பகத்

படம்
  ரேஷன்கார்டில் வழங்கும் இருபது பொங்கல் பொருட்களை வாங்க அடிதடி நடக்கும் நேரம். தடுப்பூசி சான்றிதழை காட்டினால்தான் பொருட்கள் கிடைக்கும் என அரசு மக்களை மிரட்டிக்கொண்டிருக்கிறது.  இதே நேரத்தில்தான் போரம் மால், எக்ஸ்பிரஸ் அவென்யூ என நாடு முழுக்க உள்ள பல்வேறு மால்களில் தடுப்பூசி சான்றிதழ்களை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். கூட்டமும் இரண்டு வருஷம் அடைச்சு வெச்சீங்களேடா என மால் முழுக்க சுற்றி வருகிறது. புத்தகங்களை படிக்க இல்லாமல் அடுக்கி வைக்க கூட வாங்குவார்கள் அல்லவா அதுபோல, குலாப் ஜாமூன், பஜ்ஜிமாவு மிக்ஸ் என மயிலை மாமா அள்ளிக்கொண்டு இருக்கிறார். உலகம் அழியப் போகிறதா இல்லை அடுத்த வைரஸ் வந்துவிட்டது. அதற்குள் எல்லாவற்றையும் செய்துவிடலாம் என மக்கள் நினைக்கிறார்கள். இதை அரசு லாபமாக பார்க்கிறது. அதாவது பொருளாதாரம் வளர்ந்துகொண்டிருக்கிறது ப்ரோ? வேலைக்கு போகிறார்களா அல்லது இந்தியாவை விட்டு தப்பி யோடுகிறார்களா என்று தெரியாதபடி கூட்டம் விமானங்களில் அள்ளுகிறது. அங்கேயும் ஃபுட்போர்டு அடிக்கும், ஸ்டேண்டிங்கில் நிற்கும் சீட்டுகள் விற்றால் கல்லா கட்டலாம் போல. ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்ததும் நடந

வேறுபாடுகளை மறப்போம்! - சேட்டன் பகத்

படம்
நான் குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை நினைத்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஏன் இப்போது திடீரென அந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கிறேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. காரணம், இந்துக்கள் எரித்துக்கொல்லப்பட்ட அடுத்தடுத்த நாட்களில் முஸ்லீம்கள் அதேபோல தாக்கி கொல்லப்பட்டார்கள். இதற்கான பழி இருதரப்பிலும் போடப்பட்டது. வசைமாரி தூற்றப்பட்டது. இன்றுவரையிலும் இதற்கான காரணம் இவர், அவர் என ஆட்காட்டி விரல்கள் மாற்றி மாற்றி காட்டப்பட்டு வருகிறது. இந்த சொற்களும் ஆவேசமும் எனக்கு உறுதிப்படுத்துவது நாம் ஒரே நிலப்பரப்பில் வாழ்ந்தாலும் ஏராளமான பிளவுகளைக் கொண்டு ஒற்றுமையாக இல்லை என்பதுதான். சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை நான் நிச்சயம் ஏற்பதில்லை. சில விஷமிகள் இன்று சாப்பிடும் உணவைப் பற்றிக்கூட சர்ச்சையாக்கி ஒருவரை தாக்கி கொல்லமுடிகிறது என்றால் வெறுப்பு எப்படி தீயாக பரவுகிறது பாருங்கள். எளிமையான மேடைப்பேச்சு இதனை கிளறி விட போதுமானது. அப்படியென்றால் நமது மனதில் இதுபற்றிய கருத்தும், அதற்கான பதிலடியும் தயாராகவே இருக்கிறது. கண்ணுக்கு கண் என்ற பழிக்குப்பழி வெறி நம்மை மதம் சார்

