இடுகைகள்

உடான்ஸா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரண்டாம் உலகப்போரில் உருவான சிண்ட்ரோம் கே! - உண்மையா, உடான்ஸா

படம்
  இரண்டாம் உலகப்போரில் கண்டறியப்பட்ட சிண்ட்ரோம் கே என்பது நோயல்ல! உண்மை. இரண்டாம் உலகப்போர் காலத்தில் இத்தாலி மருத்துவர்களால், சிண்ட்ரோம் கே என்ற நரம்பியல் சார்ந்த தொற்றுநோய் செய்தி உருவாக்கப்பட்டது. உண்மையில் மருத்துவர்கள்  யூதர்களை காப்பாற்ற  முயன்றே இப்படி நோய் பரவி வருவதாக பொய் சொன்னார்கள். இதன்மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யூதர்களை தற்காலிகமாக பாதுகாக்க முடிந்தது.  9 நானாஸ் (The 9 Nanas) என்பது அமெரிக்க பெண்களின் ரகசியக் குழு! உண்மை.  இக்குழுவினர் கெடுதலான செயல்களை ஏதும் செய்யவில்லை. அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தைச் சேர்ந்த 9 பெண்கள்தான் 9 நானாஸ் என்ற ரகசியக்குழு. இவர்கள், தினமும் அதிகாலை 4 மணிக்கு பொதுவான இடத்தில் சந்தித்து, குறிப்பிட்ட அளவு காசு சேர்த்து உணவு, உடைகளை ஏழைகளுக்கு வழங்கி வந்திருக்கின்றனர். இக்குழுவினர், 30 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது கணவர்களுக்குக் கூட தெரியாமல் தங்களது அறச்செயல்பாடுகளை செய்து வந்திருக்கிறார்கள்.  பாலின சமநிலை கொண்ட நாடு, ஐஸ்லாந்து! உண்மை. உலகளவில் எடுக்கப்பட்ட பாலின சமநிலை அறிக்கையில், ஐஸ்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. இதற்கடுத்து, நார்வ

பறவைகளின் உடலிலுள்ள தற்காப்பு ஆயுதங்கள், சிம்பன்சிகளுக்கும் கொரில்லாக்களுக்குமான போர்! -

படம்
  பறவைகளின் உடலில் தற்காப்பு ஆயுதங்கள் குறைவு உண்மை. பறவைகள் பறக்கவே அதிக ஆற்றலை செலவழிக்கின்றன. கூடுதலாக, அதன் உடலில் ஆயுதங்கள் இருந்தால்,அவற்றுக்கு அது கூடுதல் சுமைதான். எனவே பெரும்பாலான பறவைகளின் உடலில் அதிக ஆயுதங்கள் இருக்காது. அதற்கு பதிலாக உடல் நிறமும், அவை எழுப்பும் ஒலியும் அவற்றை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க உதவுகின்றன. கூடுதலாக அலகு, கால்களிலுள்ள விரல் நகங்கள்  பறவைகளுக்கு சண்டையிடும்போது உதவுகிறது.  சிம்பன்சிகளும் கொரில்லாக்களும் ஒன்றையொன்று எதிர்த்து சண்டையிடாது! உண்மையல்ல. 2019ஆம் ஆண்டு, லோவாங்கோ தேசிய பூங்காவில் (Loango national park) வாழ்ந்த 18 சிம்பன்சிகள் திடீரென  5 கொரில்லாக்களைத் தாக்கின. 79 நிமிடங்கள் நடைபெற்ற தாக்குதலில், 2 கொரில்லா குட்டிகள் கொல்லப்பட்டன.  அதே  ஆண்டில், ஆஸ்னாப்ரூக் பல்கலைக்கழகம் மற்றும் மேக்ஸ் பிளாங்க் பரிணாம மானுடவியல் கழகம் ஆகிய இரு அமைப்புகளும் இதுபற்றிய ஆராய்ச்சியை வெளியிட்டன.  https://edition.cnn.com/2021/07/22/africa/chimpanzee-gorilla-attacks-scn-scli-intl/index.html https://nypost.com/2021/07/22/chimps-are-killing-gorillas-unprovoked-for-the

தன்னை பசுவாக உணரும் மனநிலை! - உண்மையா? உடான்ஸா?

படம்
  கொரில்லா மகிழ்ச்சியாக இருந்தால் ஏப்பம் விடும்! உண்மை. இரையாக கிடைத்த உணவில் அதிக பங்கு கிடைத்தால் கொரில்லா குழுவில் உள்ள  கொரில்லாக்கள் ஏப்பம் விடுகின்றன. ஏப்பம் விடுவது நாம் தொண்டையை சரி செய்துகொள்வது போலவே இருக்கும். ஏப்பம் விடும்போது, உம்..உம் என்ற ஒலிதான் வரும். கூட்டத்தலைவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபிறகு, மற்ற கொரில்லாக்களும் அதை அப்படியே பின்பற்றும். மனிதர் தன்னை பசுவாக கருதுவது மனநல குறைபாடு! உண்மை. மனிதர் தன்னை பசு அல்லது எருதாக கருதுவதை போன்த்ரோபி (Boanthropy) என்ற மனநல குறைபாடாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். கல்லீரலில் ஏற்படும் போர்பைரியா(Porphyria),சைபிளிஸ் ( syphilis) ஆகிய நோய்கள் போன்த்ரோபி குறைபாட்டை ஊக்குவிப்பதாக மருத்துவர்கள் விளக்கம் தருகின்றனர். போன்த்ரோபி குறைபாடு ஒருவருக்கு ஏற்படுவது மிகவும் அரிதானது.  https://thedailywildlife.com/do-gorillas-burp-when-they-are-happy/  https://www.thefactsite.com/100-strange-but-true-facts/

ஏழே நிமிடங்களில் உறங்குவது நல்லதா - உண்மையா, உடான்ஸா?

படம்
  உண்மையா? உடான்ஸா?  படுக்கையில் படுத்து ஏழே நிமிடங்களில் உறங்குவது இயல்பானது! ரியல் உண்மையல்ல. ஒருவர் இரவில் படுக்கையில் படுத்து 20 நிமிடங்கள் கழித்து உறக்கம் வருவது இயல்பானது. ஏழே நிமிடங்களில் தூக்கம் வரும் நிலையை, ஆல்பா ஸ்டேஜ் (Alpha Stage) என  மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த ஆல்பா நிலையில் தான் பெருமளவு தியானம் செய்பவர்கள் இருப்பார்கள். படுக்கையில், 20 நிமிடங்களைக் கடந்தும் ஒருவருக்கு தூக்கம் வரவில்லை என்றால், அவர் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது அவசியம்.    நெருப்புக்கோழியின் மூளையை விட அதன் கண்கள் பெரியவை! ரியல் உண்மை. பொதுவாகவே, பாலூட்டிகளை விட பறவைகளின் மூளை அளவு சிறியதுதான். பறவைகளில் பெரியது, நெருப்புக்கோழி. அதன் கண்களின் விட்ட அளவு,  5 செ.மீ.  ஏறத்தாழ பில்லியர்ட்ஸ் பந்தை ஒத்தது. நீளமான கண் இமைகளால் பாதுகாக்கப்படும் கண்களால்,  3 கி.மீ. தூரத்தில் உள்ள இரையை எளிதாக பார்க்க முடியும். இரவில், 50 மீட்டர் தொலைவில் உள்ள பொருட்களை அடையாளம் காண்கிறது.  https://www.sleepadvisor.org/how-long-to-fall-asleep/ https://www.scifacts.net/animals/ostrich-eye-brain/ https://www.jagranjosh.

லிப்ஸ்டிக்கில் மீனின் உடல் பாகங்கள் பயன்படுத்தப்படுகிறதா? - உண்மையா, உடான்ஸா

படம்
  உண்மையா, உடான்ஸா? லிப்ஸ்டிக்கில் மீனின் உடல்பாகங்கள் பயன்படுகிறது! ரியல் உண்மை. லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ், சோப்பு, ஷாம்பு ஆகியவற்றிலும் மீனின் செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன. மீன் செதில்கள் ப்யூரின் (Purine) என்ற வேதிப்பொருளால் உருவானவை. ப்யூரின், ஒளியை பிரதிபலிக்கும் தன்மை கொண்டது. இதனால்தான், மீன் செதில்களைக் கொண்ட லிப்ஸ்டிக்கைப் பூசும்போது பளீரென்ற பிரகாச தன்மை கிடைக்கிறது. இதுபோலவே பிரகாசம் தரும் செயற்கை வேதிப்பொருட்களும் உள்ளன. ஆனால் அவை பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை.  நவீன கத்தரிக்கோலின் தந்தை, லியனார்டோ டாவின்சி! ரியல் உண்மையல்ல. டாவின்சி, தனது ஓவிய கேன்வாஸை வெட்டுவதற்கு கத்தரிக்கோலை பயன்படுத்தினார். இதனால் அவர்தான் கத்தரிக்கோலை உருவாக்கினார் என கூறுகின்றனர். ஆனால், கி.மு. 1500களில் தொன்மை எகிப்தியர்கள் கத்தரிக்கோலைப் பயன்படுத்தியுள்ளனர். 1761ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ஷெஃபீல்டைச் சேர்ந்த ராபர்ட் ஹின்ச்லிஃப் (Robert Hinchliffe) ஸ்டீலைப் பயன்படுத்தி கத்தரிக்கோல்களை உற்பத்தி செய்தார். இவரே நவீன கத்தரிக்கோலின் தந்தை ஆவார்.  https://www.huffpost.com/entry/fish-scales-lipstick_n_