லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆட்சியைப் பிடிக்கும் இடதுசாரிகள்!

 










லத்தீன் அமெரிக்க நாடுகள் பறக்கும் சிவப்புக்கொடி

லத்தீன் அமெரிக்க நாடுகளில் மில்லினிய ஆண்டு தொடங்கி இடதுசாரி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வென்று வருகின்றன. இங்குள்ள நாடுகள் மெக்சிகோ, ஹோண்டுராஸ், கொலம்பியா, பிரேசில், பெரு, சிலி, பொலிவியா, அர்ஜென்டினா.

மெக்சிகோ

ஆண்ட்ரெஸ் மானுவேல் லோபெஸ் ஆப்ரோடர் 2018

போதைப்பொருட்களை ஒழிப்பதாக சொல்லி நாட்டின் அதிபரான இடது சாரித் தலைவர். இந்த வகையில் முதல்முறையாக அதிபரான முதல் இடதுசாரி இவரே. இருபது ஆண்டுகளாக இவரே மெக்சிகோவை ஆள்கிறார்.

அர்ஜென்டினா

ஆல்பெர்டோ ஃபெர்னான்டெஸ்  2019

சற்று மையமான இடதுசாரி தலைவர். பொருளாதார சீரற்ற நிலையில் நாட்டின் தேர்தலில் போட்டியிட்டு கடுமையான போட்டியில்தான் வென்று அதிபரானார்.

பொலிவியா

லூயிஸ் அர்சே

2020

மார்க்சியர். தற்போது அதிபராக உள்ளவர் முந்தைய காலத்தில் ஈவோ மொராலெஸ் ஆட்சிக்காலத்தில் பொருளாதாரத்தை உயர்த்திய பெருமைக்கு சொந்தக்காரர்.

சிலி

கேப்ரியல் போரிக்

2021

36 வயதில் நாட்டின் அதிபரான சாதனைக்கு சொந்தக்காரர். நாட்டில் பணவீக்கம் அதிகரித்து ஒருவர் வாழவே அதிகம் செலவு செய்யும் நிலையை மாற்றுவதாக சொல்லி வென்றிருக்கிறார்.

கொலம்பியா

குஸ்டாவோ பெட்ரோ

2022

கொலம்பியாவின் முதல் இடதுசாரி அதிபர். மூன்று முறை போட்டியிட்டவர், கடைசி முறையாக வென்றது கூட குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் என்பது கவனிக்கத் தக்கது.,

பெரு

பெட்ரோ காஸ்டில்லோ

கல்வி, மருத்துவம் சார்ந்த பல்வேறு திட்டங்களை முன்வைத்து நாட்டின் அதிபரான இடதுசாரி தலைவர்.

ஹோண்டுராஸ்

ஷியோமாரா காஸ்ட்ரோ

2021

நீதித்துறையை சரி செய்வதாக வாக்குறுதி கொடுத்து நாட்டின் அதிபராக வென்றுள்ளார். மக்களின் மனங்களை வென்று அதன் விளைவாக தேர்தலில் சாதித்தவர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் 1.11.2022

 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்