சமூகத்தில் தனியாக வாழ்வது சாத்தியமா?
அகம் புறம்
ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்
கே.ஒருவர்
ஏன் சமூகத்தில் வாழ வேண்டும், அவர் தனியாகவே வாழ முடியுமே?
ப.
உங்களால்
தனியாக வாழ முடியுமா?
கே.நான்
சமூகத்தில் வாழ்வதற்கு ஒரே காரணம், எனது பெற்றோர் இங்கு வாழ்வதுதான்..
ப. உங்களுக்கு
வேலை கிடைத்து, நல்ல வாழ்க்கை அமைந்தால் நீங்கள் சமூகத்தில் வாழ மாட்டீர்களா? நீங்கள்
தனியாக வாழ முடியும் என நினைக்கிறீர்களா? நீங்கள் உண்ணும் உணவு, அணியும் உடை ஆகியவற்றுக்காக
இன்னொருவரை சார்ந்திருக்கிறீர்கள். இங்கு யாரும் தனியாக வாழ்ந்துவிடமுடியாது. தனியாக
இருப்பது என்பது ஒருவர் இறக்கும்போது மட்டுமே நடக்கும். வாழும்போது வாழ்க்கை என்பது
உங்கள் அப்பா, அண்ணன், வணிகர், பிச்சைக்காரர் என யாராவது ஒருவரைச் சார்ந்துதான் அமையும்.
நீங்கள் இந்த உறவுகளுக்குள் உள்ள முரண்பாடுகளை சரியாக புரிந்துகொள்ளவில்லை. உங்களுக்குள்
எந்த முரண்பாடும் எழவில்லையென்றால், நீங்கள் தனியாக வாழ்வது பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.
கே. நாம்
ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்கிறீர்கள். அப்படியென்றால் இந்த சமூகத்தில் நாம்
சுதந்திரமாக இருக்க முடியாதா?
ப. நீங்கள்
மனிதர்கள் கொள்ளும் உறவு முறைகளைப் பற்றி சரியாக புரிந்துகொள்ளவில்லை. நான் உங்களை
பாதுகாப்பு, என்னுடைய வசதி ஆகியவற்றுக்காக சார்ந்திருப்பது வேறு.. ஆனால் இப்படி அல்லாமலும்
நான் ஒருவரை சார்ந்திருக்க முடியும் அல்லவா? நான் ஒருவரை ஏதேனும் தனிப்பட்ட லாபம்,
அல்லது உணர்ச்சிகரமான காரணங்களுக்கு சார்ந்திருப்பது என்பது என்னை சுதந்திரமானவனாக
மாற்றாது. நான் பெற்றோரை சார்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு பாதுகாப்பும், பயமும்தான்
காரணமாக உள்ளது. எந்த உறவு முறையில் உங்களுக்கு பயம் இல்லையோ அதுதான் சுதந்திரமான தன்மை
எனலாம். சரியான உறவுமுறையை அதற்காகவே நான் கூறுகிறேன். இந்த உறவுமுறையில் நீங்கள் அகம்,
புறம் என எதற்காகவும் பிறரை சார்ந்திருப்பது போல இருக்காது.
லைஃப் அகேட்
நூலில் இருந்து…
image -pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக