கொலைக்கு காரணம் பலவீனமான நபர்கள்தான் - பொய்யின் பலமும், பலவீனமும்

 












கொலைகளை செய்பவர்கள் மாட்டிக்கொண்டால் என்ன சொல்லுவார்கள்? நான் செய்யவில்லை என்பார்கள். இல்லையென்றால் கொலைக்கு காரணம் கொலையானவர்கள்தான் அவர்கள் தான் அப்படிசெய்ய தூண்டினார்கள் என்று கூட கூறுவது உண்டு. இதெல்லாம் இல்லாமல் நினைவிழப்பு, அம்னீசியா, ஆளுமை பிறழ்வு என்று பலவித நோய்களை சொல்லி தண்டனையிலிருந்து தப்பிக்க முயல்பவர்களும் கூட உண்டு.

 சைக்கோபதி செக்லிஸ்ட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற கைதி ராபர்டிடம் பேசினார். அப்போது அவர், தன்னால் கொலையானவர்களுக்கு நல்ல விஷயம்தான் நடந்துள்ளது என்றார். கொலை செய்த காரணத்தால்தான் கொலை செய்யப்பட்ட தரப்பினரின் பேட்டி, செய்தி, முகங்கள் வெளியில் தெரிந்தன. நாளிதழ்களில் பெண்கள் என்னைப் பற்றி நல்லவிதமாக கூறியிருக்கிறார்கள். சிலர் எனக்கு நன்றி கூட தெரிவித்திருக்கிறார்கள். நான் அவர்களைக் காயப்படுத்தவில்லை என்றுதானே ஆகிறது என நேர்மறையாக பேசினார். 

அலுவலக அரசியல்களால் வேலையிழந்தவர்கள் தங்களைப் பற்றி கழிவிரக்கமாக பேசி புலம்புவதைப் போலவே தொடர் கொலைகாரர்களும் பேசுவது உண்டு. ஆனால் அவர்கள் பேசுவது கொன்றவர்களை விட அவர்களை கொலை செய்த தான்தான் மிகவும் பாவம்… சபிக்கப்பட்டவனாக இருக்கிறேன். பலியாடு ஆக்கப்பட்டேன் என்று கூட பேசியிருக்கிறார்கள். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்களைக் கொன்று வீட்டுக்கு கீழே புதைத்த ஜான் கேசி கூட இந்த ரகம்தான்.

நானே பாதிக்கப்பட்டவன். சிறுவயதில் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன். வேறு ஒருவராக இருந்தால் ஜான் கேசிக்கு இந்த அளவுக்கு பிரச்னையாக என நினைப்பார்கள் என ஜான் கேசி கூறினார்.

நான் என் மனைவியை ஆழமாக விரும்புகிறேன். அவளை இல்லாமல் தவிக்கிறேன். என்னுடைய சிறந்த காதலியையும், தோழியையும் இழந்துவிட்டேன். ஏன் யாரும் எனது இழப்பைப் புரிந்துகொள்ள மாட்டேன்கிறீர்கள் என்று சொன்னவர் யார் தெரியுமா, கென்னத் டெய்லர். இவர் ஒரு பல் மருத்துவர். தேனிலவுக்கு சென்றவர் அங்கேயே மனைவியை அடித்துக் கொன்றார். அதற்குப் பிறகுதான் இப்படியொரு பேச்சு.

 சைக்கோபாத்களுக்கு கருணை, பிறர் மீதான அக்கறை எல்லாம் எப்போதும் இருக்காது. அவர்கள் பாட்டிற்கு தேவைக்கு என்றால் பயன்படுத்திவிட்டு சென்றுவிடுவார்கள். எனவே, அவர்களிடம் நீங்க எல்லாம் மனுஷந்தானே, மனிதநேயம் இல்லையா, தயை, கருணை கூட கிடையாது என பூரி ஜெகன்னாத்தின் வசனங்களைப் பேசினால் எந்த பிரயோஜனமும் இல்லை. மோசமாகத்தான் எதிர்வினை செய்வார்கள். இப்படி பேசிய உங்களது ரத்தம் கூட குடிக்கலாம். எல்லாமே சூழல் அழுத்தங்கள்தான் காரணம்.

