ஆன்மா இடம் மாறுதலால் வம்புச்சண்டை மாணவனின் வாழ்க்கையில் நடக்கும் தலைகீழ் மாற்றங்கள்!
சேம் கைய் மங்கா காமிக்ஸ் மங்காகோ.காம் 50 அத்தியாயங்கள்--- இரண்டு பள்ளி மாணவர்கள். ஒருவன் படிப்பில் ஈடுபாடு கொண்டவன். அப்பாவி. இன்னொருவன், அடிதடி ஆள். எப்போதும் யாராவது அவனுக்கு எதிராக விரல் உயர்த்தினால் கூட கையை அடித்து முறிப்பவன். இவர்கள் இருவரும் எதிர்பாராதபடி ஒரு விபத்தில் சிக்குகிறார்கள். அதன் விளைவாக, இருவரின் ஆன்மா மாறுகிறது. இதனால் ஏற்படும் விவகாரங்களே கதை. இது ஒரு தற்காப்புக்கலை கதை. எனவே, கதையில் அடிதடி விஷயங்களே அதிகம். படக்கதை முழுக்க கருப்பு வெள்ளை என்பது வாசிக்கவே புதிய அனுபவத்தை தருவதாக உள்ளது. நாயகன் காங் டு ஜி உடலில் அப்பாவி மாணவன் சூன் ஆன்மா புகுந்துவிட, படிப்பதா, ஏற்கெனவே உள்ள எதிரிகளை அடித்து துவைப்பதா என அவன் யோசிக்கும் இடத்தில் கதை வேகம் பிடிக்கிறது. காங் டு ஜி உடல் அபாரமான தற்காப்புக்கலை ஆற்றல் கொண்டது. ஆனால் அதை இயக்கும் ஆன்மா, மாறிவிடுகிறது.அடிதடி என்றாலே மன்னிப்பு கேட்டுக்கூட தப்பித்து ஓடிவிடலாம் என நினைப்பவன், அவனுக்கு அவரும் எதிர்பாராத சவால்கள் மூலம் தற்காப்புக்கலை கற்க முயல்கிறான். அக்கலை பெயர் கோ மு டு. தற்காப்புக்கலை காமிக்ஸ் என்பதால் அடிதடி ம...