இடுகைகள்

கருவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசியலில் கருவியாக பயன்படுத்தப்படும் உளவியல் பற்றி பேசி விமர்சித்ததால் கொல்லப்பட்ட உளவியலாளர்

படம்
  ignacio martin baro இக்னாசியோ மார்ட்டின் பாரோ ஸ்பெயின் நாட்டில் பிறந்தவர். 1959ஆம் ஆண்டு, மதக்கல்வியைக் கற்க தென் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஈகுவடாரின் கொய்டோவில் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். கொலம்பியாவில் உள்ள ஜாவெரியனா பல்கலையிலும் படித்தார். 1996ஆம் ஆண்டு, பாதிரியாக தேர்ச்சி பெற்றவர், எல் சால்வடோருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சான் சால்வடோரி்ல் உள்ள சென்ட்ரல் அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார். உளவியல் பற்றி படித்து பட்டம் பெற்றார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் சமூக உளவியல் படித்து முனைவர் பட்டம் பெற்றார். பின்னாளில் அங்கயே உள்ள உளவியல் துறையில் தலைவராக மாறினார். பிறகு, சென்ட்ரல் அமெரிக்காவிற்கு சென்றார்.  மார்ட்டின் பாரோ, எல் சால்வடோரில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களைப் பற்றி பகிரங்கமாக விமர்சனம் செய்தார். 1986ஆம் ஆண்டு, பொதுமக்களின் கருத்து என்ற பெயரில் தனி அமைப்பை உருவாக்கினார். ராணுவத்தின் படுகொலைப் பிரிவு, மார்ட்டினோடு சேர்ந்து மேலும் ஐந்துபேர்களை படுகொலை செய்தது. அரசியல் ஊழல், அநீதி என குற்றம்சாட்டி படுகொலையை நியாயப்படுத்தினர்.  முக்கி

நிலநடுக்கத்தை முன்னறிவோம்!

படம்
  நிலநடுக்கத்தை முன்னறிவோம்! பூமியின் கீழுள்ள அடித்தட்டு பகுதி (Crust), மேற்புற மூடகம் (Mantle) ஆகியவற்றுக்கு இடையில்  புவித்தட்டுகள் அமைந்துள்ளன. இவை ஒன்றன் மீது மற்றொன்று நகரும்போது  நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிலநடுக்கம் தொடங்கும் பூமியின் புள்ளி, ஃபோகஸ் அல்லது ஹைப்போசென்டர்  (Hypo center)என்று அழைக்கப்படுகிறது.  நெகிழ்வுத்தன்மை கொண்ட பொருளை எளிதாக நீட்ட முடியும். இதில் கூடுதலாக அழுத்தம் சேரும்போது, குறிப்பிட்ட வரம்புவரை நீளும். அதையும் தாண்டி அழுத்தம் கொடுத்தால் அப்பொருள் உடைந்துவிடும். பூமியும் அப்படித்தான் இயங்குகிறது. பூமியின் கீழ்ப்பகுதியில்  வெப்பம், அழுத்தம் உருவாகிறது. இப்படி உருவாகும் ஆற்றலை பூமி, நெகிழ்வுத்தன்மை கொண்ட அலையாக மாற்றுகிறது. இதனை நிலநடுக்க அலைகள் (Seismic waves) என்று புவியியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.  நிலநடுக்க அலைகளை, நிலநடுக்க அளவீட்டு நிலையங்கள் கண்டறிகின்றன. அலைகளின் ஆற்றலை அறிய, சீஸ்மோகிராப் கருவிகள் உதவுகின்றன. இந்தியாவில், புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் தேசிய நிலநடுக்க அளவீட்டு மையம் (National Center for Seismology (NCS)) செயல்பட்டு வருகிறது. இந்த அ

பயிர்களை அழிக்கும் அந்திப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்! ஃபார்ம் சென்ஸ்

படம்
  அந்திப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் தொழில்நுட்பம்! இயற்கைச்சூழலில் பூச்சிகளின் பங்கு முக்கியவை. விவசாயப் பயிர்களை தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினமானதாக மாறிவருகிறது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த பெரோமோன் வேதிப்பொருள் கொண்ட பசை அட்டைகளை விவசாயிகள் பயன்படுத்தினர். ஆனால் இதன் மூலம் அனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையை, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஃபார்ம்சென்ஸ் (Farmsense) நிறுவனம் மாற்றியுள்ளது. இந்த நிறுவனம் பூச்சிகளை கண்காணிக்கும் சென்சார் கருவிகளை உருவாக்கி வருகிறது.   2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃபார்ம்சென்ஸ் நிறுவனம், பூச்சிகளைக் கண்காணித்து அதற்கேற்ப அதனைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை வகுக்க உதவுகிறது. இந்த நிறுவனத்தின்,  ஃபிளைட்சென்சார் கருவி, 2020ஆம் ஆண்டு முதலாக வயல்வெளிகளில் நிறுவி சோதனை செய்யப்பட்டு வருகிறது.  இந்தக்கருவி, பூச்சியை கவர்ந்து இழுக்கும் கொல்லும்பொறி அல்ல. அந்திபூச்சிகளின் வடிவம், இறக்கை எழுப்பும் ஒலி என பல்வேறு அம்சங்களை பதிவு செய்து உரிமையாளருக்கு தானியங்கியாக அனுப்பிவிடும்.  கருவி தரும் தகவல்களின் அடிப்படையில், பூச்

விவசாய கருவிகளை வடிவமைக்கும் விவசாயி!

படம்
  விவசாய கருவிகளால் புகழ்பெற்ற விவசாயி! கர்நாடகத்தின் தார்வாடிலுள்ள அன்னிகெரி கிராமத்தைச் சேர்ந்தவர், அப்துல் காதர் நாடாகட்டின். இவர், விவசாயிகளுக்கு பயன்படும் 24 விவசாய கருவிகளைக் கண்டுபிடித்துள்ளர். கிராமத்தில் சக விவசாயிகள் இக்கருவிகளைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகரித்துள்ளனர்.    அப்துல்,  சிறுவயதிலிருந்தே புதுமையாக யோசித்து வருபவர். பள்ளி செல்லும்போது, அதிகாலையில் நேரமே எழ முடியாமல் தவித்தார். இதற்காக,  அலாரம் கடிகாரத்துடன் நீர் பாட்டிலை இணைத்து கருவியை உருவாக்கினார்.  அலாரம் ஒலிக்கும்போது, அதனை உடனே எழுந்து நிறுத்தாதபோது நீர்பாட்டிலிலுள்ள நீர் முகத்தில் கொட்டும். இப்படி ஒரு கருவியை அப்துல் கண்டுபிடித்தபோது அவரின் வயது 14 தான்.  இந்த நுட்பமான முறையில்தான் அதிகாலை எழுந்து படித்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி  பெற்றார்.  அப்போது அவரது குடும்பம் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் சிக்கியது. இதனால் விவசாய பட்டப்படிப்பு படிக்கும் கனவை கைவிட்டார். 1974ஆம் ஆண்டு முதல் குடும்பத்திற்கு சொந்தமான  60 ஏக்கர் நிலத்தில் வேளாண்மை செய்யத் தொடங்கினார். படிப்பைக் கைவிட்டாலும் கருவிகளை ஊக்கத்துடன் உருவாக்கி