இடுகைகள்

டைம் 100(2024) லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டைம் 100(2024) - சுகாதாரத்தில் இனவேறுபாடு தொடங்கி கருத்தரித்தல் ஆராய்ச்சி வரை - நான்கு சாதனையாளர்கள்

படம்
    டைம் 100 செல்வாக்கு பெற்ற மனிதர்கள் சுகாதாரத்தில் இனவேறுபாட்டை எதிர்ப்போம் ரேச்சல் ஹார்டேமன் rachel hardeman அமெரிக்காவில் கர்ப்பிணிகள் பிரசவத்தின்போது இறந்துபோகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் இனவெறி சார்ந்து இயங்குபவர்களால், கருப்பின பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சிலர் இதைக் கூற தயங்கினாலும் ரேச்சல் தைரியமாக உண்மையைக் கூறி அதற்கான தீர்வைத் தேட முயன்று வருகிறார். இனவெறியை எதிர்த்து செய்யும் ஆராய்ச்சி சார்ந்து சுகாதாரத்துறையில் உள்ள ஆழமான பிரச்னைளை அடையாளம் கண்டு மக்களுக்கு கூறுகிறார். அவர் உருவாக்கியுள்ள மாம்னிபஸ் மசோதா மூலம் கர்ப்பிணிகள் இனவேறுபாடின்றி பயன் பெற முடியும். குழந்தை பிறப்பால் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்கவும் இதில் வழியிருக்கிறது. லாரன் அண்டர்வுட் 2 போராட்டம் வழியாக நன்மை - ஷான் ஃபைன் shawn fain கடந்த ஆண்டு செப்டம்பரில் மிச்சிகன் நகரில், யூஏடபிள்யூ சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு தலைமை தாங்கி நடத்தியவர், ஷான் ஃபைன். முறையான ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படவேண்டும் என்பதே உழைப்பாளர்களின் வாதம். சங்கத்தில் உறுப்பினர்களுக்க

Time 100 - செல்வாக்கு பெற்ற மனிதர்கள் - ஐகான்ஸ் பாலியல் சுரண்டலுக்கு எதிரான குரலிலிருந்து மலிவான விலை மருந்து விற்பனையாளர் வரை...

படம்
  டைம் 100 செல்வாக்கு பெற்ற மனிதர்கள் - ஐகான்ஸ் பாலியல் சீண்டலுக்கு எதிரான போர் - ஜென்னி ஹெர்மோஸா jenni hermosa 2023ஆம்ஆண்டு பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது. அதன் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் நாட்டின் பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றியை விட பரிசு பெறும் மேடையில், நடந்த அவலமான விஷயம் உலகமெங்கும் பிரபலமானது. ஸ்பானிஷ் நாட்டு கால்பந்து கூட்டமைப்பின் தலைவரும், பெண்கள் கால்பந்து அணியின் தலைவருமான லூயிஸ் ரூபியேல்ஸ், கேப்டன் ஜென்னியின் முகத்தை பலவந்தமாக பிடித்து இழுத்து முத்தம் கொடுத்தார். அதை பல நூறு டிவி சேனல்களின் கேமராக்கள் பதிவு செய்தன. அதற்குப் பிறகுதான் லூயிசுக்கு மண்டகப்படி தொடங்கியது. உலகம் முழுக்க பெண் விளையாட்டு வீர ர்கள் மீது பாலியல் சீண்டல்கள், சுரண்டல் நடந்து வருகிறது. நான் அமெரிக்காவில் நடைபெற்ற அத்தகைய விஷயங்களை வெளியே கொண்டு வந்தேன். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கால்பந்து அணியின் கேப்டனான ஜென்னி, தனக்கு நேர்ந்த அச்சம்பவத்தை வெளிப்படையாக கூறி, தனக்கு எதிராக செய்யப்பட்ட தடைகளை உடைத்தார். லூயிசுக்கு எதிராக அவர் உண்மையைப் பேசக்கூடாது என அதிகார மட்டம் பல்வேறு ம