டைம் செல்வாக்கு பெற்றவர்கள் 2025 - உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சாதித்த மருத்துவர்
டைம் செல்வாக்கு பெற்றவர்கள் 2025 லியாங்க் வென்ஃபெங் டீப் சீக் ஏஐ நிறுவன இயக்குநர் எல்லோரும் சாட்ஜிபிடி, கூகுள் ஜெமினி, பர்பிளக்சிட்டி என பேசிக்கொண்டிருக்கும்போது இணையத்திற்கு வந்த ஏஐ நிறுவனம். டீப்சிக் அமெரிக்க செயற்கை நுண்ணறிவு மாடல்களை விட குறைவானசெலவில் உருவாக்கப்பட்டது. இன்று ஆப்பிளின் ஆப்களில் அதிகம் தரவிறக்கம் செய்யப்படும் ஆப்களில் ஒன்றாக முதலிடத்தில் உள்ளது. சாட்ஜிபிடி போல பயன்படுத்த கட்டணம் ஏதும் கிடையாது. இலவசம். லியாங்க்கிற்கு நாற்பது வயதாகிறது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலுள்ள சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த டெக் ஆளுமை. ஸெஜியாங்க் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்தவர். சீனாவின் நம்பிக்கைக்குரிய ஏஐயாக நம்பப்படுவது, டீப் சீக்தான். நாங்கள் இப்போதைக்கு லாபம் சம்பாதிக்க ஆசைப்படவில்லை என சொல்லி ஆட்டத்தை தொடங்கியுள்ளார். சீனா முன்னேறிவிடுமோ என்ற பயத்தில் அமெரிக்கா கணினி, செயற்கை நுண்ணறிவு சிப்களை வாங்குவதற்கான தடைகளை விதித்துள்ளது. இப்படியான பாதகமான சூழ்நிலையிலும் கூட டீப் சீக் போன்ற சிறந்த ஏஐ ஒன்றை சீனா உருவாக்கி சாதித்துள்ளது. டீப் சீக் வெளியாகி வரவேற்பு பெற்றவுடனே...