இடுகைகள்

விலங்குகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அகதிவேலியால் உணவின்றி தவிக்கும் விலங்குகள்!

படம்
  அகதி வேலியால் பாதிக்கப்படும் உயிரினங்கள்! போலந்து நாடு, பெலாராஸ் நாட்டிலிருந்து வரும் அகதிகளைத் தடுக்க வேலி அமைத்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியா வழியாக வரும் அகதிகளை தடுப்பதே இதன் நோக்கம். இந்த வேலி பியாலோவிசா (Białowieża Forest) எனும் காட்டின் இடையே அமைக்கப்படுகிறது. தொன்மையான காடான இங்கு, 12 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய இடமாக பியாலோவிசா காடு அறிவிக்கப்பட்டுள்ளது.  போலந்து மற்றும் பெலாரஸ் இடையே கட்டப்படும் வேலியின் நீளம் 130 கி.மீ. ஆகும். இதன் உயரம் 5.5 மீட்டர் ஆகும். உலகம் முழுக்க இப்படி கட்டப்பட்டுள்ள கம்பிவேலி, சுவர்களின் தோராய நீளம் 32 ஆயிரம் கி.மீ. ஆகும். இதன் காரணமாக உணவு, நீர் தேடி உயிரினங்கள் பிற நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் 700 பாலூட்டி இனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  பியாலோவிசா காட்டில் பூஞ்சைகள், மரங்களில் வளரும் பாசி (mosses), பாறைகளில் வளரும் செடி (lichens), பூச்சி வகைகள் ஆகியவை காணப்படுகின்றன.  மேலும் ஐரோப்பிய காட்டெருமை, காட்டுப்பன்றி, ஓநாய், லின்க்ஸ் எனும் பூனை ஆகிய உய

விலங்குகளைக் கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பங்கள்!

படம்
  pixabay விலங்குகளை பின்தொடரும்  தொழில்நுட்பம்!  இன்று நவீன வாழ்க்கையில் உருவாகி வரும் தொழில்நுட்பங்கள், இயற்கையைக் காக்கவும் உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, விலங்குகளின் உடலில் மாட்டும் சிறு ரேடியோ டேக் மூலம் அதன் நடமாட்டத்தை எளிதாக கணிக்கலாம்.  தொழில்நுட்பம் அதிகரித்த அதேயளவு, விலங்குகள், தாவரங்களின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. அதனை கவனத்துடன் பாதுகாக்கும் தேவையும் உள்ளது.  காகபோ (kakapo) இன கிளிகளின் மீது டிரான்ஸ்மிட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த முறையில் 201 கிளிகளும் தொலைவிலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  பருந்து (hawk) ஒன்றின் மீது கேமரா, அல்ட்ராசோனிக் மைக்ரோபோன் பொருத்தப்பட்டது. இதன் வழியாக வௌவால் திரள்களின் நடமாட்டத்தை விஞ்ஞானிகள் கண்காணித்தனர். வௌவால்களின் எதிரொலிப்பு திறனை உள்வாங்கி அதனை தானியங்கி கார்களுக்கு பயன்படுத்துவதே அறிவியலாளர்களின் நோக்கம்.  பருந்து, கிளி மட்டுமல்ல சிறு ஆமைக்குட்டிக்கும் கூட நவீன தொழில்நுட்ப கருவிகளை பொருத்தி அதனைக் கண்காணிக்கும் வசதி வந்துவிட்டது. தொண்ணூறுகளில் ஹவாய் மங் சீல் Hawaiian monk seal) ஒன்றுக்கு கேமரா பொருத்தப்பட்டது. இதில் சென்சார

விலங்குகளும் அதன் கணக்கிடும் திறன்களும்!

படம்
            விலங்குகளும் அவற்றின் திறன்களும் சிங்கம் தனக்கென கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பதில் சிறப்பு பெற்றவை . ஆனால் அதன் எண்ணிக்கை கூடாமல் இருப்பது அதன் பலம் . ஒற்றுமையாக இருப்பதால் , எளிதாக இரையை வேட்டையாட முடியும் . கூடவே தனது எல்லையை எளிதாக பாதுகாக்க முடியும் . ஒரு தனி சிங்கம் 259 சதுர கிலோமீட்டர் தூரத்தை தனது கோட்டையாக பாவித்து காப்பாற்றி வாழும் . இதன் எல்லை மாறிக்கொண்டே இருக்கும் . கூட்டமாக இருப்பதால் பிற சிங்க கூட்டத்தின் தாக்குதலை எளிதாக சமாளிக்க முடியும் . மேலும் சண்டையில் பிற எதிரி கூட்டங்களிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் மனதில் கொண்டு தாக்குதலை நடத்துகிறது . ராணித்தேனீயை மையமாக கொண்ட தேனீக்களின் காலனி எப்போதும் ஆச்சரியப்படுத்துகிற செய்திதான் . நூற்றுக்கணக்கான ஆண் தேனீக்களும் , ஆயிரக்கணக்கான பெண் தேனீக்களும் வாழ்வதற்காக கடுமையாக உழைக்கின்றன . இவை பிற தேனீக்களுடன் தொடர்புகொள்ள குறிப்பிட்ட திசை நோக்கி நடனம் ஆடுகின்றன . குறிப்பிட்ட திசை நோக்கி பறக்கின்றன . இப்படி பறக்கும் விதத்தில் பூக்கள் எவ்வளவு தொலைவில் உள்ளன என்ற தகவலையும் வெளிப்படுத்துகின்

செல்லப்பிராணிகளை குளோனிங் செய்யும் நிறுவனங்கள் வந்துவிட்டன! அடுத்து என்ன - குளோனிங்கில் அடுத்த கட்டம்?

படம்
                  பெருகும் குளோனிங் செயல்முறைகள் குளோனிங் செய்யும் செயல்முறை முன்னர் வேகமாக தொடங்கினாலும் பல்வேறு தடைகள் , விதிகள் காரணமாக தொடர்ச்சியாக நடைபெறவில்லை . ஆனால் தற்போது செல்லப்பிராணிகளை , போலீஸ் நாய்களை , அழியும் நிலையுள்ள விலங்குகளை குளோனிங் செய்து வருகிறார்கள் . முதன்முதலில் டாலி என்ற ஆட்டை குளோனிங் செய்து பிறக்க வைத்தனர் . இப்போது அந்த நிகழ்ச்சி நடைபெற்று 25 ஆண்டுகள் ஆகின்றன . முதலில் இம்முறையை எப்படி பயன்படுத்துவது என தடுமாற்றம் இருந்தது . ஆனால் தற்போது உருவாகியுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் பூனை , ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை வணிகரீதியில் குளோனிங் செய்து தருகின்றன . அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் கர்ட் என்ற குதிரையை குளோனிங் முறையில் உருவாக்கினார்கள் . இந்த இனத்தில் 2 ஆயிரம் குதிரைகள் இருந்தாலும் கூட குளோனிங் செய்வதற்கான தரம் குறிப்பிட்ட இன குதிரை ஒன்றிடம் மட்டுமே இருந்தது . இப்படி நாற்பது ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட செல்களை வைத்து குளோனிங் செய்யப்பட்டது . இந்த கர்ட் குதிரை வளர்ந்து பெரியதாகி இனத்தை பெருக்கும்போது இழந்த மூதாதையர்களின் குணநலன

நினைவுத்திறனை கூட்ட என்ன செய்யலாம்? பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ

படம்
        memory       பதில் சொல்லுங்க ப்ரோ வின்சென்ட் காபோ விலங்குகளுக்கு மதம் உண்டா ? எந்த நாயும் இறைவனைத் தொழுவதில்லை . பிரார்தனை செய்வதில்லை . அதற்கு பதிலாக அவை மனிதர்களைத் தான் பார்க்கி்ன்றன . அன்பைக் கொடுத்தே அனைத்தையும் பெற்றுக்கொள்கின்றன . இறந்த யானைகளுக்கு யானைகள் மரியாதை செலுத்துவதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம் . தங்களுக்கு பிடித்தமாதிரி விஷயங்கள் நடக்கும்போது சிம்பன்சிகள் கூட மகிழ்ச்சி கூத்தாடுவது நடந்திருக்கிறது . ஆனால் அதனை சமயரீதியான சடங்கு என்று கூறமுடியாது . குழுவாக வாழும் அறிவில் சற்று கூடுதல் சமாச்சாரங்கள் கொண்டவை சில குறிப்பிட்ட செயல்களை தொடர்ச்சியாக மரபுரீதியாக செய்கின்றன . நினைவுத்திறனைக் கூட்ட என்ன செய்யலாம் ? வைட்டமின் பி சத்துகளை நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணலாம் . தானியங்கள் , விதைகள் , பீன்ஸ் ஆகிய உணவுகளை அதிகம் எடுத்துக்கொண்டால் , உங்களுக்கு உள்ள நினைவுத்திறன் சார்ந்த பிரச்னைகளை பாதியாக குறைக்கலாம் . தகவல்களை வாக்கியங்களாக கொண்டு பேசிப்பழகலாம் . கிட்டப்பார்வை , தூரப்பார்வைக்கு என்ன வகை கண்ணாடி என்பதை கிட்ட குழி தோண்டி தூர

பசுமைத்திட்டங்கள் நகரங்கள் பாதிப்பைக் குறைக்க வாய்ப்பிருக்கிறதா? பசுமை வளைய திட்டங்கள் தொடக்கம்

படம்
      பிக்சாபே         பசுமை பாதுகாப்பு வளையம் ! பருவச்சூழல் மாறுபாடுகளால் உலக நாடுகள் அனைத்தும் வெள்ளம் , புயல் , வறட்சி , சுனாமி , நிலநடுக்கம் ஆகிய இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன . இதற்கு முக்கியக்காரணம் , அதிகரிக்கும் மக்கள் தொகையும் அதன்விளைவாக வேகமாக அழிக்கப்படும் காடுகளும்தான் . தற்போது இந்தியாவில் காடுகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன . 2100 ஆம் ஆண்டில் மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் பெரு நகரங்களில் வசிப்பார்கள் என்பதால் , நகரில் உள்ள பல்வேறு ஏரிகள் , குளங்கள் , சதுப்புநிலங்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் அவசியம் உருவாகி வருகிறது . ” மனிதர்களின் ஆரோக்கியம் இயற்கைச்சூழலோடு தொடர்புடையது” என்று ஐ . நா . அமைப்பின் தலைவர் அன்டானியோ குடாரெஸ் கூறியுள்ளார் . இயற்கைக் சூழல் பற்றி ஐ . நா அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது . அதில் , இயற்கையின் பன்மைத்துவச்சூழல் அழியும்போது , நுண்ணுயிரிகள் விலங்குகளிடமிருந்து மிக எளிதாக மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டது . தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இயற்கைச்சூழலை பாதுகாப்பதற்கான பணிகளை

