குற்றங்களை கணக்கீடு செய்வதில் ஏற்படும் தடுமாற்றங்கள், ஆய்வறிக்கை செயல்பாடு

 













பொதுவாக காவல்துறையில் வழக்குகளை எளிதாக பதிய மாட்டார்கள். பதிந்தால் அதை விசாரிக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என நிறைய நடைமுறை பிரச்னைகளை உண்டு.

அதேநேரத்தில் பதிவாகும் வழக்குகளை வைத்துதான் குறிப்பிட்ட வட்டாரத்தில் குற்றங்கள் நடைபெறுகின்றனவா, அதன் சதவீதம் என்ன, குற்றத்தை குறைக்க என்னென்ன விஷயங்களைச் செய்யலாம் என்று அரசு யோசித்து திட்டமிடுகிறது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலகட்டத்தில் இதற்கென தனி அறிக்கைகளை வெளியிடுகிறது.

1970ஆம் ஆண்டு அமெரிக்காவில்  ஹூட், ஸ்பார்க்ஸ் ஆகியோர் செய்த ஆய்வில் மூன்றில் இருபங்கு குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தங்களது அறிக்கையில் கூறினர். அதே சமயம் இங்கிலாந்தில் பதிவான குற்றங்களை ஆராய்ந்தபோது, அதில் கொள்ளை சார்ந்த குற்றச்செயல்கள் எழுபது சதவீதமும், 27 சதவீத குற்றங்கள் சைக்கிள் திருட்டாகவும் இருந்தது.  மோசடி, பாலியல் குற்றங்கள், மோட்டார் சைக்கிள் திருட்டு ஆகியவை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தன.

செல்வாக்கு மிக்க குடும்பங்கள், சாதி, மதம் சார்ந்த பிரச்னைகள் எல்லாம் பெரும்பாலும் ஆவணங்களில் பதிவு செய்யப்படாமலேயே தீர்த்து வைக்கப்படுகின்றன. சாதாரணமாக சொன்னால் இவையெல்லாம் இருதரப்பு ஆட்களை காவல்துறையினர் கூட்டி சமாதானமாக போகச் சொல்வார்கள். வழக்கு போட்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என பேசுவார்கள். இந்தவகையில் வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடும்.  ஒரு வீட்டில் திருட்டு போகிறது. அப்படி நடைபெற்றதை காவல்துறையிடம் புகார் சொல்லாமல் இருக்கிறார்கள். ஏன், ஒன்று அப்படி நடந்த திருட்டை காவலர்கள் கண்டுபிடிக்க முடியாது என நினைப்பது அல்லது அதை கூறும் அளவுக்கு முக்கியம் அல்லவென்று நினைத்து அவர்களாக தீர்த்துக் கொள்வது… ஓரினச்சேர்க்கை, வரி ஏய்ப்பு, போதைப்பொருள் விற்பனை ஆகியவற்றில் பாதிக்கப்படுபவர் யார் என கூற முடியுமா?

 அபாயகரமான குற்றங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அவை குற்ற ஆவணங்களுக்குள் வரவில்லை. இதனை டார்க் ஃபிகர் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். உங்கள் உறவினர் ஒருவர் இருக்கிறார். அவர் கூலி வேலை செய்பவர். உங்கள் வீட்டுக்கு வருபவர் உங்களது செல்போன் ஒன்றை திருடிவிடுகிறார். இதற்காக நீங்கள் அவர் மீது வழக்கு தொடுப்பதில்லை. இப்படி திருடப்படும் பொருட்களின் எண்ணிக்கை பதிவு செய்யப்படும் திருட்டுகளை விட அதிகம். இங்கிலாந்தில் இப்படி டீனேஜ் இளைஞர்களிடம் ஆய்வு செய்ய்பட்டபோது 70 சதவீதம் பேர் கடைகளில் பொருட்களைத் திருடியதும், பதினேழு சதவீதம் பேர் தனியார் இடங்களில் திருட்டுகளை செய்ததும் தெரிய வந்தது.  

1972ஆம் ஆண்டு தொடங்கி அமெரிக்காவில் குற்றங்களைப் பற்றி அறிக்கைகள் வெளிவரத் தொடங்கின. இதற்கடுத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குற்ற ஆய்வு அறிக்கைகள் வெளியாயின. இங்கிலாந்தில் 1983ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வு, வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டது. அதில் பெறப்பட்ட தகவல்களின் சதவீதம் 80 ஆக இருந்தது.

ஆய்வாளர் ஸ்பார்க்ஸ், குற்றங்களில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவது மிக குறைவாக இருந்தது. வன்முறைக் குற்றங்கள் அரியவையாக நடந்துள்ளன என்று தனது முடிவைக் கூறினார். இங்கிலாந்தின் முதல் குற்றவியல் ஆய்வு இப்படித்தான் இருந்தது. இதை அடிப்படையாக கொண்டே பிறர் தங்களது ஆய்வை செய்தனர். இதை வைத்து குற்றம் நடப்பதற்காக வாய்ப்புகளை மேஹியூ போன்ற ஆய்வாளர்கள் கணித்தனர். அதாவது, பதினாறு வயதில் ஒருவர் குற்றம் செய்கிறார், அடுத்து அவர் எப்போது குற்றம் செய்வார் என்ற கணக்கீடு..

ஃபாரன்ஸிக் சைக்காலஜி, கிரிமினாலஜி சைக்காலஜி, லீகல் சைக்காலஜி என மூன்று துறைகள் சைக்காலஜியில் உண்டு. இங்கு பேசப்போவதும் நீங்கள் வாசிக்கப்போவதும் கிரிமினாலஜிகல் சைக்காலஜி மட்டுமே. இதில் மட்டுமே குற்றம், அதில் தொடர்புடையவர்களின் செயல்பாடு ஆகியவற்றைப் பற்றி தெளிவாக பேச முடியும்.  

 

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்