எண்ணெய் வளத்தைப் பற்றி அறிந்த ஆய்வாளர்! ரால்ப் அர்னால்ட்

 





ரால்ப் அர்னால்ட் (
1875-1961)

அர்னால்ட், ஐயோவா மாகாணத்தின் மார்ஷ்மாலோ டவுனில் பிறந்தார். பெற்றோர் டெலோஸ் அர்னால்ட் - ஹன்னா ரிச்சர்ட்சன் மெர்சர். டெலோஸ் வழக்கறிஞராக பணியாற்றியவர், பின்னாளில் செனட் சபையில் பிரதிநிதியாக செயல்பட்டார். 

அர்னால்ட், த்ரூப் பாலிடெக்னிக் பள்ளி மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார். சான் பெட்ரோ எனும் பகுதியில் பிளியோசீன் காலகட்ட படிமங்களை டெலோஸூம், அர்னால்டும் சேகரித்தனர். அர்னால்ட், 1900இல் கலிஃபோர்னியா புவியியல் ஆய்வு அமைப்பில் களப்பணி உதவியாளரானார்.  இதுபற்றிய கட்டுரையையும் 1903ஆம் ஆண்டு ஜூன் 27இல் அறிவியல் கழகத்தின் வழியே எழுதி வெளியிட்டார். 

1908ஆம் ஆண்டு புவியியலாளராக அங்கீகாரம் பெற்று, கலிஃபோர்னியாவிலுள்ள 4,234 சதுர மைல்களை எண்ணெய் வளம் உள்ளது என கண்டறிந்தனர். ஸ்ட்ராடிகிராபி எனும் பாறை அடுக்குகளை ஆராயும் முறையை முறைப்படுத்தியவர், ரால்ப் அர்னால்ட்தான். கலிஃபோர்னியாவில் ஷேல் எனும் வகை பாறை அமைப்பை கண்டறிந்து எண்ணெய் வளத்தைப் பற்றிய தகவல் கொடுத்தவர் இவரே. 


https://archives.datapages.com/data/bull_memorials/045/045011/pdfs/1897.htm

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்