இடுகைகள்

மூச்சு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அவசர சிகிச்சையில் பங்குகொள்ளும் மருத்துவரின் தகுதிகள்

படம்
  மருத்துவர்களின் தகுதி தொழில் திறமை   ஆய்வு செய்யும் இடத்தில் சுத்தம் முக்கியம். மருத்துவர், செவிலியர் என அனைவருமே நேர்த்தியாக உடை அணிந்திருப்பதோடு தங்களது அடையாள அட்டையை வெளியே தெரியும்படி வைத்திருக்க வேண்டும். மருத்துவ சேவையைக் கொடுப்பதே முக்கியம். நோயைத் தெரிந்துகொள்வது முக்கியம். நோயாளியை வைத்திருக்கும் இடத்தில் மதுரை முத்துவின் ஜோக்குகளை சொல்லி சிரித்துக்கொண்டிருக்க கூடாது.   ஒருவரை காப்பாற்ற வேண்டும் என இதயத்தால் நினைத்தால் பற்றாது. மூளையும், விரல்களும் சரியாக வேலை செய்தால்தான் அவசர சிகிச்சையில் நோயாளிகளை காப்பாற்ற முடியும். நோயாளியின் நிலையைப் பற்றி உறவினர்களுக்கு கூறும்போது முடிந்தளவு அதில் கருணையான தொனி இருப்பது அவசியம். சிறந்த மருத்துவர், நல்ல மருத்துவர் என இரு வகைகள்   உண்டு. அவசர சிகிச்சையில் நீங்கள் சிறந்த மருத்துவராக இருக்கவேண்டும்.    நிதானம் முக்கியம் காரை எடுத்தவுடனே நான்காவது கியரில் ஓட்ட முடியாது அல்லவா? அதேதான். நோயாளிக்கு   தரும் சிகிச்சை பற்றி உறவினர்களிடம் சரியான வகையில் மருத்துவர் அல்லது பயிற்சி மருத்துவர் பேசி புரிய வைப்பது முக்கியம். நோயாளியை அவரின் ம

அவசர சிகிச்சையில் நோயாளிகளிடம் கேள்வி கேட்கும் முறைகள்!

படம்
    மூச்சு விடுவதில் பிரச்னை, கண்பார்வை மங்கலாவது, சிறுநீர் வெளியேற்ற சிரமப்படுவது, சமநிலை குலைந்து மயக்கமாவது, உணர்வுநிலை தேய்வுநிலை அடைவது, கவனம், சிந்திப்பது தேக்கம் பெறுவது ஆகியவற்றை   அவசர சிகிச்சையில் சேர்க்கலாம்.   காய்ச்சல் குழந்தைகளுக்கு காய்ச்சல் அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளில் ஒன்று. ஆனால் பெற்றோர் குழந்தைக்கு வரும் காய்ச்சலைப் பார்த்து பதற்றமாவார்கள். வைரஸ், பாக்டீரியா நோய்த்தொற்று, சிறுநீரகத் தொற்று, நிம்மோனியா, காயங்களால் ஏற்படும் தொற்று, மலேரியா, அறுவை சிகிச்சை செய்த நிலை, புற்றுநோய், ஒட்டுண்ணி, ஆர்த்தரைட்டிஸ்   என பல்வேறு நோய் பாதிப்புகளின் போது காய்ச்சல் ஏற்படும்.     ரத்தப்போக்கு உடலில் நடைபெறும் ரத்தப்போக்கு சிலசமயங்களில் வலி அல்லது வலியற்ற தன்மையில் இருக்கலாம். காயங்களிலிருந்து ரத்தம் வெளியேறுதல், யோனியிலிருந்து ரத்தம் வெளியாகுதல், சிறுகுடலில் ரத்தகசிவு, ரத்தசோகை,   வான் வில்பிராண்ட் நோய் (ரத்தம் உறையாத நிலை) ஆகியவற்றின் மூலம் ரத்தம் உடலில் இருந்து வெளியேறும். சமூக காரணிகள் குடிநோயாளிகள், வீடற்றவர்கள், ஆதரவற்று தன்னை பராமரிக்க முடியாதவர்கள், ப

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் எக்ஸோ அப்ஸ்!

