இடுகைகள்

கற்பனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குற்றங்களை செய்வதற்கான முன்தயாரிப்பு கற்பனைகள் - முப்பொழுதும் கொலைக் கற்பனைகள்

படம்
  ஒருவர் மனதில் வன்முறை எண்ணம் வருகிறது என்றால் அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். உடல், மனம் ஒத்திசைவு குறைந்தவர்கள், தனது உடலின் மனதின் எல்லைகளைப் புரிந்தவர்கள் கற்பனை செய்யத் தொடங்குகிறார்கள். ஆனால் இது ஆக்கப்பூர்வமாக அமைந்தால் ஆராய்ச்சி, கதைகள் என செல்லும். ஆனால் இன்னொரு இருள் பக்கம் நகர்ந்தால் அது ஒருவழிப்பாதை. இருட்டில் அப்படியே நகர்ந்து செல்லவேண்டியதுதான். நரகத்தின் பாதை அது. சமூகத்தை விட்டு தனியாக ஒருவர் இருக்க நினைத்தால், அதை குணப்படுத்தும் மருந்துகள் மனநல மருத்துவத்தில் சிகிச்சையில் கிடையாது. அவரைக் கட்டுப்படுத்தி வைப்பதுதான் ஒரே சிகிச்சை. இந்த ஏரியாவில் கொலைகள் நடந்தால், தொடர் கொலைகாரர் என ஒருவர் அறியப்பட்டால் அது நான்தான் என தனது நண்பனிடம் துணிச்சலாக கூறி கொலை செய்வதில் இறங்கினார் ஜாசன் மாசே. இருபது வயதில் இளைஞர், இளம்பெண் என இருவரை படுகொலை செய்தவர். கொலைகளை ஒரே நாளில் செய்தார். கற்பனையும் அதில்   எல்லை இல்லாத வன்முறையும் கொண்ட காட்சிகளைக் கண்டு கொலைகளை செய்யத் தொடங்கியவர்தான் ஜாசன்.  முன்னரே ஜாசன், விலங்குகளை சித்திரவதை செய்யும் பழக்கத்தை கொண்டிருந்தார். இதைப் பார்த்து ப

பாலியல் கற்பனைகளை பிராக்டிக்கலாக செய்தால் - ரத்தசாட்சி - அசுரகுலம் 3

படம்
  காமம் மனிதர்களுக்கு எப்போதும் தீராத பசி என்பது காமம்தான். வயிற்றுப்பசி என்பது தீர்க்க கூடியது. ஆனால் காமப்பசி என்பது ஆகாயம் அளவு எரியும் நெருப்புக்கு சிறு கரண்டியில் நெய் ஊற்றுவது போலத்தான். அது நெருப்புக்கு ஆகுதி ஆகாது. காமத்திற்காக கொலை செய்பவர்கள் என தனி பட்டியல் உண்டு. இவர்களை குற்றவியல் வல்லுநர்கள் சாகச கொலைகார ர்கள் என்கிறார்கள். பெரும்பாலும் இந்த கொலைகாரர்கள் மாய உலகை கற்பனை செய்துகொள்பவர்கள். பிற பாலினத்தவர்களின் உள்ளாடைகள், விலங்குகளின் உடல் பாகங்கள் என தேடி சேகரிப்பவர்களாக இருப்பார்கள்.   அமெரிக்காவின் ஒரேகான் பகுதியைச் சேர்ந்தவர் ஜெரோம். இவருக்கு பெண்களின் கால்கள், குதிச்செருப்புகள், உள்ளாடைகள் என்றால் பேராசை. தன் வீட்டிற்கு அருகிலுள்ள பெண்களின் உள்ளாடைகள், செருப்பு ஆகியவற்றை திருடி சேமிக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் மனதில் ஆசை வளர, பெண்களை கொலை செய்யத் தொடங்கினார். அப்போதும் கால்களை தனியாக வெட்டி வைத்து பாதுகாத்தார். இதில் இன்னும் சற்று பெரிய பட்ஜெட்டில் சந்தோஷப்பட்டவர் ஒருவர் உண்டு. அவர் பெயர் சில்வெஸ்டர் மதுஸ்கா. இவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். இரு ரயில்களை ம

காலநிலை பற்றிய குழந்தைகளுக்கான புனைவுக் கதைகள்!