ஜனநாயகத்தில் சீர்த்திருத்தங்கள் சாத்தியம்தான்! - சேட்டன் பகத்

படம்
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜனநாயகத்தில் சீர்திருத்தங்கள்! முன்னால் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், ஜனநாயகத்தில் சீர்திருத்தங்கள் எளிதாக நடைபெறாது என்று கூறினார். அவர் அதை என்ன பொருளில் கூறினார் என்று தெரியவில்லை. ஆனால் அதற்கு என்ன காரணம் என யோசித்தால், இந்திய மக்களிடையே அரசு புதிய விஷயங்களை கொண்டு வரும்போது அதனை சந்தேகமாக பார்க்கிறார்கள். ஜிஎஸ்டி விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள். காங்கிரஸ் காலத்தில் உருவாக்கப்பட்ட வரி சீர்திருத்தம் அது. ஆனால் பாஜக காலத்தில் எந்த விழிப்புணர்வுமின்றி அமலானது. இன்றுவரையிலும் வரிவிகிதங்களைப் பற்றி மக்களுக்கும் புரியவில்லை. தொழிலதிபர்களுக்கும் எப்போது வரி கட்டவேண்டும் என்பதை ஆடிட்டர்கள் சொல்லும்போதுதான் புரிந்துகொள்கின்றனர். அரவிந்த் சுப்பிரமணியன், சீர்திருத்தங்கள் அமலாக அதிக காலம் எடுப்பதை கருத்தில் கொண்டு மேற்சொன்னது போல கூறியிருக்கலாம். அது உண்மைதான். இங்கு பல்வேறு சிந்தனை அமைப்புகள் உள்ளன. வரி சீர்திருத்தம் என்பது சரி, தவறு, பாதிப்பு என்ன என்பதை முன்னரே அடையாளம் காண இதுபோன்ற அமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அனைவரின் குரல

மோடியை ஏன் அனைவருக்கும் பிடிக்கிறது? - சேட்டன் பகத்

படம்
நாட்டில் எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள்? ஆனால் மோடி எதிர்மறையாகவே அதிகம் பேசப்பட்டிருக்கிறார். இன்றுவரையிலும் கூட அப்படித்தான். ஆனால் அவரைத்தான் வலிமையான தலைவர்களாக மக்கள் கருதி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஏன் அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, மன்மோகன் சிங், அத்வானி ஆகியோரை விட மோடி பெரிய தலைவராக இருக்கிறார்? தன்னை அவர் அப்படி உருவாக்கிக் கொண்டது முக்கியமானது. மன்மோகன் சிங்கை குறைத்து மதிப்பிட முடியாது. தாராளவாத சீர்திருத்தங்களை தொண்ணூறுகளில் அமல்படுத்திய நிதி அமைச்சர், முன்னாள் பிரதமராகவும் பணியாற்றியிருக்கிறார். தான் செய்யும் வேலைகளை செய்யப்போவதை எதற்கு என்று மக்கள் முன் சொற்பொழிவாற்றியது நினைவுக்கு வருகிறதா? அப்படி ஒரு காட்சி மன்மோகனுக்கே இருக்காது. ஏனெனில் அவர் இயல்பு அதல்ல. மோடி முந்தைய பிரதமரிடம் இல்லாத அம்சங்களை கொண்டிருப்பது இங்குதான். மோடி அவரது துறைசார் அமைச்சர்கள் பேசுவதற்கு முன்னர் இவரே அறிவிப்புகளை கூறிவிடுவார். எளிமையாக பேசுவார் என்பது முக்கியமானது. குறிப்பாக, குஜராத் முதல்வராக தன்னை நிரூபித்திருக்கிறார். அதேசமயம் இந்து மக்களின்  வாக்குகளைப் பெறுவதற்கான

மிட்டாய் தரும் தலைவர் வேண்டாம்! - சேட்டன் பகத்!

