இடுகைகள்

கிரகண லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நூறு ஆண்டைக் கடந்துவிட்ட சார்பியல் விதி!

படம்
  சார்பியல் விதி! 1919 ஆம் ஆண்டு பிரபல இயற்பியலாளர் ஐன்ஸ்டீனால் கூறப்பட்ட சார்பியல் விதிக்கு  நூறு ஆண்டைத் தாண்டிவிட்டது.  1919 ஆம் மே 29 அன்று ஏற்பட்ட சூரிய கிரகணம், ஐன்ஸ்டீனின் சார்பியல் தியரியை அறிவியலாளர்  மட்டுமல்ல மக்களுக்கும் புரிய வைத்தது. சிறப்பு சார்பியல் விதி, பொது சார்பியல் விதி என இருவிதிகள் உண்டு. இங்கு கூறப்படுவது பொது சார்பியல் விதி. இதன் அடிப்படையில்தான் இன்று விண்வெளி ஆய்வுகள் நடைபெற்று வருவதோடு, பல்வேறு தொழில்நுட்ப கருவிகளும் (செயற்கைக்கோள், ஜிபிஎஸ்) செயல்படுகின்றன. இப்போது சார்பியல் விதி எளிய வடிவில்: எழுபது கி.மீ வேகத்தில் செல்லும் பேருந்தில்  சென்று கொண்டிருக்கிறீர்கள். இப்போது உங்கள் கையிலுள்ள பந்தை முன்னோக்கி பத்து கி.மீ. வேகத்தில் எறிகிறீர்கள். பந்தின் வேகம் என்ன என்று உங்களைக் கேட்டால், பத்து கி.மீ. என்று கூறுவீர்கள். பேருந்துக்கு வெளியே நிற்பவர், எண்பது கி.மீ. வேகத்தில் பந்தை எறிந்தீர்கள் என்பார். ஒருவர் இருக்கும் இடம் சார்ந்து பொருளின் வேகம் மாறுபடுகிறது.  வேகம் என்ற இடத்தில் ஒளியைப் பொறுத்துங்கள். இங்கு ஒரே ஒரு வேறுபாடு, ஒளியின் வேகம் மாறாது என்பதுதான். இது