இடுகைகள்

ஆய்வாளர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எனது அனுபவம் சார்ந்து உணர்ந்த அறிவியல் உண்மைகளை பேசுகிறேன்! ஆண்ட்ரூ ஹூயூபர்மன், ஆய்வாளர்

படம்
  ஆண்ட்ரூ ஹூயூபர்மன், நரம்பியல் ஆய்வாளர் ஆண்ட்ரூ ஹூயூபெர்மன் நரம்பியல் ஆய்வாளர், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் பல்லாயிரம் மக்கள் உங்களது அறிவியல் பாட்காஸ்டை கேட்கத்தொடங்கியுள்ளார்களே எப்படி? மக்கள் புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். அறிவியலைக் கற்க வேண்டுமென விரும்புகிறார்கள். இப்போது நான் கூறுவது சற்று உணர்ச்சிகரமான வாசகங்களாக தோன்றலாம்.   உயிரியல் என்பது அழகானது. அதிலுள்ள உயிரினங்கள் போலவே நாமும்   உருவாகி வந்தவர்கள்தான். நம்மைப் பற்றிய அறிவியலும், நம்மைக் கடந்து பிற உயிரினங்களையும் பார்ப்பது சுவாரசியமான ஒன்று. பொதுவான அறிவியலாளர்களை விட ஹூயூபர்மன் லேப் பாட்காஸ்டிற்கு மக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகமாக உள்ளது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் இதை பாட்காஸ்ட் கேட்கும் நேயர்களிடம்தான் கேட்க வேண்டும். நான் இதற்கு காரணம் என நினைப்பது, மக்களிடம் நேரடியாக கருத்துகளை பகிர்வதுதான் என்பேன். ஆடியோவாக இருந்தாலும், செய்தி துணுக்காக இருந்தாலும் என்னுடைய அனுபவம் சார்ந்து அதை பேசுகிறேன். ஆழமான கவனித்தலின் அடிப்படையில் இருப்பதால், மக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்

நிலப்பரப்பு சார்ந்த இயல்புகளைக் கண்டறிந்த ஆய்வாளர்! - ஃபிராங்க் மரியன் ஆண்டர்சன்

படம்
ஃபிராங்க் மரியன் ஆண்டர்சன் (Frank Marian Anderson 1863-1945) ஃபிராங்க், அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் பிறந்தார். பெற்றோருக்கு இவர் ஏழாவது பிள்ளை. பெற்றோர், சிறுவயதில் காலமாகிவிட மாமாவின் பராமரிப்பில் வளர்ந்தார். தான் வாழ்ந்த ரோக் ரிவர் வேலி பகுதியில் உள்ள கனிமங்கள், படிமங்களை சேகரிக்கத் தொடங்கினார். 1889ஆம் ஆண்டு ஒரேகானின் சேலத்தில் இருந்த வில்லமெட்டெ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். பள்ளியில் ஆசிரியராகி இலக்கணம் கற்பித்துக்கொண்டிருந்தபோதுதான் பேராசிரியர் தாமஸ் காண்டன் அறிமுகம் கிடைத்தது. போர்ட்லேண்டில் நடைபெற்ற டேவிட் ஸ்டார் ஜோர்டான் என்பவரின் உரையைக் கேட்டபிறகு, புவியியல் துறையை தொழிலாக ஏற்றார் ஃபிராங்க்.  அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் ஜே.எஸ். டில்லரின் உதவியாளராக பணியாற்றினார். 1897இல் எம்.எஸ். பட்டத்தைப் பெற்றவர்,  கலிஃபோர்னியா மாகாண சுரங்க அமைப்பில் களப்பணி உதவியாளராக பணியாற்றினார். 1930ஆம் ஆண்டு, கிரிடாசியஸ் டெபாசிட்ஸ் ஆஃப் நார்த்தர்ன் ஆண்டிஸ் (Cretaceous deposits of northern andes) என்ற ஆய்வை செய்து முனைவர் பட்டம் பெற்றார். துலேர் (Tulare),