சைக்கோபாத்களைப் பொறுத்தவரை யார் பலவீனமாக இருக்கிறார்களோ, உதவி தேவைப்படும் நிலையில் இருக்கிறார்களோ அவர்களைத்தான் குறிவைத்து முதலில் கொல்வார்கள். அதுதான் டாஸ்க்கை எளிதாக முடிப்பதற்கான ஒரே வழி.  நான் ஒரு சிறுவனை சண்டையில் கொன்றேன். நிச்சயம் அவன் அந்த தண்டனைக்கு தகுதியானவன்தான். நான் அதற்கெல்லாம் கவலைப்படவே இல்லை என்று  கைதி ஒருவர் ராபர்ட் ஹரேவிடம் சொன்னார். அந்த பையனை கைதிதான் கத்தியால் குத்தி கொடூரமாக சிதைத்து கொன்றார். 

நோயாளியைப் பார்த்து அவரை காப்பாற்ற சாதாரண மக்கள் துடிக்கலாம். ஆனால் மருத்துவரின் மூளையும், கைவிரல்களும்தான் நோயாளியைக் காப்பாற்றும். அந்த இடத்தில் மருத்துவர் நோயாளி மீது வெற்று இரக்கம் காண்பித்தால் அதனால் என்ன பயன்?

சைக்கோபாத்களில் சிலர் தங்கள் இணையருக்கு தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவரையே வல்லுறவு அல்லது கொலை செய்வதற்கு கொடுப்பதுண்டு. நானே அவன் சொத்துதான். என்னைச் சேர்ந்த அனைத்தும் அவனுக்குச் சேர்ந்தது என நினைக்கும் எஜமான் – அடிமை மனோநிலைதான் இதற்கு காரணம்.

மாற்றிப் பேசுவது, ஒருவரை ஏமாற்றுவது, பேசிய வார்த்தைகளை மாற்றி அர்த்தம் கொள்வது என சைக்கோபாத்களை இதில் வெல்லவே முடியாது. மருத்துவமனையில் சிறு குழந்தைகளை தவறான மருந்து கொடுத்து கொன்றதாக ஜெனின் ஜோன்ஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டது. நான் உணர்ச்சிகரமான பெண். குழந்தைகள் மீது நேசம் கொண்டதற்காக என் மீது பழி சுமத்துகிறார்கள். நான் பலியாடாக மாற்றப்பட்டிருக்கிறேன்.ம உண்மையில் எனது வாயால்தான் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளேன். அதன் மூலமே வெளியே வருவேன் என்று பேசினார். இவர் எழுத்தாளர் பீட்டர் எல்கைண்டிடம் இப்படி பேசினார். இவர் பேசியதை பின்னாளில் நினைவுகூரும்போது, அவர் சொன்ன பல்வேறு விஷயங்கள் நிஜத்திற்கும் பொய்க்கும் இடையில் இருந்தன. சரிக்கும் தவறுக்கும் இடையில் இருந்தன என்று எழுத்தாளர் எல்கைண்ட் கூறினார்.

ராபர்ட் ஹரே மனநலம், தடய அறிவியல் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு ஒன்றை நடத்தினர். அதில் மோட்டார் மவுத் என கேலியாக கூறும் ஒருவர் பற்றிய வீடியோ திரையிடப்பட்டது. அந்த நபர் எட்டு வயதில் வீட்டை விட்டு வெளியே வந்தார். பதினைந்து வயதில் விமானம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றார்.  நான்கு கண்டங்களில் ஒன்பது நாடுகளில் வசித்திருக்கிறார். வனத்துறை அதிகாரியாக ஆறு மாதம் வேலை செய்திருக்கிறார். இரண்டு ஆண்டுகள் கடல்படையில் காவலராக வேலை செய்த அனுபவசாலி. சார்டர் படகு ஒன்றுக்கு கேப்டனாக இருந்திருக்கிறார். இத்தனை வேலை செய்தவர், இப்போது கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருக்கிறார். மேலே சொன்னவற்றை அந்த நபரே உளவியலாளர்களிடம் கூறினார். உண்மையோ, பொய்யோ அவரிடம் எப்போதும் திட்டங்கள் இருக்கின்றன. சைக்கோபாத்களுக்கு பொய் சொல்லத் தெரியும். ஆனால் அதை நிறுத்த தெரியாது. சென்று கொண்டே இருப்பார்கள். பிறர் கண்டுபிடித்தால் என்னாகும் என்பதைப் பற்றி யோசிக்க மாட்டார்கள். ஒருவகையில் அதனால்தான் அவர்களை எளிதாக காவல்துறை பிடித்து சிறையில் அடைக்க முடிகிறது.

புகைப்படங்கள் - ராபர்ட் மாப்பிள்தோர்ப்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்