இடுகைகள்

பாதாள சாக்கடை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள்!

                  பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள் ! சைக்கிள் 1817-1880 பதினைந்தாம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே சைக்கிள் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன . அப்படித்தான் இரண்டு , நான்கு சக்கர வண்டிகள் உருவாக்கப்பட்டன . ஆனால் பாதுகாப்பான இரு சக்கர வாகனங்கள் கண்டுபிடிக்க மனிதர்களுக்கு நானூறு ஆண்டுகள் தேவைப்பட்டன . 1817 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த அறிவியலாளர் கார்ல் வான் டிரெய்ஸ் , மரத்தினால் ஆன சக்கரங்களை இணைத்த சைக்கிளை உருவாக்கினார் . இதில் சீட்டும் கூட இருந்தது . 1860 ஆம் ஆண்டு பெடல்களைக் கொண்ட சைக்கிள் உருவானது . இதனை வெலோசிபெட் என்று அழைத்தனர் . இதனை பிரான்சில் உருவாக்கினர் . வடிவமைப்பு ஓகே என்றாலும் சைக்கிள் டயர் கடினமாக இருந்ததால் இதில் பெடல் போடுவது எலும்புகளை உலுக்கும் அனுபவத்தை கொடுத்தது . எனவே இதனை போன்சேக்கர் என்று அழைத்தனர் . பிறகு 1880 இல் உருவாக்கப்பட்ட சைக்கிள் தான் பெடல் அமைப்பும் , செயின் அமைப்பும் இணைந்து சைக்கிளை செலுத்துவதற்கு சமநிலையைக் கொடுத்தது . 1865 பதப்படுத்துதல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உணவு , ப