மனநல சிகிச்சையைப் பயன்படுத்திக்கொள்ளும் சைக்கோபாத்கள்

 






பதற்றம், மன அழுத்தம், தன்னம்பிக்கை இன்மை, கூச்சம் , எதிர்மறையான எண்ணங்கள் ஆகியவை சைக்கோபதி பாதிப்புள்ளவர்களுக்கு உண்டு. இதை பிறர்தான் கண்டுபிடித்து சிகிச்சை தரும்படி இருக்கும். இதை தொடர்புடைய நபர்களுக்கு சொன்னாலும் அவர்கள் அதை ஏற்க மாட்டார்கள். அவர்களின் மனநிலை அமைப்பு அப்படி. உலகை அவர்கள் தங்களது போக்கில் அணுகுவார்கள். பிறரை ஏமாற்றுவார்கள். எதற்கும் கிஞ்சித்தும் இரக்கம், கருணை காட்டமாட்டார்கள். தவறு என்றாலும் வருத்தம் இருக்காது. இந்த மனநிலையில் உள்ளவர்களுக்கு மனநல சிகிச்சையும் பெரிதாக பயன் தராது. அதைப் பெறும்போது சிகிச்சையை ஏற்கும் இயல்பில் இருக்க மாட்டார்கள்.

கரும்பாறை போன்ற மன இயல்பு கொண்டவர்கள். இதனால் அவர்களை யாரும் பெரிதாக செல்வாக்கு செலுத்தி மனதை மாற்றிவிட முடியாது. மனநல சிகிச்சை மையங்களிலும் கூட அவர்களின் உண்மையான இயல்பை அறிவது கடினம்.

சைக்கோபாத்களை அவர்களின் குடும்பம், நண்பர்கள் என காப்பதற்கு இருப்பார்கள். இதனால் அவர்களின் குற்றங்கள் உலகிற்கு உடனே தெரிய வராது. பிடிபட்டாலும் கூட சமூக அமைப்பு, உறவினர்கள், நட்பு, விதி என பழிபோட்டு சென்றுகொண்டே இருப்பார்கள்.

சைக்போபாத்களுக்கு பிறரிடம் உதவி கேட்க பிடிக்காது. அவர்கள் சிறை தண்டனை பெற்றுள்ள சூழலில், பிணை கிடைக்க வேண்டியே மனநல சிகிச்சைகளுக்கு செல்கிறேன் என இசைவார்கள்.

மனநல சிகிச்சைகளை சைக்கோபாத்கள் தங்களை சற்றே ரிலாக்ஸ் செய்துகொள்ளப் பயன்படுத்துகிறார்கள்.இந்த நேரத்தைப் பயன்படுத்தி பிறரை ஏமாற்றவும் முயல்கிறார்கள்.  குழுக்களாக தெரபி வகுப்பு, தனிநபர் வகுப்பு ஆகியவற்றில் அனைவரது சிகிச்சை சார்ந்த விஷயங்களை விட தன்னைப் பற்றிய விஷயங்களையே சைக்கோபாத்கள் பேசுகிறார்கள். இதனால் வகுப்பு முழுக்க ஒருவரின் வாழ்க்கை சார்ந்த விஷயங்களையே மையமாக கொண்டது போல மாறுகிறது. தானாக பேசினாலும் கூட பிறர் சைக்கோபாத்களின் குணங்கள் பற்றி கேள்வி கேட்டால் அதற்கு அவர்கள் பதில் கூறுவதில்லை.

சைக்கோபாத்கள் தெரபி வகுப்பில் கலந்துகொண்டாலும் கூட அவர்களை  திரும்ப வகுப்பிற்கு அழைக்காதபோது அவர்கள் அதிலிருந்து விலகிவிடுவது தெரிய வந்தது. மேலும், சிறையில் இருந்து விடுதலையாகும் போதும், விரைவில் மீண்டும் அங்கு குற்றங்களைச் செய்துவிட்டு வந்துவிடுகிறார்கள். இப்படி சைக்கோபாத் குற்றவாளிகள் சிறை திரும்பும் அளவு பிறரை விட அதிகம்.  இந்த அளவீடு, பிற குற்றங்களை செய்தவர்களோடு ஒப்பீடு செய்து கூறப்படுகிறது.

தெரபி வகுப்பில் இருந்து சென்ற சைக்கோபாத்கள் வன்முறை குற்றங்களில் ஈடுபடும் அளவு நான்கு மடங்காக இருக்கிறது. தெரபி வகுப்புகளில் இவர்களுக்கு பெரிய நன்மை ஏதும் கிடையாது. வன்முறை  இயல்பிலிருந்து விலகி இருப்பதாக பிறரை நம்ப வைத்து வெளியே செல்லுவதற்காகவே சைக்கோபாத்கள் தெரபி வகுப்பில் பங்கேற்கிறார்கள்.

தெரபி வகுப்புகளைத் தவறாக பயன்படுத்துபவர்களே அதிகம். அந்த வகையில் அவர்கள் மனிதர்களை எப்படி பேசி ஏமாற்றுவது என தெளிவாக கற்கிறார்கள். அதேசமயம். அவர்கள் சிகிச்சையில் பிறருக்கு இடைஞ்சல் தரும்படி பேசினாலும் தங்களது மனதில் செய்த குற்றங்களைப் பற்றிய எண்ணம், தங்களது குணங்களைப் பற்றியும் கூறுகிறார்கள்.

சிலரிடம் செய்த தவறுகளைப் பற்றி பேசும்போது, அவர்கள் அதில் இருந்து தப்பிக்க மற்றவர்களுக்கு குற்ற உணர்ச்சியை தூண்டிவிட முயல்வார்கள். இதனால் தான் ஒரு அனாதை, அன்பு காட்ட யாருமில்லை, சிறுவயதில் வல்லுறவு செய்தார்கள் என பல்வேறு விஷயங்களையும் பேசுவார்கள். உளவியலாளர்கள் சிலரும் கூட இப்படி குற்றவாளிகள் கூறும் தகவல்களை நம்பிவிடுகிறார்கள்.

சிறையில் தெரபி வகுப்புகளோடு, பட்டய படிப்புகளையும். பட்டப் படிப்புகளையும் கூட படிக்கலாம். இதற்காக ஒருவர் சென்று வருவதன் மூலம் தான் நிறைய விஷயங்களில் மாறிவிட்டதாக பிறருக்கு பிரமையை ஏற்படுத்துகிறார். படிப்புகளை அரைகுறையாக படித்து அதில் உள்ள சில வார்த்தைகளை பேசவும் கற்கிறார்கள். இதனால் தங்களை அந்த துறையில் மேதாவி போல காட்டிக்கொள்வார்கள்.

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்