பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் ரஷ்யாவில் நடைபெற்ற மோசமான விபத்துகள்

 













பிரிட்டனில் நடைபெற்ற சுரங்க விபத்து

 

மோசமான சுரங்க விபத்து என்பது பிரிட்டனில் நடந்த ஆண்டு 1966. இங்கு அபெர்ஃபான் என்ற கிராமப் பகுதியில் சுரங்கம் ஒன்று தோண்டப்பட்டு செயல்பட்டு வந்தது. சுரங்க வேலைக்காக வந்த மக்கள் அங்கேயே தங்கத் தொடங்கினர். இதனால் அங்கு மக்கள்தொகையும் அதிகரித்து வந்தது. சுரங்கம் தோண்டுபவர்கள் அதில் உருவாகும் கழிவை முறையாக அப்புறப்படுத்தவேண்டும். ஆனால் பெரும்பாலும் அதற்கு தனியாக வேறு செலவழிக்க வேண்டுமாக என அங்கேயே அருகில் உள்ள இடங்களிலேயே கழித்துக் கட்டுவது வழக்கம். அப்படித்தான். இந்த சுரங்கத்தில் உருவான கழிவுகளையும் கிராமத்தில் குவித்து வைத்தனர். அது பெரிய பிரச்னையாகவெல்லாம் இல்லை. அதுவும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி 1966 வரைதான். அப்போதுதான் அங்கு 17 மி.மீ மழை பெய்திருந்தது. இதனால் நிலம் மென்மையாக குழைந்துபோய் கிடந்தது. கழிவுகள் உயரமாக குவித்து வைக்கப்பட்டிருந்ததால் அவை அப்படியே கீழே பள்ளமாக இருந்த கிராமத்தை நோக்கி வரத் தொடங்கின.

இப்படி வந்த சுரங்க கழிவுகளின் மேகம் மணிக்கு 21 மைல். பள்ளி, மருத்துவமனை, 18 வீடுகள் என அனைத்தையும் சுரங்க கழிவுகள் மேலே விழுந்து உடைத்து நொறுக்கின. இந்த விபத்தை அறிந்ததும் பிரிட்டனின் பிரதமர், ராணி என அனைவருமே இந்த இடத்தை பார்வையிட வந்தனர். ஏராளமான தன்னார்வலர்கள் உதவுவதற்கு வந்தனர். இன்றுவரை அபெர்ஃபான் சுரங்க விபத்து மோசமான விபத்தாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

2

அணு உலை விபத்து

அணு நிலையங்களின் மூலம் மின்சாரம் தயாரிப்பது தவறு என சூழலியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தால், கழிவுகளை முறையாக பாதுகாக்கும் திட்டம் இருந்தால் ஒரு நாடு அணு உலைகளை உருவாக்கலாம். இயக்கம்.

அப்படியல்லாமல் நட்பு நாடுகள் என்று சொல்லி அவர்களிடமும் அணு  உலைகளை நிறுவச்சொல்லி பின்னாளில் கதிர்வீச்சு அபாயத்தில் மாட்டிக்கொண்டால் அதற்கு யார் பொறுப்பு? நண்பனிடம் விஷம் வாங்கச்சொல்லி தின்றால் உயிர் போகாதா என்ன?

செர்னோபில் அணு உலை விபத்தும் இப்படி நேர்ந்த ஒன்றுதான். மனிதர்கள் உருவாக்கிய பேரழிவுகளில் செர்னோபில் அணு உலையும் முக்கியமானது. என்ன அதிகம் இதைப்பற்றி பேச மாட்டார்கள். ஏனெனில் விபத்து நடந்தது, சோவியத் ரஷ்யா. மின்சாரம் இல்லாத நிலையிலும் அணு உலையைக் குளிர்விக்கும் நீர் வசதியை பொறியாளர் சோதிக்க வேண்டும். ஆனால் அன்று அவர் அதை சோதிக்கவில்லை.

இதன் விளைவாக ரியாக்டரின் மேலிருந்து நீராவி கொள்கலன் செயல்படத் தொடங்க, மேலிருந்த கூரை கீழே இடிந்துவிழுந்தது. அப்போது அணு உலையின் கீழிருந்த ரியாக்டரின் அடிப்பகுதி மேலே வர, கதிர்வீச்சு வளிமண்டலத்தில் பரவத் தொடங்கியது. இதனை அறியாத தொழிலாளர்கள் அங்கேயே வேலை செய்துகொண்டிருந்தனர். சம்பவ இடத்தில் 28 தொழிலாளர்கள் கதிர்வீச்சு காரணமாக பலியானார்கள். பிறகு இந்த இடத்திற்கு ராணுவம் வந்து அங்கு குடியிருந்த 50 ஆயிரம் மக்களை வேறு இடத்திற்கு மாற்றினர். மேலும் 19 மைலுக்கு யாரும் வரக்கூடாது என தடை ஆணை விதித்தது அரசு. கதிர்வீச்சு இடத்தை அப்படியே பெரிய மூடாக்கு போன்ற வடிவில் உலோகத்தை வைத்து மூடினர். 2065 ஆம் ஆண்டு வரை கதிர்வீச்சு கழிவுகளை அகற்ற வேண்டியிருக்கும் அவலநிலை உருவாகியுள்ளது. மக்கள் அங்கே இருந்து வேறு இடங்களுக்கு மறுகுடியேற்றம் செய்யப்பட்டார்கள் அல்லவா, அவர்களுக்கும் ஆயிரம் பேருக்கும் மேல புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது மருத்துவ உண்மை.  

