கலிஃபோர்னியா காட்டுத்தீ - போபால் விஷவாயு, சீனாவில் நச்சு நீர்,

 











ஆஸ்பெடாஸ் உடலுக்குள் செல்வதால் ஏற்படுத்தும் தீமைகள்

 

ஆஸ்பெடாசிலுள்ள நார்கள், மனிதர்களின் உடலுக்குள் செல்லும்போது நுரையீரலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் ஒருவர் நன்றாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விட முடியாது. மூச்சு விடவே திணறுவார். நுரையீரலின் மேலுள்ள மெல்லிய அடுக்கின் பெயர், பிலுரா. இதை ஆஸ்பெடாஸ் வேதிப்பொருள் தடிமனாக்குகிறது. எனவே மூச்சுவிடுவது கடினமாகிறது.

ஆஸ்பெடாஸ் காரணமாக ஏற்படும் புற்றுநோய்க்கு மெசோதெலியோமா என்று பெயர். இந்த நோய் ஒருவருக்கு ஆஸ்பெடாஸ் உடலுக்குள் செல்வதால் ஏற்படுகிறது. அதாவது, மெல்ல கொல்லும் விஷம் போல. முதலில் நுரையீரலில் பரவும் புற்று பிற உறுப்புகளுக்கும் வேகமாக பரவுகிறது.

நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுவிடுவது கடினமாகிறது என்றால் இதயம் கடினமாக வேலை செய்யும்படி ஆகிவிடும். இதனால் இதயத் தசைகள் மெல்ல கடினமான இயல்பை பெறும். இது மார்பு வலியை உருவாக்கும்.

 

அமெரிக்காவின் மாண்டனாவில் உள்ளது லிபி. இங்கு ஆஸ்பெடாஸ் பல்வேறு பொருட்களில் கலந்து, மக்கள் பாதிக்கப்பட்டனர். இதை அகற்ற மட்டுமே அமெரிக்க அரசுக்கு அரை பில்லியன் டாலர்கள் தேவைப்பட்டன. அரசின் சூழல் பாதுகாப்பு அமைப்பு, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை ஆராய்ந்தனர். மாசுபாட்டை சரி செய்ய பொருட்களை 7 லட்சத்து 65 ஆயிரம் கியூபிக் மீட்டர்கள் தள்ளி இடம் மாற்றி வைக்கும்படி ஆனது. பின்னாளில் ஆட்சிகள் மாறும்போது, சுத்தப்படுத்தும் திட்டத்திற்கான தொகை குறைக்கப்பட்டது. அமெரிக்க வரலாற்றில் ஆஸ்பெடாஸ் மாசுபாட்டை அகற்றவென நடைபெற்ற மிகப்பெரிய திட்டம் இது.

2

நச்சு நீர்

நவம்பர் மாதம் 2005ஆம் ஆண்டு. சீனாவின் ஜிலின் நகரம். இங்குள்ள பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலையில் தொடர்ச்சியாக வெடிப்புகள் ஏற்பட்டன. உடனே அங்கிருந்த மக்கள் 10 ஆயிரம் பேர்களை அரசு அகற்றியது. ஆனால் பிரச்னை அதோடு நிற்கவில்லை. மாசுபாடு ஏற்பட்ட வேதிப்பொருட்கள், சோங்குவா ஆற்றில் கலக்கப்பட்டது. ஏறத்தாழ 100 டன் என மதிப்பிடுகிறார்கள் ஆய்வாளர்கள்.  இந்த ஆறு நிறைய பெரு நகரங்களுக்கு செல்வதால், ஐயையோ என பீதியான சீனர்கள் ஆற்றை அணை போட்டு தடுத்து வைத்து சுத்தம் செய்தனர். பிறகு , மாசுபடாத நீர் உள்ள பகுதியை மட்டும் அடையாளம் கண்டு அதை மக்களுக்கு வழங்கினர்.

நச்சு வாயு

1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2. இந்தியாவில் மத்திய பிரதேச மாநில மக்களுக்கு மறக்க முடியாத நாள். அன்றுதான் அங்குள்ள போபால் நகரில் உள்ள பூச்சிக்கொல்லி தொழிற்சாலையில் வேதிப்பொருள் ஒன்று கசியத் தொடங்கியது. எந்திரப் பழுதானதால் வேதிப்பொருட்கள் வெளியானது என நிபுணர் குழு விளக்கம் கொடுத்தது. ஆனால் அதற்குள் முறையான அறிவிப்பு கொடுக்காத காரணத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு நிரந்தர நோயாளிகளாகிவிட்டர்.

40 டன் அளவுக்கு வேதிப்பொருள் மெத்தில் ஐசோசயனைட் வெளியாகி 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இருமல், கண் எரிச்சல், மூச்சுத் திணறல், வாந்தி, உடல் எரிச்சல் என பலரும் கதறத் தொடங்கினர். விலங்குகளின் நிலையும் இப்படித்தான். அரசு மிகதாமதாக எழுந்து பாதிப்புகளை சரி செய்ய முயன்றது. பெரிதாக பயன் ஒன்றுமில்லை. இன்றும் அந்தப்பகுதியை பயன்படுத்த முடியாதபடி மண்ணும், நீரும் பாதிக்கப்பட்டுவிட்டன. மாநில, மத்திய அரசுகள் தொழிற்சாலை அதிகாரிகளுக்கும், முதலாளிகளுக்கும் விசுவாசம் காட்டியதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றுவரையும் கூட இழப்பீடு கிடைப்பதில் சிக்கல் உள்ளது.

காட்டுத்தீ

அமெரிக்காவில் ஏற்படும் காட்டுத்தீ பிரச்னைகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். காலமாற்றம் ஏற்படுத்தும் விளைவாக அடிக்கடி காட்டில் தீபற்றிக்கொண்டு ஒட்டுமொத்த காட்டையும் அதையொட்டியுள்ள கிராமங்களையும், நகரங்களையும் பொசுக்கும். மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள். பொருட்சேதமானாலும் உயிர்ச்சேதத்தையேனும் தவிர்க்கலாம் என நினைக்கிறார்கள்.

2018ஆம் ஆண்டு மட்டும் 8,500 முறை காட்டுத்தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு மில்லியன் ஏக்கர் நிலங்கள் பாழானதோடு 24 ஆயிரம் கட்டிடங்கள் நெருப்பால் அழிந்தன. இப்போது நாம் பேசுவது கலிஃபோர்னியா காட்டுத்தீயை மட்டுமே. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தீ வேகம் கொள்ளும்.

வறண்ட மண், பட்டுப்போன மரங்கள்தான் காட்டுத்தீக்கான முதல் எரிபொருள். பிறகு அப்படியே வளர்ந்து முழுக் காட்டையும் வளைத்து நெருப்பு எரியும். இதில் மனிதர்களின் பங்கும் உள்ளது. வெறும் காலமாற்றம் மட்டுமே காரணம் கிடையாது என்பதும் உண்மை.


கருத்துகள்