எண்ணெய் வளத்தைப் பற்றி அறிந்த ஆய்வாளர்! ரால்ப் அர்னால்ட்

படம்
  ரால்ப் அர்னால்ட் ( 1875-1961) அர்னால்ட், ஐயோவா மாகாணத்தின் மார்ஷ்மாலோ டவுனில் பிறந்தார். பெற்றோர் டெலோஸ் அர்னால்ட் - ஹன்னா ரிச்சர்ட்சன் மெர்சர். டெலோஸ் வழக்கறிஞராக பணியாற்றியவர், பின்னாளில் செனட் சபையில் பிரதிநிதியாக செயல்பட்டார்.  அர்னால்ட், த்ரூப் பாலிடெக்னிக் பள்ளி மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார். சான் பெட்ரோ எனும் பகுதியில் பிளியோசீன் காலகட்ட படிமங்களை டெலோஸூம், அர்னால்டும் சேகரித்தனர். அர்னால்ட், 1900இல் கலிஃபோர்னியா புவியியல் ஆய்வு அமைப்பில் களப்பணி உதவியாளரானார்.  இதுபற்றிய கட்டுரையையும் 1903ஆம் ஆண்டு ஜூன் 27இல் அறிவியல் கழகத்தின் வழியே எழுதி வெளியிட்டார்.  1908ஆம் ஆண்டு புவியியலாளராக அங்கீகாரம் பெற்று, கலிஃபோர்னியாவிலுள்ள 4,234 சதுர மைல்களை எண்ணெய் வளம் உள்ளது என கண்டறிந்தனர். ஸ்ட்ராடிகிராபி எனும் பாறை அடுக்குகளை ஆராயும் முறையை முறைப்படுத்தியவர், ரால்ப் அர்னால்ட்தான். கலிஃபோர்னியாவில் ஷேல் எனும் வகை பாறை அமைப்பை கண்டறிந்து எண்ணெய் வளத்தைப் பற்றிய தகவல் கொடுத்தவர் இவரே.  https://archives.datapages.com/data/bull_memorials/045/045011/pdfs/1897.htm

அமெரிக்க பெண்ணின் இந்திய தெய்வ முரண்பாடுகளைப் பற்றிய அனுபவத் தொகுப்பு! நூல் புதுசு

படம்
  அமெரிக்கன் கேர்ள் இன் இந்தியா லெட்டர்ஸ் அண்ட் ரீகலெக்ஷன்ஸ் 1963-64 வெண்டி டோனிகர் ஸ்பீக்கிங் டைகர் கல்கத்தாவிற்கு முதன்முறையாக டோனிகர் வரும்போது அவரின் வயது 23. அங்குதான் சிவன், விஷ்ணு கோவில்களில் இருந்த முரண்பாட்டைப் பார்த்தார். காமமும், தூய்மையும் கலந்த வடிவம் அவரை ஈர்த்தது. இந்த நூலில் உள்ள கடிதங்கள் அனைத்துமே இதுதொடர்பாக அவர் எழுதியவையாகும். இந்துமதம், அதன் மூடநம்பிக்கைகள் பற்றி முன்னமே வெண்டிகர் நூல்களை எழுதியுள்ளார்.  டு ரைஸ் எ ஃபாலன் பீப்புள் - ஹவ் நைன்டீன்த் சென்சுரி இண்டியன்ஸ் சா தேர் வேர்ல்ட் அண்ட் ஷேப்டு அவர்ஸ்  ராகுல் சாகர்  ஜக்கர்நட் பழைய சிந்தனைகளை, தாக்கங்களை முன்வைக்கும் நூல்தான் இது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியர்கள் எப்படி யோசித்தார்கள், மதம், வணிகம், உலக நாடுகளுடனான உறவு ஆகியவற்றை பற்றி பல ஆளுமைகள் பேசிய, எழுதிய கருத்துகளை நூல் தொகுத்துள்ளது.  தி பீப்புள் ஆஃப் தி இண்டஸ்  பெங்குவின்  இது ஒரு கிராபிக் நாவல். நிகில் குலாத்தி, ஜொனாதன் மார்க் கெனோயெராஸ்க் நூலில் நிறைய கேள்விகளை உருவாக்கியிருக்கிறார்கள். சிந்து சமவெளி மக்கள் யார், அவர்கள் வாழ்க்கை எப்படி முடிவுக்கு வ

அறிவியல் முறைகளைக் கண்டுபிடித்த தியோடர் ஸ்க்வான்!

படம்
  தியோடர் ஸ்க்வான் தியோடர் ஸ்க்வான் (theodor schwann 1810 - 1882) 1810ஆம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள நியூயஸ் என்ற நகரில் பிறந்தார். அச்சுத்தொழில் செய்துவந்த லியோனார்ட் ஸ்ச்வான் என்பவருக்கு நான்கு மகன். 1834ஆம்  ஆண்டு மருத்துவராக பட்டம் பெற்றார். ஜோகன்னஸ் முல்லர் என்ற தனது பேராசிரியருக்கு ஆராய்ச்சியில் உதவியாளராக இணைந்தார்.  நுண்ணோக்கியில் ஏற்பட்டு வந்த பல்வேறு முன்னேற்றங்களை கவனித்து வந்தார் தியோடர். பொருட்களை பதப்படுத்துதலில் ஈஸ்டின் பங்களிப்பு  பற்றிய ஆய்வின் முன்னோடி.  இவருக்குப் பிறகுதான் நோய்க்கிருமிகள் பற்றி பிரெஞ்சு நுண்ணுயிரியாளர் லூயிஸ் பாஸ்டர் ஆராய்ச்சி  செய்து சாதித்தார்.  இதைத் தவிர செரிமானத்திற்கு உதவும் என்சைம்கள், தசை மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றின் பணிகளை ஆராய்ந்து வந்தார். வயிற்றில் செரிமானத்திற்கு உதவும் வேதிப்பொருளான பெப்சினைக் கண்டறிந்தார். விலங்கின் திசுக்களிலிருந்து பெறப்பட்ட முதல் என்சைம் இதுவே.    லீஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் வாய்ப்பை ஏற்றார்.  இவர் கண்டுபிடித்த பல்வேறு அறிவியல் முறைகளுக்காக இன்றும் பேசப்பட்டு வருகிறார். 1839ஆம் ஆண்டு நுண்ணோக்கி

கனவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்காதீர்கள்!

படம்
நேர்காணல் ஜிம் அல் கலீலி, க்வாண்டம் இயற்பியலாளர்(சர்ரே பல்கலைக்கழகம், இங்கிலாந்து) நீங்கள் வளரும்போது என்னவாக ஆசைப்பட்டீர்கள்? நான் முதலில் கண்டுபிடிப்பாளராக மாறவே ஆசைப்பட்டேன். பிறகு ராக் இசைக்கலைஞனாக விரும்பினேன். கால்பந்து அணிக்கு விளையாட நினைத்தேன். நீங்கள் யாருக்கேனும் அறிவுரை சொல்ல வேண்டுமென்றால் என்ன சொல்லுவீர்கள்? நான் என் மனைவி ஜூலியைத் திருமணம் செய்தபோது எனக்கு பொருளாதார நெருக்கடி இருந்தது. அதைப்பற்றி நான் பேசியபோது, நீ அதைப்பற்றி கவலைப்படாதே, உன் கனவுகளைப் பின்பற்றி செல். நாம் இந்த கஷ்டங்களைச் சமாளித்துக்கொள்ளலாம் என்று கூறினார். அதனால்தான் நான் முனைவர் படிப்பை படிக்க முடிந்தது. நான் பெற்ற பிறருக்குச் சொல்ல விரும்பும் அறிவுரையும் இதுதான். நீங்கள் செய்யும் பணியை எளிமையாகச் சொல்லுங்கள் பார்ப்போம். நான் ஒரு கண்டுபிடிப்பாளன். பயணியும் கூட. அறிவியல் முடிவுகளை சிந்தனைகளை மக்களிடம் கூற முயற்சிக்கிறேன். நான் ஒரு க்வாண்டம் இயற்பியலாளர். அவ்வளவுதான். உயிருடன் இருப்பவரோ இறந்தவரோ விஞ்ஞானி ஒருவரைச் சந்திக்கவேண்டும். யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்.  ஆல்பர்ட் ஐன்