ரேடார் எப்படி செயல்படுகிறது?
quantum radar, china |
ரேடார் எப்படி செயல்படுகிறது?
இரண்டாம் உலகப்போர். அதுதான் பிரிட்டனுக்கு ரேடாரின் முக்கியத்துவத்தை
சொன்ன முக்கியமான வரலாற்று காலகட்டம். அப்போது ஜெர்மனியின் அதிபர் ஹிட்லர், தன்னை உலக
அதிபராக நினைத்து பல்வேறு நாடுகளை ராணுவத்தால் ஆக்கிரமித்து வந்தார். அந்த வகையில்
பிரிட்டனை எப்படியாவது அடக்கி ஆளவேண்டும் என்பது அவரது ஆசை. வெறும் ஆசை மட்டுமல்ல, அதற்கான தயாரிப்புகளோடுதான்
அவர் கனவையும் கண்டார். ஜெர்மனியின் விமானங்கள், கப்பல்கள் களம் கண்ட போர்களில் எல்லாம்
வெற்றிவாகை சூடின.
நோக்கம் உயர்வாக இருந்தாலும் அதைநோக்கிய பயணத்திற்கு உழைப்பும்
முக்கியம். அதுவும் ஹிட்லரிடம் இருந்தது.
ரேடியோ அலைகளை வானில் ஏவி அது விமானத்தில் பட்டு திரும்பி
வந்தால் வல்லுநர்கள் மூலம் விமானத்தின் அளவு, வேகம், தூரம் என அனைத்தையும் கணக்கிட
முடியும். இதற்கு பயன்படுவதுதான் ரேடார். ரேடியோ டிடெக்ஷன் அண்ட் ரேஞ்சிங்.
1885ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து இயற்பியலாளர் ஜேம்ஸ் கிளர்க்
மேக்ஸ்வேல் ரேடியோ அலைகள் உலோகங்களில் மோதும்போது
பிரதிபலிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்தார். ஏறத்தாழ ஒளி அலைகளின் இயல்பும் அதுதானே? சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மன் நாட்டின் இயற்பியலாளரான
ஹெய்ன்ரிச் ஹெர்ட்ஸ் ஜேம்ஸின் ஆராய்ச்சியை திரும்ப செய்து நிரூபணம் செய்தார். 1904ஆம்
ஆண்டு ரேடியோ அலை ஆராய்ச்சியை செய்து அதை கருவியாக மாற்றும் செயல் நடைபெற்றது. தடை
கண்டுபிடிப்பான் மற்றும் கப்பல் வழிகாட்டும் கருவி – இப்படி இயக்குநர் கௌதம் மேனன்
போல பெயர் வைத்த பொறியாளர் பெயர் கிரிஸ்டியன் ஹல்ஸ்மெயர். இவர் இதை காப்புரிமை செய்தார்.
பெயர் சரியில்லை. ஆனால் கருவிக்கு உபயோகம் உண்டு என கருவியை தயாரித்தனர்.
ரேடாரை முறைப்படி நேர்த்தியாக்கி மேம்படுத்தியவர் ராபர்ட்
வாட்சன் வாட். இவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். ரேடாரின் அடிப்படை அறிவியல்
இவருடையது. ரேடாரில் மொத்தம் நான்கு முக்கிய பாகங்கள் உண்டு. டிரான்ஸ்மிட்டர், ரேடியோ அலைகளை உருவாக்குகிறது. ஆன்டெனா, உருவான
அலைகளை வெளியே அனுப்புகிறது. மற்றொரு பகுதி ஸ்விட்ச், எப்போது
அலை உருவாக்கலாம், பிரதிபலித்து வரும் அலையை எப்போது திரும்ப பெறலாம் என்பதை தீர்மானிக்கிறது.
இதற்கடுத்து உள்ள பகுதி ரிசீவர். வெளியிலிருந்து வரும் அலைகளை கிரகிக்கிறது. அலைகளை
இன்று ஒருவர் காட்சிரீதியாக பார்க்க முடியும்.
இன்று சாதாரண ரேடார் என்பதைத் தாண்டி க்வாண்டம் ரேடார்
வந்துவிட்டது. என்ன பொருள், வேகம், எந்த திசை என பல்வேறு தகவல்களை இருந்த இடத்திலேயே
அறியலாம்.
பனி, மழை, வெயில் என சூழல் எதுவாக இருந்தாலும் ரேடார் அலைகளைப்
பயன்படுத்தலாம். சாலைகளில் பயன்படுத்தும் வாகன வேகத்தை அறியும் கருவி கூட ரேடார் அறிவியலை
பயன்படுத்துகிறது. வானிலையாளர்கள் ரேடாரைப் பயன்படுத்தி தட்பவெப்பநிலை கருவிகளை எளிதாக
அடையாளம் காண்கிறார்கள்.
ஹவ் இட் வொர்க்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக