இடுகைகள்

பாலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிங்கம் செத்துவிட்டது - மிருகராஜூ - சிரஞ்சீவி, சிம்ரன், பிரம்மானந்தம், நாகபாபு

படம்
                   மிருகராஜூ இயக்கம் குணசேகர் படத்தின் கதை எங்கே நடக்கிறது என்று கேட்டுவிடக்கூடாது ஏதோ ஒரு கிரகத்தில் நடைபெறுவதாக நினைத்துக்கொள்ளுங்கள். அதுதான் இந்த படத்திற்கும் நமக்கும் மஞ்சிதி... பழங்குடிகள் வாழும் காடு. அங்கு ரயில் செல்வதற்கான இருப்புபாதை கொண்ட பாலம் ஒன்றைக் கட்ட நினைக்கிறார்கள். ஆனால் அங்கு இருக்கும் சிங்கத்தால் கட்டுமான பொறியாளர் கொல்லப்படுகிறார். இதனால் புதிதாக அங்கு பெண் பொறியாளர் வருகிறார். ஆனால் அவருக்கும் இருக்கும் பெரிய பிரச்னை. ஆட்கொல்லியாக மாறிவிட்ட சிங்கம்தான். எத்தனை தான் இருக்கிறது என தெரியாமலேயே வேட்டையாடுவேன் என பெண் பொறியாளர் சொல்லுகிறார். ஆனால் பழங்குடி தலைவர் காட்டுக்குள் உள்ள ராஜூ என்ற பழங்குடி ஆளை சிங்கத்தை வேட்டையாட கூட்டி வருகிறார். அவருக்கும் பெண் பொறியாளருக்கும் உள்ள தொடர்பு என்ன, சிங்கத்தை வேட்டையாடினார்களா இல்லையா என்பதே கதை. படத்தில் சிரஞ்சீவியை விட அதிக காட்சிகளில் கிராபிக்ஸ் சிங்கம் ஒன்றுதான் நடமாடுகிறது. ஆனால் எதற்கு என்றுதான் தெரியவில்லை. பழங்குடிகள் சிங்கத்தின் மூலம் கொல்லப்படுவதை தடுக்க ராஜூ எடுக்கும் முயற்சிகள் என்பது ஒரு கதை. அடுத

ஆற்றில் பயணிகளை முதுகில் சுமக்கும் யமராஜா! உத்தர்காண்ட்டில் புதுமை மனிதர்!

படம்
        sample picture cc       யமராஜா உத்தர்காண்ட் மாநிலத்திலுள்ள திவானி ராமுக்கு ஐம்பது வயதாகிறது . அவர் பங்காபானி பகுதியில் வசிக்கிறார் . பருவகாலங்களில் மக்கள் ஆற்றைக் கடக்க முப்பது ஆண்டுகளாக உதவிவருகிறார் . ஊர் மக்கள் அவரை யமராஜா என்று அழைக்கின்றனர் . சிலசமயம் இந்த வேலைக்கு எருமையில் ஏறி வருவதால் இந்த பெயர் அவருக்கு சூட்டப்பட்டுள்ளது . ஆற்றைக்கடக்க நினைப்பவர்களை முதுகில் தூக்கிக்கொண்டு நடக்கும் துணிச்சல்காரர் இவர் . ஆற்றில் ஒருவரைத் தூக்கிக்கொண்டு நடப்பது என்பது சாதாரண பணியல்ல . வழுக்கும் பாறைகள் , நீரின் கணிக்கமுடியாத வேகம் என நிறைய பிரச்னைகள் உள்ளன . பதினான்கு வயதில் ராமுவுக்கு அவரது தந்தை ஆற்றில் நடக்க சொல்லித் தந்திருக்கிறார் . பல்வேறு பருவகாலங்களில் தனது பணியை நிறுத்தாமல் செய்துவருபவருக்கு , இப்போது அவரின் மகனும் துணையாக இருக்கிறார் . தனது சேவைக்கு குறிப்பிட்ட கட்டணம் தாண்டி அதிக பணத்தை எப்போதுமே ராம் நாடியதில்லை . பல்வேறு தொழிலாளர்கள் , அதிகாரிகள் , சுற்றுலா பயணிகள் ஆகியோருக்கு இலவசமாகவே ஆற்றைக் கடக்க உதவுகிறார் . தற்போது ஆற்றைக் கடக்க அரசு இப்போது

பாலம் கட்டிய கிராமத்து மக்கள் - இது கர்நாடக நமக்கு நாமே முயற்சி!

படம்
நமக்கு நாமேதான் உதவி! மத்திய அரசு, மாநில அரசு என நம்பாமல் தம்முடைய வாழ்க்கையை தானே தோளில் சுமக்க முடியும் என நம்புகிறவர்கள் தென்னிந்தியர்கள். இதனால்தான் எத்தனை இக்கட்டான நிலையிலும் அரசு கைவிட்டாலும் கடவுளே கைவிட்டாலும் மனிதர்கள் உதவுகிறார்கள். இதற்கான எடுத்துக்காட்டுகளை இயற்கைப் பேரிடர்களில் நாம் காணலாம். தற்போது கர்நாடகத்திலும் இத்தகைய நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இம்மாநிலத்திலுள்ள சிவமோகா மாவட்டத்திலுள்ள பிராமணகெபிகே என்ற ஊரில் மழை வெள்ளத்தில் பாலம் ஒன்று உடைந்து நொறுங்கிவிட்டது. அதனை சரிசெய்ய அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. உடனே ஊடகங்களிடம் புகார் சொல்லாமல், கிராமத்தினரே களமிறங்கி கிடைக்கும் பொருட்களை வைத்து தற்காலிகமாக பாலத்தை கட்டியிருக்கிறார்கள். காலை 7.30க்கு வேலையைத் தொடங்கி மாலை 4.30க்கு வேலையை முடித்துவிட்டனர். பின்னே தினசரி வேலை நடக்கவேண்டுமே! கிராம பஞ்சாயத்து 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்து இந்த பாலத்தைக் கட்டியுள்ளனர். ஏன் கட்டவேண்டும் என்ற கேள்வி கூட உங்களுக்குத் தோன்றலாம். அரசு அதிகாரிகள் பசி என்ற உணர்வு தோன்றும் முன்பே உணவுத்தட்டுகள் அவர்கள் முன்