படம்
தேர்தல் வரும்போதுதான் பல அரசியல்கட்சிகள் நமக்கு மிட்டாய்கள் வழங்கின்றனவா, அல்லது அறிவை வளர்க்கும் புத்தகங்கள் வழங்குகின்றனவா என்று தெரியும். பல்வேறு கட்சிகளும் சாத்தியமோ இல்லையோ ஏராளமான கனவு லட்சியங்களை மக்களிடம் கூறுகின்றன. வெகுஜன ஈர்ப்புவாத பிரசாரங்களில் மக்களை கனவு காண வைக்கின்றனர். இவை சாத்தியமா என்று மக்களும் கேட்பதில்லை. அரசியல்வாதிகளும் அதனை மேற்கொண்டு ஜெயித்தபிறகு பேசுவதில்லை.  மக்களும் கனவு வாக்குறுதிகளை நம்புகின்றனர். அவை தற்காலிகமானவை என்று புரியாமல் அவற்றை கண்ணை மூடிக்கொண்டு  நம்புகின்றனர். இதன் விளைவு,  ஜனநாயகச் சீரழிவுகள் தொடர்கதையாகி வருகின்றன. இந்தியர்கள் கூட்டாக ஏன் வளரமுடியவில்லை. காரணம், அவர்களுடைய சாதி வெறி. பிறரை விட தன்னுடைய குழு, இனம் உயர்ந்தது என்ற எண்ணம். இதன் விளைவாக அவர்கள் தங்கள் சாதி, இனத்துக்குள்ளேயே திருமண உறவுகளை அமைக்கின்றனர். இது எப்படி இந்தியாவை வளர்ச்சி பெறச்செய்யும்? இது குழந்தைகளின் உடல், மன வளர்ச்சியை பெரிதும் முடக்குகிறது. அதோடு தனது மகள், மகன் இன்னொரு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்யக்கூடாது என்று நினைப்பவர்கள், எப்படி பிறருடன்

கற்ற இளைஞர்களை அவமதிக்காதீர்கள்! - சேட்டன் பகத்

படம்
அண்மையில் நான் ஓர் உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றேன். அங்கு எனக்கான ஆர்டரை நேர்த்தியாக உடையணிந்து ஆங்கிலத்தில் பேசிய இளைஞர் எடுத்தார். சுறுசுறுப்பாக வேலை செய்ததோடு, அங்கு தினசரி வருபவர்களிடம் இயல்பாக பேசினார். மறக்காமல் அவர்களின் ஆர்டர்களை எடுத்துக் கொண்டார். எனக்கு ஆச்சரியம். அவர் துல்லியமான ஆங்கில மொழியில் பேசியதுதான். இவ்வளவு மொழியறிவு கொண்டவர் இந்த உணவகத்தில் என்னதான் செய்கிறார்  என்று யோசித்தேன். பிறகு எனக்கான உணவை அளித்தபோது, அவரிடம் பேசினேன். அவரின் மாத சம்பளம் வெறும் 8 ஆயிரம் ரூபாய். இது அமெரிக்காவில் பகுதி நேரமாக பணிபுரிபவரின் ஊதியத்தை விட மிக குறைவு.  இந்தியா இன்னும் வளரும் நாடு என்ற பட்டியலில் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கப்போகிறதோ என்று எனக்கு வேதனையாக இருந்தது. துல்லியமாக ஆங்கிலம் பேசுபவருக்கு இந்தியாவில் இந்த வேலைதான் கிடைக்கும் என்றால், பள்ளியில் படிப்பெதற்கு? பட்டம் எதற்கு என்று எனக்கு மனதில் ஆவேசம் கரைபுரண்டது. எனக்கு அவர் கொடுத்த உணவு கூட கசந்துபோனது. சாப்பிடவே முடியவில்லை. சமாளித்து சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட்டேன். புன்னகையுடன் பில்லை மேசையில் வைத்

அரைகுறை படிப்பாளிகளின் ஆபத்து - சேட்டன் பகத்

படம்
பொதுவாக கல்வி தொடர்பான பேச்சுகளைப் பற்றி ஊடகங்களோ, நம் அரசியல்வாதிகளோ பேசுவது இல்லை. காரணம், அதனை உருவாக்கியதில் அவர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதாலா என்று தெரியவில்லை. அண்மையில் வெளியான ஆசர் அறிக்கை(ASER 2014) கல்வியில் உலகளவில் எப்படி பின்தங்கியிருக்கிறோம் என்பதை தெளிவாக காட்டுகிறது. இதில் மதிய உணவுத்திட்டம், சேர்க்கை எல்லாம் முந்தைய ஆண்டுகளை விட முன்னேறி இருக்கிறதுதான். ஆனால் கல்வியின் தரம் கூடியிருக்கிறதா? இல்லை என உதட்டைத்தான் பிதுக்க வேண்டியிருக்கிறது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு வகுத்தல் கணக்கு போடமுடியவில்லை. இதனை தனியார் பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவர் செய்கிறார். ஆனால் அரசுப்பள்ளி மாணவர் தடுமாறுகிறார். அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவரால் எளிமையான வாக்கியத்தை சரியாக உச்சரிக்க முடியவில்லை என்றால் நாம் பள்ளிச்சேர்க்கை பற்றி உச்சிமுகர்ந்து கொண்டாடி என்ன பயன்? காரணம் ஆசிரியர்களின் திறன் இன்மை. பள்ளிப்பாடமோ கடந்த காலத்தில் நிற்கிறது. இப்படி படித்து அரசு பெருமை கொண்டாடி வெளிவரும் மாணவர்களால் என்ன பிரயோஜனம்? வேலையில்லாமல் நாளை தெருவில் நின்