3

இத்தாலியின் மிலன் நகரில் வேதி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்தது. 1976ஆம் ஆண்டு ஜூலை பத்தாம் தேதி சனிக்கிழமை. ட்ரைக்குளோரோபெனால் எனும் வேதிப்பொருளை தயாரித்து வந்தனர். இதனை களைக்கொல்லியாகவும், வேதி ஆயுதமாகவும் பயன்படுத்த முடியும்.  ஆலையில் ஏற்பட்ட விபத்தில் வேதிப்பொருள் வானில் வெடித்து பரவியது. மொத்தம் ஆறு டன் வேதிப்பொருள் ஏழு சதுர கி.மீ. தூரத்திற்கு பரவியது. இந்த வேதிப்பொருளின் பாதிப்பால் சீவேசோ என்ற நகரம் முழுமைக்கும் பாதிப்பு இருந்தது. மக்களுக்கு தோலில் எரிச்சல், நமைச்சல், அரிப்பு என தொடங்க மருத்துவமனைகளுக்கு படையெடுக்கத் தொடங்கினர். இதனால் அரசு அங்கிருந்த பெருமளவு நிலங்களை விட்டு மக்களை அகற்றி அவர்களை பாதுகாத்தனர்.

 

ஆஸ்பெடாஸ் நச்சு!

இது அமெரிக்காவில் நடைபெற்ற கதை. அங்கு மாண்டனாவில் லிபி என்ற ஊர் இருக்கிறது. இங்குதான் 1800இல் ரயில் பாதை, சுரங்கம் ஆகியவை உருவாக்கப்படத் தொடங்கின. மக்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அதற்கான விலை உயிர் என்பதை அவர்கள் அப்போது உணரவில்லை. 1919ஆம் ஆண்டு சுரங்கத்தில் வெர்மிகுலைட் என்ற கனிமம் கண்டறியப்பட்டது. இதைப் பயன்படுத்தி காரின் இயந்திர பாகங்களை பாதுகாக்க முடியும்.  ஆனால் இந்த கனிமத்தில் ஆஸ்பெடாஸ் என்ற பகுதிப் பொருள் இருந்தது. இதை சுரங்க பொறியாளர்கள் அறிந்தாலும் ஊர் மக்களுக்கு தெரியவில்லை. மக்களோ சுரங்க கழிவுகளைக் கொண்டு வீடுகளைக் கட்டினர். ஆஸ்பெடாஸ் பயன்படுத்துபவர்களுக்கு நுரையீரல் சார்ந்த நோய்கள் நிறைய வரும். மக்கள் உச்சமாக பள்ளிக்கூடத்தைக் கூட கழிவில் இருந்து கட்டினர் என்பதுதான்.

இங்கு வாழும் மக்களுக்கு தொடர்ச்சியாக நோய் பாதிப்புகள் வந்துகொண்டே இருந்தன. பிறகுதான் அமெரிக்க அரசு இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியது. ஆனால் அதுவே கூட காலதாமதம்தான். 1990ஆம் ஆண்டு சுரங்கம் மூடப்பட்டது. ஆனால் அதற்குள்ளேயே ஆஸ்பெடாஸ் நச்சு பெரிய மேகம் போல கிராமத்தை சூழ்ந்துவிட்டது. 2009ஆம் ஆண்டுதான் அமெரிக்க அரசு கிராமத்தை தூய்மைப்படுத்தவேண்டும் என்று அறிவித்து அவசரநிலையை அறிவித்தது.  பல பத்தாண்டுகளாக ஆஸ்பெடாஸ் நச்சு உருவாக்கப்பட்டு மக்களின் ரத்தத்தில் கலந்துவிட்டது என்பதை யாரும் மாற்ற முடியாது அல்லவா, ஆஸ்பெடாஸின் கீழே வாழ்பவர்களுக்கு வாழ்நாள் முழுக்க நோய்கள் குறையாது என்பதை 2018ஆம் ஆண்டு வெளியான மருத்துவ ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

       images Pixabay




கருத்துகள்