இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரஷ்ய கடத்தல் ஆயுதங்களை விற்கும் தேசத்துரோகியை துரத்தும் சிஐடி ராபின் - மார்வின் - வேதாள வேட்டை - முத்து காமிக்ஸ்

படம்
  # திருப்பூர் புத்தகத் திருவிழா 2023 # தமிழக அரசு - பின்னல் புக் ட்ரஸ்ட்  சிஐடி ராபின் ஆடும்  வேதாள வேட்டை  முத்து காமிக்ஸ்  ரூ. 50 கதை - மோரெட்டி மிக்னாகோ ஓவியம் - ஃபியோரென்டினி - பஸ்டிச்சி - பேசானி மூலக்கதை - செர்ஜியோ போனெல்லி நிறுவனம்  காமிக்ஸ் கதையின் தொடக்கம். அதில் ஒருவர் இன்னொருவரிடம் ஆயுதம் வாங்க வந்திருக்கிறார். போலிச்சரக்கு கொடுத்து தன்னை ஏமாற்ற வேண்டாம் என சொல்லுகிறார். ஒருவர் பெர்ரி, இவர்தான் ஆயுதத்தை ஸோம்பி என்பவருக்கு விற்கிறார். ஸோம்பி ஒரு கொலைகாரர் . அவரை ராபின், மார்வின் ஆகிய டிடெக்டிவ்கள் கைது செய்யத் தேடிக்கொண்டிருக்கின்றனர். ஆயுதத்தை ஸோம்பி பெர்ரியிடம் பணம் கொடுத்து வாங்கும் தொலைவில் சற்றுத் தள்ளி அவர்களை ராபின் - மார்வின் இணை நோட்டம் விட்டுக்கொண்டிருக்கிறது.   இவர்களுக்கு இடையில் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் ஸோம்பி, நெற்றியில் தோட்டாவை வாங்கிக்கொண்டு சாகிறான். பெர்ரிக்கு தோட்டாக்காயம் பட்டு வாழ்வா சாவா என்ற நிலை. அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ஆயுதங்களை ராபின் - மார்வின் இணை பெருமையாக பறிமுதல் செய்கிறது. ஆனால் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் எப்படிப்பட்ட வ

சுவனபதியின் கீழே ஓடும் ஆறு - புதிய மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்
 

காதலியின் ஆவியைச் சுமந்து திரியும் சக்தி வாய்ந்த சிறுவனின் வாழ்க்கை - ஜூஜூட்சு கைசென்

படம்
  இறுதிப் போர் வில்லன் ஜூஜூட்சு கைசென் 0 - நான்கு நண்பர்கள் ஜூஜூட்சு கைசென் அனிமேஷன் யூடா என்ற சிறுவன் ஜூஜூட்சு ஹை எனும் பள்ளிக்கு வருகிறான். இவன், அழிவு சக்தியை தன்னுடைய உடலில் கொண்டிருக்கிறான். இவனை கிண்டல் செய்யும் பள்ளி நண்பர்களை தனது ரிகா சான் என்ற சக்தி மூலம் அடித்து துவைத்ததில் பலருக்கும் வெண்டிலேட்டர் வைக்கும் நிலை.   அனிமேஷனில் முதல் காட்சியே தெருவிளக்கை கீழிருந்து காட்டும் காட்சிதான். இந்த படம் நெடுக இதுபோல நிறைய காட்சிகள் உள்ளன. அதிக சண்டைக்காட்சிகள் கொண்டுள்ள படம். படத்தின் கான்செப்ட் என்னவென்றால், ஒருவர் பிறர் மீது காட்டும் அன்பு, கோபம், வருத்தம், வன்மம், பழிக்குப்பழி உணர்ச்சி என இவை அழிவு சக்திகளை உருவாக்குகின்றன. இப்படி உருவாக்குபவர்கள் எல்லாம் தங்கள் சக்தியை கட்டுப்படுத்த முயலவேண்டும். இல்லாதபோது அது உலக மக்களை அழிக்கும் ஆபத்தாக மாறும். யூடாவை தனது பள்ளியில் சேர்க்கும் ஆசிரியர், அவனுக்குள் இருக்கும் சக்தியைக் கட்டுப்படுத்த நினைக்கிறார். இதற்கான பயிற்சிகளைக் கொடுக்கிறார். இப்படித்தான் அவனுக்கு பாண்டா கரடி, சாப வார்த்தைகளை வீசும் இனுமாகி சான், பேசுவதை விட கத்தி பொ

அல வைகுந்தபுரத்தின் தொடர்ச்சியாக கதையை உருவாக்கினால்... தமாக்கா - ரவிதேஜா, ஶ்ரீலீலா

படம்
  தமாக்கா ரவிதேஜா, ஶ்ரீலீலா, தணிகெலா பரணி பின்னணி இசை, பாடல்கள் – பீம்ஸ் சிசிரிரோலியோ பீப்பிள்ஸ் மார்ட் எனும் நிறுவனத்தின் தலைவர் இயக்குநர், புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். அப்போது, அவர் கலந்துகொள்ளும் நிறுவன சந்திப்பில் தான் இரண்டு மாதங்கள்தான் உயிருடன் இருப்பேன் என கூறிவிடுகிறார். இதனால் அவரது நிறுவனத்தை வாங்க ரௌடி தொழிலதிபர் முயல்கிறார். அவரது முயற்சியை பீப்பிள்ஸ் மார்ட் நிறுவனத்தின் தலைவரின் மகன், ஆனந்த் சக்ரவர்த்தி தடுக்க நினைக்கிறார்.   இவரைப் போலவே உருவத்தில் உள்ளவர் ஸ்வாமி. இவர் டயப்பர் நிறுவனத்தில் வேலையிலிருந்து நீக்கப்பட்டு வேலை தேடி வருகிறார். ஸ்வாமிக்கும், ஆனந்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதே கதை. அல வைகுந்தபுரம்லோ படத்தில் வரும் பண்டு எனும் அல்லு அர்ஜூன் பாத்திரத்தை யோசித்துக் கொள்ளுங்கள். அவர் பிறந்த இடம் வேறு. ஆனால் வாழும் இடம் வேறு. இரண்டு இடங்களிலும் அவருக்கு பாசம் வேண்டும். அவர் யாரையும் விட்டுக்கொடுக்க முடியாது. அதே பாத்திரத்தைத்தான் ரவிதேஜா எடுத்துக்கொண்டு நடித்திருக்கிறார். அதிலும் அல வைகுந்தபுரத்தில் வரும் நடிகர்களையே திரும்ப நடிக்க வைத்து அதே அதிர்வை ம

15 வயது சிறுமியைக் காக்க மாஃபியா குழுக்களோடு போராடும் அடியாள்! தி என்ஃபோர்சர்

படம்
  தி என்ஃபோர்சர் 2022 மாஃபியா கும்பலில் வேலை செய்யும் அடியாள், அதற்கு எதிராக திரும்பினால் என்னாகும்…. படத்தின் கதையில் புதிய விஷயம் ஒன்றுமில்லை. ஏராளமான படங்களில் பார்த்த கதைதான். அண்டானியோ பண்டாரஸ் நடித்திருக்கிறார் என்பதே படம் பார்ப்பதற்கு முக்கியமான காரணம். பாராகுடா என்ற கூலிப்படை ஆளாக நடித்திருக்கிறார். கொலை, வெட்டுக்குத்து, மிரட்டல் வேலைகளை செய்து வருபவர் பாராகுடா. இவர் மனைவி ஓவியக்கண்காட்சி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். மகள் பள்ளி ஒன்றில் படிக்கிறாள். ஆனால் இவர்கள் யாருக்கும் பாராகுடா செய்யும் பாவ வேலை பிடிக்கவில்லை. ஆனால் பாராகுடா அதைவிட்டு வெளியே வரமுடியாத சிக்கலில் இருக்கிறார். இந்த நிலையில் ரிக்கி என்ற தெருச்சண்டை போடும் இளைஞரை சந்திக்கிறார். அதாவது, பாராகுடாவின் பெண் முதலாளி புதிய அடியாளை தனது நிறுவனத்திற்கு கொண்டு வர நினைக்கிறார். இதற்காக தெருச்சண்டை போடும் ரிக்கியை த் தேர்ந்தெடுக்கிறார். இவர், அவருக்கு விசுவாசமாக நடந்துகொண்டாரா, பாராகுடாவின் தனிப்பட்ட வாழ்க்கை என்னவானது என்பதே கதை. படத்தில் வன்முறையை விட மனிதர்களுக்கு இடையிலான பாச, நட்பு உணர்வுகளுக்கே இயக்குநர் ம

