இடுகைகள்

ஆஸ்பெடாஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் ரஷ்யாவில் நடைபெற்ற மோசமான விபத்துகள்

படம்
  பிரிட்டனில் நடைபெற்ற சுரங்க விபத்து   மோசமான சுரங்க விபத்து என்பது பிரிட்டனில் நடந்த ஆண்டு 1966. இங்கு அபெர்ஃபான் என்ற கிராமப் பகுதியில் சுரங்கம் ஒன்று தோண்டப்பட்டு செயல்பட்டு வந்தது. சுரங்க வேலைக்காக வந்த மக்கள் அங்கேயே தங்கத் தொடங்கினர். இதனால் அங்கு மக்கள்தொகையும் அதிகரித்து வந்தது. சுரங்கம் தோண்டுபவர்கள் அதில் உருவாகும் கழிவை முறையாக அப்புறப்படுத்தவேண்டும். ஆனால் பெரும்பாலும் அதற்கு தனியாக வேறு செலவழிக்க வேண்டுமாக என அங்கேயே அருகில் உள்ள இடங்களிலேயே கழித்துக் கட்டுவது வழக்கம். அப்படித்தான். இந்த சுரங்கத்தில் உருவான கழிவுகளையும் கிராமத்தில் குவித்து வைத்தனர். அது பெரிய பிரச்னையாகவெல்லாம் இல்லை. அதுவும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி 1966 வரைதான். அப்போதுதான் அங்கு 17 மி.மீ மழை பெய்திருந்தது. இதனால் நிலம் மென்மையாக குழைந்துபோய் கிடந்தது. கழிவுகள் உயரமாக குவித்து வைக்கப்பட்டிருந்ததால் அவை அப்படியே கீழே பள்ளமாக இருந்த கிராமத்தை நோக்கி வரத் தொடங்கின. இப்படி வந்த சுரங்க கழிவுகளின் மேகம் மணிக்கு 21 மைல். பள்ளி, மருத்துவமனை, 18 வீடுகள் என அனைத்தையும் சுரங்க கழிவுகள் மேலே விழுந்து உடைத்த