தாய்லாந்தில் பிளாஸ்டிக் தடை! - 2021இல் நாடு முழுக்க அமலாகிறது

படம்
giphy தாய்லாந்தில் இந்த புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் தடை அமலாகிறது. மேலும் இந்த தடை தற்போது சிறப்பங்காடிகளுக்கும், அடுத்த ஆண்டு பிற சிறு கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. தாய்லாந்திலுள்ள ஆமைகள், மீன்கள் உள்ளிட்ட உயிரிகள் பிளாஸ்டிக்கை தவறுதலாக உண்டு செரிக்க முடியாமல் இறந்து போயின. மேலும் கடலில் கூடும் பிளாஸ்டிக் கழிவுகளையும் அந்நாட்டு அரசு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் எறிவதில் உலகளவில் எங்கள் நாடு முன்னர் மூன்றாவது இடத்தில் இருந்தது. இன்று மக்களின் ஆதரவினால் ஐந்து மாதங்களில் நாங்கள் பத்தாவது இடத்திற்கு வந்துவிட்டோம் என்று பெருமையாக பேசுகிறார் சுற்றுச்சூழல் அமைச்சர் சில்பா ஆர்ச்சா. பிளாஸ்டிக் தடை என்றால் என்ன நடக்கும்? அதேதான். நீங்கள் துணிப்பை கொண்டுபோய் பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். அல்லது கடைக்கார ர்கள் கொடுக்கும் பையை காசு கொடுத்து வாங்கிப் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் தற்போது தாய்லாந்து நிலைமை. கடந்த ஆண்டில் 5,765 டன்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பயன்பாடு தற்போது பெருமளவு குறைந்துள்ளது. இன்னும் கிராம பகுதிகளில

உளவு பார்க்கும் விலங்குகள் - பயிற்சி கொடுக்கும் அமெரிக்கா!

படம்
giphy தெரிஞ்சுக்கோ! விலங்குகளை உளவு பார்க்க பயன்படுத்துவது தொன்மைக் காலத்திலிருந்து நடைபெற்று வருகிற சங்கதி. மனிதர்கள் என்றால் உடனே போட்டுத்தள்ளி விடுவார்கள். ஆனால் புறா, கிளி, மீன் என்றால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. நஷ்டம் குறைவு. எனவே, உளவு பார்க்க விலங்குகளை அனைத்து நாட்டு ராணுவங்களும் பயிற்றுவிக்கின்றன. ஐஎஸ் தீவிரவாதி தலைவரையும் இம்முறையில் உளவு பார்த்து நாயை விட்டு கண்டறிந்தது அமெரிக்கப்படை. அண்மையில் பெலுகா திமிங்கலம் நார்வேயில் பிடிபட்டது. அதில் செயின் பீட்டர்ஸ்பர்க்கின் சொத்து என எழுதப்பட்டிருந்தது. அனைவரும் ரஷ்யாவை குற்றம் சாட்ட, எங்களுக்கும் அந்த மீனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என காசை வெட்டிப்போட்டது போல ரஷ்யா பேசியது. டேட்டா அமெரிக்காவில் 2012ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஸ்பாவார் அமைப்பு,  85க்கும் மேற்பட்ட டால்பின் மீன்களை உளவு பார்க்க பயிற்றுவித்து வருகிறது. மேலும் இந்த அமைப்பு 50 கடற்சிங்கங்களை - வால்ரஸ்  கட்டுப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் நாட்டிலிருந்து இந்தியா எல்லைக்குள் 4.5 கி.மீ. பறந்து வந்த புறாவை இந்திய அதிகாரிகள் கைது செய்தனர். எப்போது

தலைமுடியால் நமக்கு அலர்ஜி ஏற்படுமா?

படம்
மிஸ்டர் ரோனி நமது தலைமுடி நமக்கு அலர்ஜி ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதா? அலர்ஜி என்பது விலங்குகளின் அல்லது நமது தலைமுடியால் ஏற்படும் வாய்ப்பு இல்லை. காரணம், அவற்றில் கெராட்டின் என்ற புரதம் மட்டுமே இருக்கிறது. ஆய்வுப்படி இதில் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தப் பொருட்களும் கிடையாது. ஆனால், விலங்குகளின் எச்சில், தோல் செல்கள் நமக்கு அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்பு ள்ளது. விலங்குகளின் முடி நமது உடலுக்குள் சென்றால் அவை பாதிப்பை ஏற்படுத்தலாம். அதுவும் பெரியளவு பாதிப்பு இருக்காது. நன்றி - சயின்ஸ் ஃபோகஸ்