ஆங்கிலம் கற்றலை எளிதாக்கும் செமான்டிக் மேப்பிங்- சிவகங்கை ஆசிரியர் உஷாவின் சாதனை முறை!

 



 





கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்திய சிவகங்கை ஆசிரியர்!

 

சிவகங்கையில் உள்ள டயட் மையத்தில் ஆசிரியராக செயல்பட்டு வருகிறார் உஷா. இதற்கு முன்னால் அவர் காளையர் கோவிலில் உள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான  மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு எடுத்து வந்தார். இதில் என்ன சாதனை இருக்கிறது என நினைப்பீர்கள். கொரோனா காலத்தில் தான் உஷா மாணவர்கள் கல்வி கற்பதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தினார். அதுதான் அவருக்கு மத்திய அரசின் கல்விமுறையில் புதிய கண்டுபிடிப்பிற்கான விருது ஒன்றையும் பெற்றுள்ளார்.

கொரோனா காலத்தில்தான் பள்ளி மாணவர்களின் கல்வி நேரடியான வகுப்பு இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட் டது. கல்வியை பாதிக்காத வகையில் ஆன்லைன் கல்வி முறை நடைமுறைக்கு வந்தது.ஆனால் இதுவும் அனைத்து   மாணவர்களுக்கான முறையாக இல்லை. நகரில் வாழும் பெற்றோர் ஆண்ட்ராய்ட் போன், டேப்லட் ஆகியவற்றை வைத்து சமாளித்தனர். ஆனால் சாதாரணமாக கூலி வேலைக்கு செல்லும் பெற்றோரைக் கொண்ட பிள்ளைகள் ஆன்லைன் கல்வியில் இணைவது கடினமாக மாறியது. பள்ளிகள் திறந்தபிறகு, பள்ளிக்கு வந்த மாணவர்கள் பலருக்கு ஆங்கில மொழியில் படிப்பதும் கூட கடினமாக இருந்திருக்கிறது. மேலும் எழுதுவதிலும் பிரச்னை இருந்தது.

இதற்காக உஷா கண்டுபிடித்த முறைதான்செமான்டிக் மேப்பிங். இந்த முறையில் வார்த்தைகள், அதற்கு இணையான தொடர்புடைய வார்தைகள் வரைபட முறையில் எழுதப்பட்டிருக்கும். இதை படிக்கும் மாணவர்கள் எளிதாக வார்த்தை, பொருளை ஆகியவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடியும்

இந்த முறை மூலம் இப்போது சிவகங்கையிலுள்ள அரசு பள்ளி மாணவர்கள் எளிதாக கல்வி கற்று வருகின்றனர். குறிப்பாக ஆங்கில பாடத்தை. பொதுவாக கிராமத்தில் அனைத்து பாடங்களிலும் எளிதாக தேர்ச்சி பெறும் மாணவர்கள் ஆங்கிலத்தில் முக்கி முனகித்தான் வெற்றி பெறுவார்கள்.  செமான்டிக் மேப்பிங் முறையில், பாடம் படித்து வரும் மாணவர்கள் ஆங்கிலத்தில் பாரா ஒன்றை படித்து புரிந்துகொள்ளும் நேரமும் வெகுவாக குறைந்துள்ளது.  ‘’என்னுடைய ஐடியா வேலை  செய்தது மகிழ்ச்சி. வார்த்தைகளை வரைபட வடிவில் அடையாளம் கூறும்  இந்த முறையில் மாணவர்கள் பாராவை இரண்டு முறை படித்தாலே அதை புரிந்துகொண்டு நினைவில் வைத்துக்கொள்ள முடியும். ’’ என்று சொன்னார் உஷா.

 உஷா, பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர்கள் தனக்கு கூறியதை சக மாணவர்களுக்கு விளக்கி கூறும் திறன் கொண்டவராக இருந்திருக்கிறார். இந்த முறையில் படித்து வந்தவர், ஆங்கில பாடத்தில் பட்டப்படிப்பு படித்து பிறகு ஆசிரியராகியிருக்கிறார். தற்போது சிவகங்கை மாவட்ட ஆசிரியர் கல்விப் பயிற்சி அமைப்பில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தனது சிறப்பான கல்விப்பணிக்காக அப்துல்கலாம் விருது ஒன்றையும் பெற்றுள்ளார். 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் – 6.11.2022 ஹரிணி

image pixabay

கருத்துகள்