இடுகைகள்

மருத்துவம்- அலர்ஜி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அலர்ஜி ஏற்படுத்து பாதிப்புகள் என்ன?

படம்
அலறவைக்கும் அலர்ஜி ! கத்தரிக்காய் , உருளைக்கிழங்கு சாப்பிட்டால் தோல் வீங்கும் . இறைச்சி சாப்பிடால் பேதி என அலர்ஜி சிம்பிள் பிரச்னையல்ல ; இதற்கு மருந்தும் கிடையாது . " ரத்தசோதனையில் வரும் முடிவுகளை வைத்து அலர்ஜியை மதிப்பிடவே முடியாது . பெரும்பாலும் மனிதர்களுக்கு தற்போது ஏற்படும் அலர்ஜிக்கு உணவுப்பொருட்களே காரணம் " என்கிறார் மருத்துவர் பிரசாத் . பெரும்பாலும் அலர்ஜிக்கு 8 சதவிகிதம் இலக்காவது குழந்தைகளே . பெரியவர்கள் 1-2% பாதிக்கப்படுகிறார்கள் . தொடர்ச்சியாக அலர்ஜி பிரச்னைகளை அதிகரிப்பதற்கு நோய் எதிர்ப்புசக்தி குறைவதோடு காற்றும் , நம் சுற்றுப்புறமும் மாசடைவதும் , வாழ்க்கைத்தரமும் முக்கிய பங்காற்றுகிறது . 2011 ஆம் ஆண்டு உலக அலர்ஜி பவுண்டேஷன் , இந்தியாவிலுள்ள 30 சதவிகித மக்கள் அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு எண்ணிக்கை அதிகரிப்பதையும் ஆய்வு மூலம் சுட்டிக்காட்டியுள்ளது . 2050 ஆம் ஆண்டில் 50 சதவிகித குழந்தைகள் ஏதாவதொரு அலர்ஜி பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்கிறது இந்த ஆய்வு .