இடுகைகள்

தன்னார்வ அமைப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுனாமி பாதிப்பால் உருவான நன்செய் அமைப்பின் சூழல் பணி!

படம்
  2004ஆம் ஆண்டு. டிசம்பர் 26 அன்று நாகப்பட்டினம் கடற்புரத்தில் சுனாமி பேரழி ஏற்பட்டது. அதை இன்றுவரை தமிழக மக்கள் யாரும் மறக்கவில்லை. அந்தளவு இயற்கை தன் ஆற்றலை மனிதர்களின் கட்டுமானங்கள் மீது பதிவு செய்தது.  அப்போது ஜே செந்தில்குமாருக்கு வயது 18. வரலாறு படிப்பில் இளங்கலைப் பட்டதாரியாக இருந்தார். சுனாமி பாதிப்பை ஈடுகட்டும் செயல்களில் ஈடுபட்ட மனிதர்களோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.  பதினெட்டு ஆண்டுகள் ஆனாலும் பாதிப்பை இன்னும் செந்தில்குமார் மறக்கவில்லை. சூழலியல் பாதிப்பை சரிசெய்ய 2019ஆம் ஆண்டு நன்செய் என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு தேனி பகுதியில் பசுமையான சூழல் பரப்பை உருவாக்க உழைத்து வருகிறது.  2004 ஆம் ஆண்டு நடைபெற்ற இயற்கை பேரழிவுதான் எனக்கு சூழல் பற்றிய கவனத்தை ஏற்படுத்தியது. எனவே, நான் காலநிலை மாற்றம், வெள்ளம் இப்படி பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்களைத் தேடினேன் என்றார் செந்தில்.  நன்செய் அமைப்பின் முக்கியமான பணி, ஆணிகளைப் பிடுங்குவதுதான். அதாவது, மரத்தில் சுடர்மணி ஜட்டி, ஜான்சன் சூப்பர் மார்க்கெட், ஜியோ தள்ளுபடி ஆஃபர் என ஒட்டிவிட்டு செல்கிறார்கள் அல்லவா? இவற்றைப் பிடுங

கோவிட் -19 காலத்திலும் தானம் அளிப்பது குறையவில்லை, கூடியுள்ளது! - கிவ் இந்தியா சர்வே

படம்
            கோவிட் -19 பாதிப்பு மக்களை பிறருக்கு தானம் கொடுக்க ஊக்கம் கொடுத்துள்ளதை பெங்களூருவைச் சேர்ந்த கிவ் இந்தியா அமைப்பு தனது சர்வே மூலம் அறிந்துள்ளது.இப்போது அதற்கான டேட்டாவைப் பார்ப்போம். பிறருக்கு பொருட்களை வழ ங்குவதை கோவிட் 19 சூழல் ஊக்கப்படுத்தியுள்ளது என 85 சதவீதம் பேர் கூறியுள்ளனர். கோவிட் -19 இல்லாத விவகாரங்களுக்கு நிதியுதவி அளிக்கிறீர்களா என்று கேட்டபோது, 72 சதவீதம் பேர் அதற்கு ஆம் என்று பதில் அளித்துள்ளனர். 31 சதவீதம் பேர் முன்னர் தாங்கள் நிதியளித்த பல்வேறு விவகாரங்களுக்கு தொடர்ச்சியாக நிதியுதவியை நிறுத்தாமல் செய்து வருகின்றனர். இதில் 24 சதவீத மக்கள் தாங்கள் செய்துவந்த விவகாரங்களுக்கான உதவியை அதிகரித்துள்ளனர். 44 சதவீதம் பேர் தாங்கள் சமூக விஷயங்களுக்கு உதவுவது பற்றிய தெளிவான கருத்துடன் உள்ளனர். 74 சதவீதம் பேர் வெளிப்படையான தன்மையுடன் பணம் செலவிடப்படுவது தானம் அளிப்பதை ஊக்குவிக்கிறது என்று கூறியுள்ளனர். 49 சதவீதம் பேர் தாங்கள் சமூகத்திற்கு திரும்ப உதவிசெய்து நன்றிக்கடனை தீர்க்க நினைக்கிறார்கள் பிஸினஸ் ஸ்டாண்ர்டு கீதாஞ்சலி கிருஷ்ணா