தனிநபரை விட தேசம் முக்கியம்! - சேட்டன் பகத்

படம்
அண்மையில் நான் இணையத்தில் சர்வே ஒன்றை கவனித்தேன். அதில் மோடி அவசரநிலையை அறிவிக்கிறார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் போல. எதற்கு? கருப்பு பணத்தைக் கட்டுக்குள் கொண்டுவரத்தான். அதை நீங்கள் ஆதரிப்பீர்களா என்று ஆய்வில் கேட்கப்பட்டிருந்தது. உடனே மோடியின் பக்தர்கள் முதற்கொண்டு ஜே ஜே என கருத்துகளைக் குவித்து 51 சதவீத ஆதரவை நொடிகளில் திரட்டி விட்டனர். மோடி ஒரு தேநீர் விற்பனையாளராக அலைந்து திரிந்து உழைத்து பிரதமராக வந்தவர். முதல்வராகவும் தன் திறமையை நிரூபித்தவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. ஆனால் நாட்டை விட மோடி என்ற தனிநபரின் புகழ் உயருவது நாட்டிற்கு நல்லதல்ல. அது சர்வாதிகாரத்தன்மையையே உருவாக்கும். சிலருக்கு நேரு பிடிக்கும், சிலருக்கு காந்தி, சிலருக்கு மோடி என விருப்பங்கள் பலவாக இருக்கும். நாம் அந்தந்த காலங்களில் அவரின் செயற்பாடுகளை நல்லவிதமாக உள்ளது பலரிடமும் விவாதித்திருப்போம். இந்த இடத்தில்தான் பல்வேறு கருத்துகளின் கூடலாக அதன் நல்லவை, அல்லவை தெரிய வரும். ஆனால் மோடி அமல்படுத்திய சட்டங்களை நீங்கள் வலைத்தளங்களில் விமர்சனம் செய்து அதன் யதார்த்த நிலைக்கு எடுத்துக்காட்டு

கல்வி முறையை அரசியலாக்காதீர்கள்! - சேட்டன்பகத்

படம்
இந்தியாவில் நடைமுறையில் உள்ள கல்வி முறையை கடுமையாக விமர்சித்து, பல்வேறு திரைப்படங்கள், கதைகள், வெப் சீரிஸ் கூட வெளியாகி விட்டன. நிச்சயம் கல்விமுறையில் பிரச்னைகள் இருக்கிறதுதான். அதனை சரிசெய்வது அவசியம். குறைகளை மட்டும் பேசாமல் அதனை தீர்வு செய்வதற்கான விஷயங்களைப் பற்றிப் பேசுவதும் முக்கியம். அண்மையில் கல்வி மசோதா 484 பக்கங்களில் வெளியாகியிருக்கிறது. இந்த விஷயத்திலும் மேற்சொன்ன பிரச்னைகள்தான் நிறைவேறின. நீண்ட மசோதாவில் தற்போது உள்ள கல்விப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வரைபடமும் இதில் உள்ளது. இதிலுள்ள மும்மொழிக் கொள்ளையை மட்டுமே எடுத்து பேசி பேசியதால், அதிலுள்ள முக்கியமான சிந்தனைகளை இன்று யாரும் பேசவில்லை. பிற விஷயங்களைப் பற்றியும் மக்கள் மறந்தே போனார்கள். மக்கள் முக்கியமாக இந்து, இந்துத்துவா, பாஜக ஆகிய விஷயங்களிலேயே நின்று விட்டார்கள். இது முட்டாள்தனமாக இல்லையா? இஸ்ரோவின் முன்னால் இயக்குநரான கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு உருவாக்கி கல்வி மசோதா இது. இதில் இந்தியாவை வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் திறன்களைக் கொண்டதாக மாணவர்களை உருவாக்கும் கல்வி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது