இடுகைகள்

பிளாஷ்பேக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2025ஆம் ஆண்டை எண்களாகப் பார்ப்போம்!

படம்
 2025ஆம் ஆண்டை எண்களாகப் பார்ப்போம்! இந்தியா, மதவாத கட்சியின் ஆட்சியில் டாலருக்கு எதிராக ரூ.90 அளவுக்கு சரிவை சந்தித்திருக்கிறது. மன்மோகன்சிங் ஆட்சியில் ரூபாய் சற்றே சரிவை சந்தித்தபோது ஆர்எஸ்எஸ் அமைப்பின் தூண்டுதலில் ஊளையிட்ட நடிகர்கள், மும்பை ஊழல் தொழிலதிபர்கள் இப்போது கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். தனக்கு வரவேண்டிய பதினைந்து கோடி ரூபாய், இன்னொரு செய்தியாளரிடம் சென்றுவிட்டதற்காக கோஸ்சாமி மட்டுமே ஆரவள்ளி மலைத்தொடர் சுரங்கம் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். ரூபாய் பற்றி இன்னும் யாரும் எதுவும் பேசவில்லை. பேசினால் வீட்டுக்கு, அலுவலகத்திற்கு ரெய்டு வரும். சோனம் வான்சுக் போல விசாரணையி்ன்றி சிறையில் வைக்கப்படுவார்கள். கிறித்தவர்கள் போல எரித்தே கொல்லப்படலாம்.  பஞ்சாபி பாப் ஸ்டார் கரன் ஆஜ்லா இந்தியாவுக்கு வருகிறார். இவரது இசைப்பயணத்திற்காக 1,00,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்திருக்கின்றன.  உச்சநீதிமன்றத்தில் தேங்கியுள்ள ஒட்டுமொத்த வழக்குகளின் எண்ணிக்கை 88,417. இது இதுவரையிலான நீதிமன்ற வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கை. நேர்மையாக செயல்பட்டால் உடனே அந்த நீதிபதியை இடமாற்றம் செய்யும் சனாதன தர...

சிரஞ்சீவி பேக் டூ பேக் திரைப்படங்கள் - இந்திரா, சூடாலனி உந்தி, ரிக்‌ஷாவோடு

படம்
            சிரஞ்சீவி படங்கள் பேக் டூ பேக் இந்திரா இயக்கம் பி கோபால் கதை சின்னி கிருஷ்ணா வசனம் பாருச்சி பிரதர்ஸ் பட்ஜெட் - 10 கோடி வசூல் 40 கோடி மூன்று நந்தி விருதுகளைப் பெற்ற படம் 2002ஆம் ஆண்டு காசியில் சங்கர் வாழ்ந்து வருகிறார். டாக்சி ஓட்டுவதுதான் இவருடைய தொழில். இவருக்கென தெலுங்கு பேசும் சில மனிதர்கள் உள்ளனர். டாக்சி ஓட்டுவது, படகு ஒன்றை காசிக்கு வருபவர்களுக்கென இயக்கி வருகிறார். படகை ஓட்ட ஆதரவற்ற ஒருவரை நியமித்திருக்கிறார். டாக்சியை நேர்மையாக ஓட்டி கிடைக்கும் பணத்தில் தான் தனது மாமன் மகள், மருமகன் ஆகியோரை பராமரித்து வருகிறார். மருமகளை கர்நாடக சங்கீதம் கற்பித்து பாடகியாக்கவேண்டுமென்ற கனவு சங்கருக்கு இருக்கிறது. ஆனால் மாமன் மகளுக்கோ பாட்டைக் கேட்டாலே தூங்கும் திறமைதான் இருக்கிறது. சாதாரணமாக பார்த்தாலே தெரியும். பெரிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் போல இருக்கும் சங்கர், வாரணாசியில் என்ன செய்கிறார் என சந்தேகம் தோன்றும் சந்தேகம் சரிதான். சங்கர் தன் மாமன் மகள் பாடும் போட்டியில் அவர் தடுமாற இவர் மேடையேறி பாடுகிறார். அப்போது அவரைப் பார்த்து காதல் கொள்கிறார் ...