படம்
  காலநிலை பற்றிய நூல்கள் ரெயின்போ கிரே - ஐ ஆப் தி ஸ்டோர்ம் லாரா எல்லன் ஆண்டர்சன் பார்ஷோர் சீரிசின் இரண்டாவது நூல். ரெயின்போ கிரே தனது காலநிலை பற்றி ஆற்றலை மெல்ல கற்றுக்கொள்ளத் தொடங்குகிறாள். இதன் பின் நடக்கும் சம்பவங்கள், அவளின் ஆற்றல் என்னவானது என்பதை பற்றி பேசுகிறது நூல்.  தி லைட்னிங் கேட்சர்  கிளார் வேஸ் ப்ளூம்ஸ்பரி ஃபோல்டிங் ஃபோர்ட் என்ற கிராமத்தில் நடக்கும் வினோதமான நிகழ்ச்சிகளைப் பற்றி எப்படி விசாரணை செய்து பல்வேறு உண்மைகளை கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை. ஆல்ஃபி, சாம் ஆகிய இருவரும் தான் நாயகர்கள். இவர்களிடம் உள்ள ஆயுதம் பைக், நோட்பேட் அல்ல. கூர்மையான புத்திதான். அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதே நாவலின் மையம்.  எ கேதரிங் ஸ்ட்ரோம் தம்சின் மோரி யுகிளான் பப்ளிஷிங் இதுவும் கூட சீரிசின் தொடர் நாவல்தான். ஸ்டெல்லா, நிம்பஸ் என இருவரும்தான் நாவலை நடத்திச் செல்கிறார்கள். இருவரும் முக்கியமான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். மந்திர தந்திர வியாபாரங்கள் நடைபெறும் நிகழ்ச்சி அது. அங்கு நேரம் சில சிக்கல்களை எப்படி எதிர்கொண்டு மீள்கிறார்கள் என்பதை நாவல் விவரிக்கிறது.  தி ஸ்ட்ரோம

திரைப்படங்களும் நூல்களும் குற்றவாளிகளை ஊக்குவிக்கிறதா?

படம்
                கொடூரமான கற்பனைகள் ! 1970 இல் கில்லர் பிக்ஷன் என்ற பெயரில் வினோதமான கதைகள் வெளியாயின . இதனை ஹாரி க்ரூஸ் என்பவர் எழுதி வெளியிட்டார் . இவர் புளோரிடாவில் துணை ஷெரீப்பாக இருந்த ஜெரார்டு ஜே ஸ்காஃபெர் என்பவரின் சித்திரவதை முறைகளை ஆராய்ந்து கதைகளாக எழுதினார் . இவை அனைத்துமே படிக்க பெரும் மனதைரியம் வேண்டும் . இளகிய மனம் படைத்தவர்கள் படித்தால் வா்ந்தியே எடுத்துவிடுவார்கள் . அந்தளவு சித்திரவதை செய்யும் முறைகள் பொய்யா , நிஜமா , இப்படியெல்லாம் நடக்குமா என்று பயப்படும் அளவுக்கு கதைகள் எழுதப்பட்டிருந்தன . இவற்றைத் தொகுத்து எழுத எழுத்தாளருக்கு சோண்ட்ரா லண்டன் என்ற ஷெரீபின் முன்னாள் காதலி உதவினார் . மோசமான புத்தகங்கள் , படங்கள் , வீடியோக்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் அனைத்து மக்களுக்கும் வாங்கும் விலையில் ஓவியங்கள் , படங்கள் அச்சிடப்பட்டு கிடைத்தன . அச்சு ஊடகங்களின் வளர்ச்சி என்று கூட இதனை கூறலாம் . ஆனால் விமர்சகர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர் . அவர்கள் , இப்படி படங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைப்பது அவர்களின் ரசனையைக் கெடுக்கும் . தவறான குற்றங்களை

சாடிஸம் பற்றிய ஆய்வுகளால் உலகையே அதிர வைத்த ஜெர்மன் மருத்துவர்!

படம்
          அமெரிக்காவில் மட்டும்தான் தொடர் கொலைகாரர்கள் உருவாகிறார்களா என பலரும் நினைக்கலாம் . இந்தியாவில் ராமன் ராகவ் ரக கொலைகார ர்கள் இருப்பதைப் போல அனைத்து நாடுகளிலும் உண்டு . இவர்களைப் பற்றிய முழுமையான ஆவணம் கிடைப்பதில்லை என்பதுதான் அவர்களைப் பற்றி பேச முடியாததற்கு காரணம் . ரெக் கிறிஸ்டி இவரைத்தான் இங்கிலாந்தின் ரிலிங்டன் பிளேசின் ராட்சசன் என்று அழைக்கின்றனர் . 1953 ஆம் ஆண்டு இங்கிருந்த வீட்டை வாங்கியவர்கள் அதனை புதுப்பிக்க நினைத்தனர் . சமையல் அறையில் இருந்த வால்பேப்பர்களை அகற்றியதும்தான் உள்ளே இருந்த விபரீதம் புரிந்தது . அங்கிருந்த கப்போர்டில் மூன்று பெண்களின் பிணம் பிளாஸ்டிக் உறையில் மடித்து வைக்கப்பட்டிருந்தது . சாப்பிடும் அறையின் கீழும் ஒரு பெண்ணின் பிணம் கிடைத்தது . தோட்டத்தில் மூன்றுக்கும் அதிகமான பிணங்கள் இருந்தன . ஏன் இந்த ரத்த வெறியாட்டம் . அத்தனைக்கும் காரணம் , கண்ணாடி போட்ட ரெக் கிறி்ஸ்டி என்பவர்தான் . வேலை செய்தால்தான் சாப்பாடு என்ற நிலையில் வேலையை முக்கியமாக கருதும் குடும்பத்தில் பிறந்தவர் , பின்னாளில் அனைவரின் பொருட்களையும் திருட