யூதமக்களின் வாழ்க்கையை உலகப்போர் பின்னணியில் அங்கதமாக விவரிக்கும் நாவல்! ஷோஷா - ஐசக் சிங்கர்

படம்
  ஷோஷா ஐசக் பாஷாவிஸ் சிங்கர் தமிழில் கமலக்கண்ணன் போலந்து நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஐசக் பாஷாவிஸ் சிங்கர் இத்திய மொழியில் எழுதிய நாவல். தமிழில் கமலக்கண்ணன் வெகு சிரத்தையெடுத்து மொழிபெயர்த்திருக்கிறார்.   போலந்து நாட்டில் உள்ள யூதக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஆரோன் கிரடிங்கர். இவர்கள் யூத மத ராபி குடும்பம். இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஆரோன், இன்னொரு மதம் சார்ந்த பஷிலி – செல்டிக் ஆகியோரின் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுகிறான். பஷிலியின் பெண்தான் ஷோஷா. இவள் புத்திசாலி கிடையாது. ஆனால் ஆரோன் சொல்லும் கதைகளையெல்லாம் பொறுமையாக கேட்பவள். ஆரோனுக்கு மிக நெருக்கமான அவனை கிண்டல் செய்யாத தோழி, அவள் மட்டுமே. ஆரோன் தனது அப்பா படிக்க கூடாது என்று சொல்லும் நூல்களை படித்துத்தான் தனது இலக்கிய வாழ்வை தொடங்குகிறான். அவர்களது குடும்பம் பிழைக்க பல்வேறு இடங்களுக்குச் செல்கிறது. ஆரோனின் தம்பி யூத மத வழக்கப்படி ராபி ஆகிறான். ஆனால் ஆரோன் இலக்கியவாதியாக எழுத்தாளனாகிறான். தமிழ் எழுத்தாளர்கள் தமிழ்நாட்டில் எழுதிய நூல்களின் ராயல்டிக்கு ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்கும் நிலை. போலந்திலும் கூட அப்படித்

மாயத்தன்மையும் வசீகரமும் கொண்ட சிறுகதைகள் - சரீரம் - நரன்- சால்ட் பதிப்பகம்

படம்
  சரீரம் -நரன்- சால்ட் பதிப்பகம் சரீரம் நரன் சிறுகதைகள் சால்ட் பதிப்பகம் நன்றி – ஆலிவர் ஜென், திருவண்ணாமலை   2019ஆம் ஆண்டு வெளியான சிறுகதைகள். சரீரம் என்ற இத்தொகுப்பில் பதினோரு கதைகள் உள்ளன. நூலின் வடிவமைப்பு, கட்டமைப்பு மிகவும் கச்சிதமாக புதியதாக உள்ளன.   அனைத்து சிறுகதைகளும் மாயத்தன்மை கொண்டுள்ளன. கதைகளை வாசிப்பவர்கள் அதிலுள்ள மாய வசீகரத்தில் இழுக்கப்படுகிறார்கள். நூலை முழுமையாக படித்து முடிக்கும் வரை அதிலிருந்து மீள முடிவதில்லை. நூலின் முதல் கதையிலும், அமரந்தா எனும் கடைசிக்கு முந்தைய கதையிலும் அமரந்தா பாத்திரம் வருகிறது.   உடல் எனும் முதல் கதையில் சங்கரன் பார்த்த அக்காவின் உடல் எப்படி அவனை பித்து பிடிக்க வைக்கிறது என்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார். அமரந்தா கதையில் அவளுக்கு எப்படி உடலே பெரும் பாரமாக மாறுகிறது என்று ஆசிரியர் காட்டியிருக்கிறார்.   அமரந்தாவின் தோழன் அபு அவளின் கை பற்றி அவளோடு சென்னை பயணப்படும் நிகழ்ச்சி, கதைக்குப் பொருத்தமானதாக அழகாக இருந்தது. அந்த காட்சியை அப்படியே காண்பது போல இருக்கிறது. இரண்டு கதையில் வரும் அமரந்தாவுமே பிறரது மனதை ஆழமாக   உள்ளே பார்

விளம்பர இடைவேளை - ஃப்ரீதமிழ்இபுக்ஸ்- இன்டர்நெட் ஆர்ச்சீவிலுள்ள நூல்கள்

படம்
  மேற்கண்ட நூல்களின் பெயர்களை ஃப்ரீதமிழ்இபுக்ஸ் வலைத்தளத்தில் தட்டச்சு செய்து தேடினாலே நூல்களை எளிதாக பெறலாம். தரவிறக்கி வாசிக்கலாம். பிறருக்கும் எளிதாக பகிரலாம். தரவிறக்கும் பக்கத்தில் கீழே இன்டர்நெட் ஆர்ச்சீவ் இணைய முகவரி இருந்தால், நூலை தரவிறக்காமல் இணையத்தில் நேரடியாக நூலைப் போலவே பிரித்து வாசிக்கலாம்.  இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்திலும் ஆராபிரஸ் வெளியீடான இலவச நூல்களைத் தேடிப் பெறலாம். அங்கேயே நூலை பிரித்து வாசிக்கலாம். தேவையான  நூலின் பெயரை தட்டச்சு செய்யுங்கள்.   தம் வலைத்தளத்தில் புதிதாக தேடுதல் வசதியை சேர்த்த ஃப்ரீதமிழ்இபுக்ஸ் குழுவினருக்கும், வழிகாட்டுதலை அளித்த கணியம் சீனிவாசன் அவர்களுக்கும் நன்றிகள் கோடி.....

மனமுதிர்ச்சி அடைந்தவர்களால் குற்றங்களைச் செய்யமுடியாது!

படம்
  குறிப்பிட்ட இடைவெளியில் ஒருவர் பிறருக்கு தெரியாதபடி குற்றங்களை செய்து வரலாம். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அவர் வேறு வாழ்க்கையை வாழலாம். அவருக்கு மனைவி, குழந்தைகள் இருக்கலாம். விடுமுறை என்றால் காரை எடுத்துக்கொண்டு முருகன் கோவிலுக்கு போகலாம். புனித தலங்களுக்கு செல்லலாம். ஆனால் தான் செய்யும் குற்றச்செயல்கள் என்பது பாதிக்கப்படாதபடி தனியாக வைத்துக்கொண்டு இயங்குபவர்களாக இருப்பார்கள். வெளியில் உள்ள பல்வேறு அழுத்தங்களுக்கு பணிந்துவிடாதபடி குற்றவாளிகளின் செயல்பாடு இருக்கும். இவர்கள் தங்களின் இரக்கமில்லாத இயல்பு, கொலை செய்யும் பண்பு ஆகியவற்றை மறைத்து தனிப்பட்ட ஒழுக்கத்துடன் செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள். இதற்கு மூளையில் அவர்களுக்கென தனி கட்டுப்பாடு இருக்கிறது என விசாரணையில் கூறியிருக்கிறார்கள். இந்தக் கருத்தை 1966ஆம் ஆண்டு ரோட்டர் என்ற உளவியலாளர் லோகஸ் ஆஃப் கன்ட்ரோல் என்ற வார்த்தை மூலம் குறிப்பிட்டு வரையறை செய்தார். வெளி உலகத்தில் ஏற்படும் தாக்கத்திலிருந்து தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதில் குற்றவாளிகள் திறமையாக செயல்பட்டனர் என்பது உண்மை. குற்றவாளிகள், குற்றவாளிகள் அல்லாதோரை விட உள்மன ஆற்ற

ஒருவர் குற்றங்களைச் செய்ய தயங்குகிறார் - அதற்கு என்ன காரணம்?

படம்
  ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவரது முன்னே உள்ள மேசையில் நிறைய ஆயுதங்கள் உள்ளன. கத்தி, ஆணி, சுத்தி, கோடாரி, சாட்டை, கயிறு என நிறைய பொருட்கள். அனைத்துமே ஒருவரை தாக்குவதற்கும் சித்திரவதை செய்வதற்குமானது. நாற்காலியில் அமர்ந்திருப்பவர், தன் எதிரே இருப்பவரிடம் சொல்லுகிறார்.  மேசையில் உள்ள எந்த பொருட்களை வேண்டுமானாலும் எடுத்துக்கொள். என் மீது பயன்படுத்து என்கிறார். இப்படி சொல்லப்படும்போது எதிராளி என்ன செய்வார்? தான் செய்வதை பிறர் பார்த்தால் கவனித்தால் நிச்சயம் நாற்காலி மனிதரை தாக்க மாட்டார். ஆனால் யாரும் கவனிக்கவில்லை என்றபோது நிச்சயம் ஆயுதங்களை பயன்படுத்த மனம் அரும்பாடு படும். அதை தடுத்து நிறுத்தும்போதுதான் நம் மனது பற்றிய தெளிவு கிடைக்கும். மேலே சொன்ன சோதனை அகிம்சை பற்றி உண்மையாகவே நடத்தப்பட்டதுதான். அறம், நீதி, குற்றம் என்பதெல்லாம் நாம் மெல்ல உலகைப் புரிந்துகொண்டு வாசித்து பிறரை பார்த்து அறிந்துகொண்டு வாழ்வதுதான். குற்றம் செய்வதில் ஏற்படும் தடைகள் பற்றி பார்ப்போம். தண்டனை காரணமாக ஏற்படும் ஒழுக்கம். அரசு, குறிப்பிட்ட குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்குகிறது., இல்லையெனில் ஆயுள

சூரியனைப் போற்றுவதென்பது.. புதிய மின்னூல் வெளியீடு - இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளம்

படம்
  குங்குமம் வார இதழில் பணியாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என முதலில் நினைக்கவில்லை. கோகுலவாச நவநீதன் தலைமை உதவி ஆசிரியராக இருந்த காலம் அது. திரு.முருகன் அப்போது குழும இதழ்களின் முதன்மை ஆசிரியர். அவர்தான் என்னை முத்தாரம் இதழுக்கான உதவி ஆசிரியராக தேர்ந்தெடுத்தார். குறைந்த சம்பளம், ஏராளமான வேலைகள் எனக்கு பரிசாக கிடைத்தன.  எனக்கு அன்றிருந்த பெரிய மகிழ்ச்சி, வெள்ளி மலரில் சினிமா கட்டுரைகள், தொடர் எழுதிக்கொண்டிருந்த எனது வழிகாட்டியாக நினைத்த திரு. கே.என்.சிவராமன் சாரை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பும், காலை வணக்கம் சொல்லும்போது அவரின் முகத்தை பார்க்க முடியும் என்ற மனநிறைவும்தான்.   மொழிபெயர்ப்பு என்பது நானாக முனைந்து கற்றுக்கொண்டதுதான். அதில் நிறைய பிழைகள் உண்டு. தவறுகள் உண்டு. முத்தாரத்தில் உதவி ஆசிரியராக இருந்தபோதும் கூட எனது பெயரில் கட்டுரை வருவது கடினமாக இருந்தது. அதற்கென வெளியில் இருந்து வரும் பல்வேறு தகவல்களை படித்து சரிபார்த்து போட்டால் போதும் என்பதும் முதன்மை ஆசிரியரின் உத்தரவு. குங்குமத்தில் பணியாற்றியவரான இன்னொரு நபர் உடல்நிலை குறைவால் விடுப்பு எடுக்கத் தொடங்க, குங்குமத்த

