இடுகைகள்

ஹீரோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆர்டர் செய்த ஹேர் ஆயிலுக்கு பதிலாக மும்பை கேங்ஸ்டரின் துப்பாக்கி பார்சலில் வந்தால்... ஹீரோ - தெலுங்கு

படம்
  ஹீரோ தெலுங்கு இசை ஜிப்ரான் இயக்கம் ஶ்ரீராம் ஆதித்யா   மகேஷ்பாபு குடும்பத்தில் இருந்து நடிக்க வந்திருக்கும் நாயகன் நடித்த படம். அர்ஜூன் சினிமா ஹீரோவாக முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அவரது நண்பர் சத்யா, ராப் பாடகர். அர்ஜூன் தனது வீட்டுக்கு அருகில் குடிவரும் சுப்புவை (நிதி அகர்வால்) வலுக்கட்டாயமாக காதலிக்கிறார். பின்னர் அவரும் வேறு ஆப்சனின்றி சம்மதிக்கிறார். சுப்பு, கால்நடை மருத்துவராக இருக்கிறார். எங்கே, அர்ஜூனின் அப்பா வேலை செய்யும் இடத்தில்தான். படம் தொடங்கி அரைமணிநேரம் ஜாலியாக செல்கிறது. அதற்குப் பிறகுதான் கதையே தொடங்குகிறது. அர்ஜூனுக்கு சினிமா ஹீரோவாகும் வாய்ப்பு தள்ளிப்போகிறபோது, தலைமுடி வேறு கொட்டுகிறது. இதை அவரது காதலியே சொல்லி வருத்தப்படுகிறார். இதனால், வெண்ணிலா கிஷோர் டிவியில் விளம்பரம் செய்யும் சீன ஹேர் ஆயிலை வாங்க ஆர்டர் செய்கிறார் அர்ஜூன்.  ஆனால், அவருக்கு வரும் பார்சலில் துப்பாக்கி இருக்கிறது. இதனால் பதற்றமாகும் நாயகன், அவரது ராப் பாட்டு நண்பனைக் கூட்டிக்கொண்டு வந்து நிலையை சொல்லுகிறார். ஆனால் அவர் அப்போதுதான் மதுபானக்கடையிலிருந்து வருவதால், துப்பாக்கி என்பதே

நடிகர்களின் தொழில்வாழ்க்கை நீட்டிக்கப்பட்டிருக்கிறது! - இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி

படம்
  மிதுன் சக்கரவர்த்தி மிதுன் சக்கரவர்த்தி இந்தி நடிகர்  நீங்கள் 370 திரைப்படங்களுக்கு மேல் நடித்துவிட்டீர்கள். புதிதாக படம் தொடங்கும்போது பதற்றமாக இருக்குமா? பதற்றம் இருக்காது. ஆனால் நடிக்கும் குழு புதிது என்பதால் முடிந்தளவு கவனமாக இருப்பேன். அக்குழுவோடு முழுமையாக இணைய இரண்டு மூன்று நாட்கள் தேவை. ஜோக்குகளை சொல்லி அனைவரிடம் பேசினால்தான் நான் மூத்த நடிகர் என்பதை பலரும் மறப்பார்கள்.  நீங்கள் நடிக்க வந்து 46 ஆண்டுகள் ஆகிறது. அன்றிலிருந்து இன்றுவரை ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன என்று சொல்லுங்கள்.  எண்பது, தொண்ணூறுகளில் ஐந்து பாட்டு, ஐந்து பைட், நிறைய வசனங்கள் என இயங்கினோம். இப்போது முக்கியமான பாத்திரங்களில் பெரிய நடிகர்களே நடித்து வருகிறார்கள். இப்படி நடித்தால் நடிகர்களின் தொழில் வாழ்க்கை இன்னும் நீளும்.  அமேசானின் பெஸ்ட் செல்லர்ஸ் தொடரில் நடிக்கிறீர்கள் அல்லவா? அதில் போலீஸ் பாத்திரம். அவரின் பாத்திரத்தை பிறர் எளிதாக கணிக்கவே முடியாது. தனக்கென தனி யூடியூப் சேனலை வைத்து கொண்டிருக்கும் அதிகாரி. நகரில் எங்கு என்னென்ன உணவு கிடைக்கும் என பேசிக்கொண்டே இருப்பவர். அதேசமயம் இரக்கமில்லாமல் நடந்துகொ