படம்
  விபத்து அல்லது புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்போது, மருத்துவ சிகிச்சைகள் உதவுகின்றன. நேரடி விளைவாக உயிர் மிஞ்சினாலும் கூட உடலின் இயக்கங்கள் ஒரு கட்டத்தில் தேக்கமாகி விடுகின்றன. இதனால் வீல்சேரில் வாழ்க்கை நடைபெறும் நிலையாகிறது. நிரந்தரமாக இப்படி ஒருவர் சிகிச்சை பெற்று வருவது என்பது பிறருக்கும் பாரம் என ஏதாவதொரு சூழலில் நினைக்கத்தோன்றும். இதற்கு தொழில்நுட்பம் உதவுகிறது.  சியோல் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எக்ஸோ ஆப்ஸ் என்ற கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கருவியைப் பயன்படுத்தினால், வாதம் வந்து செயலிழந்து போனவர்களைக் கூட பேச, பாட, வைக்க முடியும். வயிற்றுப்பகுதியில் ஒருவர் அழுத்தம் கொடுத்தால் போதும். அதனை வைத்து மூச்சுவிடுவது, பாடுவது, இருமுவது ஆகியவற்றை ஒருவர் எளிதாக செய்ய முடியும்.  தென்கொரியாவில் 2012ஆம் ஆண்டு கிம் ஹியூக் குன் என்ற பாடகர் கார் விபத்தில் பாதிக்கப்பட்டார். இதன் விளைவாக அவருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்து போனது. கிராஸ் என்ற பேண்ட் குழுவில் பாடகராக இருந்தவருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்து போனதால் பாட முடியவில்லை. இவருக்கு உதவுவதற்காகத்தான் முதலில் எக்ஸோ ஆப்ஸ் முயற்சி

பனிக்காலத்தில் நமது மூச்சுக்காற்றை நாம் பார்ப்பது எப்படி?

படம்
giphy மிஸ்டர் ரோனி நம் மூச்சுக்காற்றை நாம் எப்படி பார்க்க முடிகிறது? டிசம்பர் தொடங்கி ஜனவரி முடியும் வரை கூட பனியின் தாக்கம் அதிகம் இருக்கும். அப்போது உங்கள் மூச்சுக்காற்றை எளிதாகப் பார்க்க முடியும். நாம் ஆக்சிஜனை இழுத்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவது போல தோன்றும். அப்போது நீர் மூலக்கூறுகளையும் நாம் ஆவியாக்கி வெளியிடுகிறோம். வாயு வடிவில் நீர் பெரியளவு ஆற்றல் இழப்பின்றிதான் உள்ளது. வெப்பமாக உள்ள நீர், உங்கள் உடலுக்குள் செல்லும்போது குளிர்கிறது. ஆனால் இதனை நீங்கள் எளிதாக உங்கள் மூச்சுக்காற்று என அடையாளப்படுத்த முடியாது. குளிர்காலத்தில் உடல் தன்னை சூடுபடுத்திக்கொள்ள முனைகிறது. அப்போது உங்கள் மூச்சுக்காற்றிலிருந்து வெளிவரும் நீர் ஆவியாதலை எளிதாக கவனிக்கமுடியும். பனிக்காலத்தில் சூழல் ஏற்கெனவே தீவிரமான அடர்த்தியில் இருக்கும். எனவே, வெயில் காலத்தை விட பனிகாலத்தில் நம் மூச்சுக்காற்றை நம்மால் கவனிக்க முடியும். பிறருக்கும் நமது மூச்சை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். நன்றி - மென்டல் பிளாஸ்