லத்தீன் அமெரிக்க நாடுகளை மோட்டார் சைக்கிளில் சுற்றிய சேகுவேராவின் அனுபவம்! மோட்டார்சைக்கிள் டைரீஸ்

படம்
  மோட்டார் சைக்கிள் டைரிஸ் சேகுவேரா நன்றி புக் பை வெயிட், சங்கரா ஹால், ஆழ்வார்பேட்டை, சென்னை சேகுவேரா அவரது நண்பர் ஆல்பெர்டோவுடன் செல்லும் பயண அனுபவம்தான் நூலாகியிருக்கிறது. இருவரும் மருத்துவர்கள். காசநோய் சார்ந்த பிரச்னைகளை செல்லும் இடங்களில் தீர்க்க முயல்கிறார்கள். முக்கியமாக மோட்டார் சைக்கிளில் சாலை வழியாக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு பயணிக்கிறார்கள். சாலை வழியாக பயணிப்பது என்றாலே நிறைய பிரச்னைகள் எழும். தங்குவது, சாப்பிடுவது, வாகனம் பழுதானால் அதை சரி செய்வது, சோதனைச் சாவடி, நாட்டின் எல்லையில் ஏற்படும் இடர்ப்பாடுகள்,   பணப் பற்றாக்குறை, நோய்கள் என அனைத்தையும் எதிர்கொள்கிறார்கள். இந்த அனுபவத்தின் வழியாக பல்வேறு மனிதர்களை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். நல்லவை,   அல்லவை என இரண்டு வகையாகவும் மனிதர்களையும் பார்க்கிறார்கள். அவர்களின் மூலம் பல்வேறு சலுகைகளை, சங்கடங்களை அனுபவிக்கிறார்கள். குறிப்பிட்ட தூரம் நண்பர்கள், தெரிந்தவர்கள், வனத்துறை அலுவலர்கள் என தங்கி செல்கிறார்கள். பிறகு காசு கொடுத்து சரக்கு வாகனத்தில் செல்கிறார்கள். இதில் சேகுவேரா ஆஸ்துமா நோயாளி. அவருக்கு அடிக்கடி மூ

முஸ்லீம்களின் தேசப்பற்றை நிரூபிக்க கட்டாயப்படுத்தும் படம்- கட்கம் - கிருஷ்ணவம்சி

படம்
  கட்கம் தெலுங்கு இயக்குநர் – கிருஷ்ண வம்சி இசை ராக்ஸ்டார் டிஎஸ்பி ஒளிப்பதிவு எஸ்கேஏ பூபதி எடிட்டிங் - ஶ்ரீகர் பிரசாத் ரவிதேஜா, ஶ்ரீகாந்த் மேகா, பிரகாஷ்ராஜ், தேஜ். சங்கீதா, சோனாலி பிந்த்ரே முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் கிடையாது. அப்படி தீவிரவாதிகளாக இருந்தால் அவர்களை ஜெய் பஜ்ரங்பலி என்று சொல்லி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றால் தீவிரவாதத்தை அழித்தே விடலாம் என்று சொல்லியிருக்கிற படம். படத்தில் தொடக்க காட்சியே தீவிரவாதிகளை அறிமுகப்படுத்தி விடுகிறார்கள். இதனால் படம் எந்த கோணத்தில் போகப்போகிறது என புரிந்துகொண்டுவிடலாம். தீவிரவாதி மசூத், அவரை விடுவிக்க தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை திட்டமிடுகிறார்கள். இதை தலைமை தாங்கி நடத்துபவர் அசார். அசார் யார் என்பது படத்தில் முக்கியமான திருப்புமுனை காட்சி. கோட்டி, சினிமா நாயகனாக முயல்பவர். அவரின் தொடக்க காட்சிகள் பல்வேறு சினிமா ஸ்டூடியோக்களிலிருந்து செக்யூரிட்டிகளால் வெளியே தள்ளப்படுவதிலிருந்து தொடங்குகிறது. கோட்டி நடிகர் என்றால் அவரது நண்பர் இயக்குநராக முயல்கிறார். இருவரும் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். வாடகை கூட கொடுக்க முடியா