பகல் கனவு, தவறான நினைவுகள், தண்டனை வழங்கப்பட்டால் குற்றம் குறையுமா?
அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பகல் கனவு காண்பதால் நன்மையா, தீமையா? பகலில் கனவு காண்பது என்பது பொதுவாக நிறைவேறாத ஒன்றாக அனைத்து மக்களும் கருதுகிறார்கள். ஆனால், அதை ஒருவர் தீர்மானிக்க முடியாது. ஏதோ ஒரு நேரத்தில் சடாரென நினைவுகள் சூழ, ஒருவர் கனவுக்குள் செல்கிறார். ஒருநிமிடம் அவர் முழுமையாக அந்த கனவுக்குள் போய்விடுகிறார். இது மூளையின் செயல்பாடுதான். இதை ஒருவர் தானாக உருவாக்குவதில்லை. இப்படி நடக்கும் செயல்பாடு புதுமைத்திறனை ஊக்குவிக்கிறது என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். அதாவது, பிரச்னைகளை தீர்க்கும் நிலையில் இருப்பதாக கணிக்கிறார்கள். சுதந்திரமாக யோசிக்கிறது என புரிந்துகொள்ளலாம். உணர்வு ரீதியான செயல்பாடு, எதிர்காலத்தை திட்டமிடுவது ஆகியவற்றுக்கும் பகல் கனவு காண்பது உதவுகிறது. தவறான நினைவுகள் என்றால் என்ன? மூளையில் உள்ள நினைவுகளை நாம் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கும்போதுதான் அவை மேலே வருகின்றன. சிறு கற்களாக வீடுகள் கட்டப்படுவது போல நினைவுகள் அடுக்கப்படுகின்றன. வீடியோ கேமராவில் ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்தால் அது எப்போதுமே மாறாது. அப்படியேதான் இருக்கும். ஆனால், மூளையி...