சந்த நயம் கொண்ட அழகான காதல் பாடல்கள்! - பாவேந்தரின் காதல் பாடல்கள்
பாவேந்தரின் காதல் பாடல்கள் கவிஞர் பாரதிதாசன் மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் மதுரை புரோஜெக்ட் என்ற பெயரில் சங்க இலக்கியங்கள் அனைத்தும் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கும்படி தன்னார்வலர்கள் செய்திருக்கிறார்கள். அதை வேண்டுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம். பிடிஎப் அதிக நினைவகத்தை பிடிக்கும் என நினைத்தால், ஹெச்டிஎம்எல் கோப்பாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பாவேந்தர் பாரதிதாசனின் காதல் பாடல்கள் அனைத்துமே அழகானவை. சந்த நயமும், எதுகை மோனையும் கூட பாடல்களுக்கு அழகு சேர்ப்பவையாக, அணிகலன்கள் போலவே அமைந்துள்ளது. அதேசமயம், தமிழுக்கு தமிழ்நாட்டிற்கு ஆபத்து எனும்போது எரிமலையின் லாவா குழம்பு கொதிப்பதைப் போல பாடல் வழியாக கொதிக்கிறார். காதல் பாடல்களில் எப்படி அரசியல், புரட்சி, போராட்டம் என வரும் என சிலர் காரண காரியம் கேட்பார்கள். அதெல்லாம் அப்படித்தான். இந்தி திணிப்பு பற்றிக்கூட தீமனத்து வடக்கர், நம் கால்மாட்டில் நிற்கின்றார் என எச்சரிக்கை செய்கிறார். இன்றுவரை வரைக்கும் அந்த தீமனம் வருந்தவில்லை. மனம் மாறவில்லை. அனைத்து பாடல்களுக்குமான தலைப்பு எளிமையானது. பாடல்கள் செந்தமிழில் எழுதப்...