இடுகைகள்

சமுதாயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காந்தி கேட்ட நான்கு கேள்விகள்! - காந்தி 150

படம்
பின்டிரெஸ்ட் காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய அரசு பல்வேறு விழாக்களை கொண்டாட முடிவு செய்துள்ளது. காந்தி, ஏன் பிற தலைவர்களை விட முன்னே நிற்கிறார்? காரணம் தான் வலியுறுத்திய கொள்கைகளை அடையாளமாக்கினார். அவரின் கண்ணாடி , இடுப்பில் உடுத்திய ஒற்றைத்துணி, பாக்கெட் வாட்ச், கைத்தடி என அனைத்துமே எளிய நாடோடி  மனிதருக்கானவை. அவரை சந்திக்கும் எந்த வெளிநாட்டவருமே அவரை நாடோடி பக்கிரியாகவே கருதுவார்கள். ஆனால் அவரின் எழுத்துகள், சிந்தனைகள் வழி அவரை அணுகுபவர்கள் அவர்மீதான நேசத்தில் விழுவார்கள். காரணம், யாரையும் கவர்ந்திழுக்கும் வசீகர எளிமையான எழுத்து அவருடையது. இன்றும் அவரது கொள்கைகளைப் படித்து அதன்பால் ஈர்ப்பு கொண்ட காந்தியர்கள் உண்டு. இவர்கள்தான் இன்று சமூகத்தை இயக்கி வருகிறார்கள். மதம் காந்தி இறுதிவரை இந்து மத சார்பானவராகவே இருந்தார். மத வர்ணங்களை ஆதரித்தார். அதில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது என்றார். மதம் என்பதை மக்களுக்கு வழிகாட்டும் பாதையாக, உண்மையை கண்டறிய உதவும் ஒளியாக அவர் கண்டார். ஆனால் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களை அவலத்திற்குள்ளாக்கும்