இடுகைகள்

இந்தியத்திரைப்படங்கள் - சந்தை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவில் உருவாகிறது புதிய சினிமா சந்தை!

படம்
சீனாவில் இந்தியக்கொடி பறக்குது !- ச . அன்பரசு சீனாவின் பெய்ஜிங் நகரிலுள்ள புகழ்பெற்ற சினிமா தியேட்டர் . திரையில் ஓடிய படத்தில் கண்ணிமைக்கக்கூட மறந்து லயித்து போயிருந்தனர் சீன இளைஞர்கள் . காம்போ ஆஃபரில் வாங்கிய பாப்கார்னைக்கூட படத்தின் சுவாரசியத்தில் சாப்பிடத் தோன்றவில்லை . அதிசய மிருகங்களால் உலகுக்கு ஆபத்து , ரேஸ் கார்கள் , சூப்பர் கதாநாயகர்கள் , ரத்தம் தெறிக்கும் வரலாற்றுப்படம் என்றெல்லாம் ஹாலிட் படங்களோடு அந்தப்படத்தை ஒப்பிட முடியாது . கிராபிக்ஸ் கலப்படங்கள் இல்லாத சிம்பிளான கதை . தந்தை தன் இரு மகள்களை மல்யுத்த வீரர்களாக்கும் உணர்ச்சிப்பூர்வமான மொழிமாற்றுப்படத்தில் ஒன்றிப்போய் நெஞ்சம் நெகிழ்ந்துபோய் கண்கள் கசிய பார்த்துக்கொண்டிருந்தனர் சீனர்கள் . ஆம் . 2016 ஆம் ஆண்டு நிதிஷ் திவாரியின் இயக்கத்தில் அமீர்கானின் அட்டகாச நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி உலகமெங்கும் பாராட்டுக்களையும் கரன்சியையும் குவித்த ' தங்கல் ' படம்தான் அது . ஏறத்தாழ சீனாவில் மட்டும் படம் வெளியான இரண்டே மாதங்களில் பத்தொன்பது கோடி ரூபாய் சம்பாதித்து தந்திருக்கிறது . " பலருக்கும் நம்