காதலர்களை போனை மாற்றிக்கொள்ளச் சொல்லும் பெண்ணின் அப்பா! லவ் டுடே - பிரதீப், இவானா
லவ் டுடே
பிரதீப்
ரங்கநாதன், இவானா, சத்யராஜ், ராதிகா
இசை யு1
இயக்கம்
பிரதீப் ரங்கநாதன்
நிகிதா,
பிரதீப் என இருவரும் காதலிக்கிறார்கள்.இருவரும் சமூக வலைத்தளத்தின் மூலம் பழக்கமாகித்தான்
டேட்டிங் சென்று காதலிக்க தொடங்குகிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டதாக
சொல்லிக்கொள்கிறார்கள். கல்யாணம் பற்றி பேசப் போகும்போது நிகிதாவின் அப்பா, இருவரும்
ஒரு நாளுக்கு இருவருடைய போன்களையும் மாற்றிக்கொள்ளச் சொல்கிறார். இதனால் ஏற்படும் களேபரங்கள்தான்
படம்.
படத்தை
இயக்குநர் பிரதீப் குடும்ப படம் என்றாலும் முழுப்படத்தையும் குடும்ப ஆட்கள் தனித்தனியாக
வந்து பார்த்துக்கொள்ளலாம். படம் அப்படித்தான் எடுக்கப்பட்டிருக்கிறது.
2கே கிட்ஸ்களுக்கான
படம். எப்போதும் போனை கையில் வைத்துக்கொண்டே அனைத்து உறவுகளையும் அனைத்து வசதிகளையும்
பெற்று நுகரும் ஆட்களுக்கு அதன் வழியாக சந்திக்கும் மனிதர்கள், அவர்களால் ஏற்படும்
பிரச்னைகளை பற்றி பேசுகிற படம். நேரடியாக ஒருவரைச்
சந்தித்துப் பேசுவதும், அதன் வழியாக உறவு வளர்வதும், சமூக வலைத்தளங்களின் வழியாக உறவு
வளர்வதும் எப்படியானது என்பதை படத்தில் சில இடங்களில் நகைச்சுவையாகவும் சில இடங்களில்
உணர்வு பூர்வமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
பிரதீப் நாயகனாக நடித்து இயக்கியிருக்கிறார். இரண்டு
வேலைகளையும் அவர் உற்சாகமாக செய்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
சில இடங்களில் நடித்திருப்பது யார் எஸ் ஜே சூர்யாவா, தனுஷா என குழப்பமே வருகிறது.
பிரதீப்
சிறுவனாக இருக்கும்போது ஓரிடத்தில் மரக்கன்று நடும் காட்சி படத்தின் இடையே வருகிறது.
இதை ஒரே காட்சியாக வைத்திருந்தாலும் எளிதாகவே புரிந்திருக்கும். படத்தில் டெம்பிள் மங்கீஸ் விஜய் வரதராஜ்தான் வில்லன்.
தொடக்கத்தில் சில காட்சிகள் வந்து விட்டு சென்றாலும் இறுதியாக முத்திரை பதிக்கும் மனிதர்
அவர்தான். யோகி பாபுவை வைத்து சற்று சீரியசான காட்சிகளை முயன்றிருக்கிறார் இயக்குநர்.
அதிலும் யோகி நன்றாகவே நடித்திருக்கிறார்.
நகைச்சுவை,
உணர்ச்சிகரமான காட்சிகள், நேர்மறையான முடிவு என அனைத்தையும் சரியான இடத்தில் பொருத்தி
வெற்றிகண்டிருக்கிறது படம். குறும்படம் ஒன்றை பிரதீப் முன்னமே எடுத்து இருக்கிறார். அதை பார்த்துவிட்டு வந்தால் படத்தை எளிதாக புரிந்துகொள்ளலாம்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக